மேலும் அறிய

Thalaivar 173 : துரந்தர் மாதிரி கதை கேட்ட ரஜினி..கும்பிடு போட்ட சிபி சக்கரவர்த்தி..தலைவர் 173 இயக்குநர் மீண்டும் மாற்றம்

ராஜ்கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்க இருந்த தலைவர் 173 படத்தின் இயக்குநர் மீண்டும் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

ரஜினிகாந்தின் 173 ஆவது திரைப்படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. முன்னதாக இப்படத்தை சுந்தர் சி இயக்குவதாக அறிவிப்பு வெளியாகி பின் சுந்தர் சி படத்தில் இருந்து விலகினார். இதனை அடுத்து சிபி சக்கரவர்த்தி இப்படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. தற்போது தலைவர் 173 படத்தின் இயக்குநர் மீண்டும் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களேயுள்ளது. அடுத்தபடியாக கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினியின் தலைவர் 173 திரைப்படம் உருவாக இருந்தது. இப்படத்தை சுந்தர் சி இயக்கவிருப்பதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியானது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த படத்தில் இருந்து சுந்தர் சி விலகுவதாக அவரே அறிவித்தார். 

தலைவர் 173 படத்தை இயக்க பல்வேறு இளம் இயக்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இறுதியாக டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இப்படத்தை இயக்குவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் சிறப்பு அறிவிப்பு டீசர் ஒன்றும் வெளியாகி ரசிகர்களிடையே கவனமீர்த்தது. 

தலைவர் 173 இயக்குநர் மீண்டும் மாற்றம் 

இன்னும்  ஒரு சில வாரங்களில் தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த தகவலின்படி தலைவர் 173 படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கப்போவதில்லை என்றும் அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. சிபி சக்கரவர்த்தி ரஜினியிடம் கதை சொல்லி ஓக்கே செய்திருந்தாலும் அவரது திரைக்கதையில் ரஜினிக்கு முழு திருப்தி ஏற்படாததாக கூறப்படுகிறது. துரந்தர் மாதிரி இந்த படத்தின் கதையை மாற்ற ரஜினி கேட்டதாகவும் ஆனால் சிபி சக்கரவர்த்தி மறுத்துவிட்டதால் இந்த படத்தில் இருந்து அவர் விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த இயக்குநர் மாற்றத்திற்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது.  சிபி சக்கரவர்த்தி முன்னதாக தெலுங்கில் நானி நடிக்கவிருந்த  படத்தை இயக்க முன்பணம் வாங்கிவிட்டதாகவும். தற்போது அந்த தெலுங்கு படத்தின் தயாரிப்பாளர் தலைவர் 173 படத்தின் இணை தயாரிப்பாளராக விருப்பம் தெரிவித்துள்ளதாகவும்  ஆனால் ராஜ்கமல் இந்த விருப்பத்தை மறுத்துள்ளதாக கூறப்படுகிறது . 

ரஜினியை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து 

டிராகன் படத்தின் மூலம் கவனமீர்த்த அஸ்வத் மாரிமுத்து முன்னதாக ரஜினியை இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. ரஜினிக்கு அஸ்வத் மாரிமுத்து சொன்ன கதை பிடித்திருந்தாலும் இந்த கதையை எழுதுவதற்கு போதுமான கால அவகாசம் இல்லாததால் அவர் சிம்பு படத்திற்கான பணிகளை துவங்கினார். தற்போது சிபி சக்கரவர்த்தி தலைவர் 173 படத்தில் இருந்து விலகியதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் அஸ்வத் மாரிமுத்துவை மீண்டும் அனுகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget