Actor Rajinikanth in Maldives: மாலத்தீவில் நடிகர் ரஜினிகாந்த் - கடற்கரையில் ரிலாக்ஸாக ஒரு வாக் - வைரலாகும் புகைப்படம்!
Actor Rajinikanth in Maldives: நடிகர் ரஜினிகார்ந்த் மாலத்தீவு கடற்கரையில் ரிலாக்ஸாக நடத்து செல்லும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் ரஜினிகார்ந்த் மாலத்தீவு கடற்கரையில் ரிலாக்ஸாக நடத்து செல்லும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த் - மாலத்தீவு
ரஜினிகாந்த், தொடர் படப்பிடிப்புகள் நிறைவு பெற்றதையெடுத்து பணிகளிலிருந்து சின்ன ப்ரேக் எடுத்துள்ளார். அவர் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள கடற்கரையில் ரஜினிகாந்த் ரிலாக்ஸாக இயற்கையை, அலை கடலை ரசித்தப்படி நடந்து செல்கிறார். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் தலைவர் மாஸ் என்று கொண்டாடி வருகின்றனர்.
டிரெண்டிங்கில் Hukum’ பாடல்
நெல்சன் தீலிப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. படத்தின் இரண்டாவது பாடலான ‘Hukum’ நேற்று (ஜூலை 17) வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது. இதுவரை 7.1 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. ரசிகர்கள் இந்தப் பாடலை கொண்டாடி வருகின்றனர். காவாலயா பாடலும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்தபடத்தைத் தொடர்ந்து அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் ரஜினி நடித்துவந்தார். அதில் அவருக்கான படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. அடுத்து அவர் ‘ஜெய்பீம்’ இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலத்தீவு சுற்றுலா
தொடர் படப்பிடிப்புகள் நிறைவு பெற்றதையடுத்து சின்ன ப்ரேக் எடுத்துள்ள நடிகர் ரஜினிகாந்த் தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு கடற்கரையில் அவர் ரிலாக்ஸாக நடந்து வரரும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியானது. இது சமூக வலைதளங்களில் ரசிகள் மத்தியில் கொண்டாட்டத்துடன் பகிரப்பட்டு வருகிறது.
லால் சலாம்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டு வரும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெய்பீம் ஞானவேல் இயக்கும் படத்தில் ரஜினி நடிக்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படியான நிலையில், ரஜினி தனது மூத்த மகளாக ஐஸ்வர்யா இயக்கத்தில் ‘லால் சலாம்’ படத்தில் நடித்து வருகிறார். 3, வை ராஜா வை படங்களை இயக்கிய ஐஸ்வர்யா நீண்ட இடைவெளிக்குப் பின் இப்படத்தை இயக்கி வருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய இந்த படத்தில் ’மொய்தீன் பாய்’ என்னும் கேரக்டரில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
லால் சலாம் படத்தின் ஷூட்டிங் திருவண்ணாமலை, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கடந்த மே 8 ஆம் தேதி லால் சலாம் படத்தில் நடிக்கும் ரஜினியின் கேரக்டர் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் அடுத்தக்கட்ட அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். கடந்த ஜூலை 1 ஆம் தேதி திருவண்ணாமலை சென்ற ரஜினி, அங்கு அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.
ஜெயிலர் பற்றி சில தகவல்கள்
- கடந்தாண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஜெயிலர் படப்பிடிப்பு தொடங்கியதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
- செப்டம்பர் மாதம் படத்தில் இடம் பெற்றுள்ள தீம் மியூசிக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
- டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாளன்று ரஜினியின் கேரக்டரான முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தின் தோற்றம் அறிமுகம் செய்யப்பட்டது.