Jailer: உத்தரபிரதேச முதலமைச்சருடன் ஜெயிலர் பார்க்க காத்திருந்த ரஜினி...கடைசியில் நடந்த டிவிஸ்ட்!
ஜெயிலரான முத்துவேல் பாண்டியனை திரையரங்கில் பார்க்க படையெடுக்கும் மாநில முதலமைச்சர்கள்..
உத்தரபிரதேச துணை முதலமைச்சருடன் ஜெயிலர் திரைப்படத்தை ரஜினியும், அவரது மனைவியும் பார்த்த புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ஜெயிலர் படம் கடந்த 10-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது. 10 நாட்களுக்குள் ரூ.500 கோடி அளவுக்கு வசூலில் சாதனை படைத்து வருவதால் ஜெயிலர் படத்தை ரஜினி ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் இமயமலை பயணத்தை முடித்துக்கொண்டு வட மாநிலங்களில் இருக்கும் கோவில்களில் ஆன்மீக வழிபாட்டில் ஈடுபட்டு வரும் ரஜினி இன்று உத்தரபிரதேச மாநிலத்தின் துணை முதலமைச்சர் கேஷவ் பிரசாத் மௌரியாவுடன் இணைந்து ஜெயிலர் படத்தை திரையரங்கில் பார்த்துள்ளார்.
முன்னதாக லக்னோவிற்கு சென்றிருந்த ரஜினி உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேலை மரியாதை நிமித்தமாக ராஜ்பவனில் சந்தித்த புகைப்படங்கள் வெளியானது.
प्रदेश की राज्यपाल श्रीमती आनंदीबेन पटेल से आज राजभवन में प्रसिद्ध अभिनेता व निर्देशक श्री रजनीकान्त ने शिष्टाचार भेंट की। pic.twitter.com/Nr3rVHfPwZ
— Governor of Uttar Pradesh (@GovernorofUp) August 19, 2023
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, இன்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உடன் ஜெயிலர் படத்தை பார்க்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.
#WATCH | Actor Rajinikanth in Lucknow on being asked about his visit to Ayodhya tomorrow; says, "Jee kal program hai." pic.twitter.com/naUdniPd3N
— ANI (@ANI) August 19, 2023
அதன்படி, லக்னோவில் உள்ள பிரபலமான திரையரங்கில் ஜெயிலர் படத்தை பார்க்க ஏற்பாடுகள் செய்த நிலையில் திரையரங்கிற்கு வருவதை யோகி ஆத்யநாத் தவிர்த்ததாக கூறப்படுகிறது. இதனால், மாநில துணை முதலமைச்சர் கேஷவ் பிரசாத் மௌரியாவுடன் ரஜினியும், லதா ரஜினிகாந்தும் ஜெயிலர் படத்தை பார்த்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
Our beloved Thalaivar @rajinikanth ji and his family is going to watch #JailerBlockbuster movie soon with Honourable CM, Uttar Pradesh Shri.@myogiadityanath ji pic.twitter.com/UnkAWrTTSz
— Ra.Arjunamurthy | ரா.அர்ஜூனமூர்த்தி (@RaArjunamurthy) August 19, 2023
முன்னதாக ஜெயிலர் படம் ரிலீசான ஒரே வாரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் ஜெயிலர் படத்தை பார்த்து விட்டு ரஜினியையும், படக்குழுவினரையும் வாழ்த்தினர். அந்த வரிசையில் தற்போது உத்திரபிரதேச துணை முதலமைச்சரும் ஜெயிலரான முத்துவேல் பாண்டியனை திரையரங்கிற்கே சென்று பார்த்துள்ளார். பாக்ஸ் ஆபிசில் வசூலை வாரி குவித்து வரும் ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் இணைந்து தமன்னா, ரம்யாகிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன்பிக்சர்ஸ் நடித்துள்ள இந்த படத்துக்கு அனிரூத் இசை அமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்ததும் புரோமோஷனுக்காக ஜெயிலர் படத்தில் இருந்து வெளிவந்த காவாலா, ஹுக்கும் பாடல்கள் டிரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தன.
மேலும் படிக்க: Netflix: யூகிக்க முடியாத காட்சிகள்.. பதற வைக்கும் த்ரில்லர்... நெட்ஃப்ளிக்ஸில் இந்த படங்கள மிஸ் பண்ணாதீங்க..!