(Source: ECI/ABP News/ABP Majha)
Maanaadu: இந்தியில் ரீமேக் ஆகும் மாநாடு ... சிம்பு கேரக்டரில் நடிக்கப்போவது யார் தெரியுமா?
இந்தியில் ரீமேக் ஆகும் சிம்புவின் மாநாடு - பாகுபலி நடிகர் சிம்புவாக நடிக்க ஒப்புதல்
இந்தியில் ரீமேக் ஆகும் சிம்புவின் மாநாடு படத்தில் ராணா நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
கடந்த 2021ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு மற்றும் எஸ். ஜே. சூர்யா நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் வெற்றி பெற்றது. அரசியலையும் டைல் லூப் முறையிலும் கதைக்களத்தை கொண்ட மாநாட்டில், சிம்பு உடன் கல்யாணி பிரியதர்ஷன், கருணாகரன், எஸ்.ஏ.சந்திரசேகர், YG மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
கதை களத்தில் மீண்டும் மீண்டும் சிம்பு உயிருடன் வருவதால் கோபப்படும் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு அனைவரையும் பேச வைத்தது. வந்தான்....சுட்டான்....செத்தான்..., தலைவரே தலைவரே போன்ற டயலாக் டிரெண்டாகும் அளவுக்கு ரசிக்கப்பட்டது. மாநாட்டில் அப்துல் காலீக் என்ற கேரக்டரில் நடித்த சிம்பு, சிறுபான்மையினரை தவறான கண்ணோட்டத்தில் காட்டுவதை நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருப்பார்.
நீண்ட நாட்களாக படங்கள் கொடுக்காமல் இருந்த சிம்புவுக்கு மாநாடு ஒரு கம்பேக் படமாக இருந்தது. மாநாடு வெற்றியை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட அதிரடி ஆக்ஷன் படங்களை கொடுத்து சிம்பு அசத்தினார். இந்த நிலையில் சிம்பு நடித்த மாநாடு பாலிவுட் திரையுலகில் ரீ-மேக் செய்யப்படுகிறது. இந்தி மற்றும் தெலுங்கில் உருவாகும் மாநாட்டில் பிரபல இந்தி நடிகர் வருண் தவான் நடிக்க இருப்பதாக பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், தற்போது மாநாடு ரீமேக்கில், பாகுபலியில் கலக்கிய ராணா நடிக்க உள்ளதாகவும், வில்லன் கேரக்டரில் நடிக்க ரவிதேஜாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
முதலில் மநாட்டின் இந்தி ரீமேக்கை வெங்கட் பிரபு எடுப்பார் என கூறப்பட்டது. ஆனால், விஜய் நடிக்கும் 68 படத்தில் வெங்கட் பிரபு பிசியாக இருப்பதால், மாநாடு ரீமேக்கிங்கை இயக்குனர் பிரவீன் சட்டாரு எடுப்பார் என கூறப்படுகிறது. ராணாவின் தந்தையின் தயாரிப்பு நிறுவனமான சுரேஷ் புரொடெக்ஷன் மாநாடு ரீமேக்கிங்கை தயாரிக்க உள்ளது. இதனால் இப்படம் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.