Watch Video | மாலை டம் டம் மஞ்சளும் டம் டம்.. ராணா - மிஹீகாவின் லிப்லாக்கும், திருமணமும்.. வைரல் வீடியோ
Rana Daggubati Miheeka Bajaj Wedding video | நடிகர் ராணா தனது மனைவி மிஹீகா பஜாஜ்ஜூக்கு முத்தமிடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராணா. தமிழில் பெங்களூர் டேஸ், பாகுபலி, காடன் உள்ளிட்ட படங்களில் நடித்ததின் மூலம் பிரபலமானார். நீண்ட காலமாக பேச்சுலராக இருந்த ராணா,கடந்த வருடம் இன்டீரியர் டிஸைனரான மிஹீகா பஜாஜ்ஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அப்போது கொரோனா பரவல் அதிகமிருந்ததால் ராணா மற்றும் மிஹீகா பஜாஜ் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இந்த நிலையில் தற்போது மிஹீகா பஜாஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திருமண வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், ராணா, மிஹீகா இருவரும் மணக்கோலத்தில் திருமணம் தயாராகும் காட்சிகள், ராணா மிஹீகாவுக்கு தாலி கட்டுவது, முத்தமிடுவது உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை தற்போது வரை 70,000 த்துக்கும் மேலானோர் பார்த்துள்ளனர்.
View this post on Instagram
ராணா பிரபலத் தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகன் என்பதும் இவரது தாத்தா ராமாநாயுடுவும் தெலுங்குத் திரையுலகில் மிகப்பெரிய தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகும் கமல்.. அவருக்கு பதில் இவரா? செம்ம எதிர்பார்ப்பு: படிக்க >> https://t.co/Zj8ROR0HYA#BiggBoss #KamalHaasan #shrutihassan
— ABP Nadu (@abpnadu) November 23, 2021