Vettaiyan Second Single : அதுக்குள்ள வேட்டையன் அடுத்த பாட்டா..: இன்னும் மனசிலாயோ ஜூரமே குறையல...
ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இரண்டாவது பாடலின் மேக்கிங் வீடியோவை அனிருத் வெளியிட்டுள்ளார்.

வேட்டையன்
த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10 வெளியாக இருக்கிறது. இப்படத்தை திரையரங்குகளில் பார்க்க ரசிகர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். ஜெயிலர் திரைப்படத்தைப் போலவே வேட்டையன் படமும் ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக சமீபத்தில் வெளியான மனசிலாயோ பாடல் வேட்டையன் படத்திற்கு பான் இந்திய ப்ரோமோஷனாக அமைந்துள்ளது. தமிழ், இந்தி , தெலுங்கு , மலையாளம் என எல்லா மொழி ரசிகர்களும் இந்த பாடலுக்கு வைப் செய்து வருகிறார்கள். யூடியூபில் இப்பாடல் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. மனசிலாயோ பாடலை வைத்து மட்டும் சமூக வலைதளத்தில் 1 லட்சம் 50 ஆயிரம் ரீல்ஸ் பதிவிடப்பட்டிருக்கின்றன.
#HunterVantaar , next song from #Vettaiyan from day after 🔥🔥🔥
— Anirudh Ravichander (@anirudhofficial) September 18, 2024
Superstar @rajinikanth 🫡🫡🫡@tjgnan @LycaProductions @SonyMusicSouth
🎤 @siddharthbasrur 🤗
🖋️ @Arivubeing 🤗 pic.twitter.com/13QxZ9sVth
இப்படி இப்பாடல் வைரலாகி வரும் நிலையில் வேட்டையன் படத்தின் அடுத்த பாடலை வெளியிட இருக்கிறது படக்குழு. 'ஹண்டர் வந்துட்டார் ' என்கிற இந்தப்பாடலை பாடும் மேக்கிங் வீடியோவை அனிருத் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஜெயிலர் திரைப்படத்தில் ' டைகர் கா ஹுகும் ' போல் இப்படத்தில் ஹண்டர் வந்துட்டார் . ' ஆனால் ஹுகும் பாடலைப் போல் இல்லாமல் இப்பாடல் முற்றிலும் வேறுபட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

