தனுஷ் நல்ல மகன்.. நல்ல மாப்பிள்ளை.. மீண்டும் வைரலாகும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வீடியோ
தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்பு கடந்த சில நாள்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்த் தனுஷ் குறித்து புகழ்ச்சியாகப் பேசிய பழைய வீடியோ பதிவு ஒன்று வைரலாகியுள்ளது.

நடிகர் தனுஷ் - இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தம்பதியின் விவாகரத்து அறிவிப்பு கடந்த சில நாள்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு, இணையத்தில் வைரலாகப் பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்த் தனுஷ் குறித்து புகழ்ச்சியாகப் பேசிய பழைய வீடியோ பதிவு ஒன்று வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமா மட்டுமின்றி, பாலிவுட், ஹாலிவுட் ஆகியவற்றிலும் நடித்து வரும் நடிகர் தனுஷ், கடந்த 2004ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்தகொண்டார். இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் தங்கள் திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்வதாக கூட்டாக சமூக வலைத்தளங்களின் மூலமாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

ரசிகர்கள் பலரும் இந்த அறிவிப்பு குறித்து ரஜினிகாந்த் தலையிட்டு, மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இணையத்தில் கூறி வந்தனர். எனினும் இந்த அறிவிப்பில் எந்த மாற்றமும் ஏற்படாத நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, `காலா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், படத்தின் தயாரிப்பாளராக இருந்த தனுஷ் குறித்து பேசிய வீடியோ பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
Apart From Trolls. Feeling sad For Rajini. Stay Strong 🙏 #Dhanush #DhanushDivorce #Divorce @dhanushkraja#Beast #Thalapathy66 @actorvijay pic.twitter.com/3brl7XYWNu
— பாண்டி💙❤💚 (@PandiyanKpm) January 18, 2022
இந்த வீடியோவில் ரஜினிகாந்த், `தனுஷ் என்னுடைய மாப்பிள்ளை என்பதற்காக சொல்லவி்லலை; அவர் ஒரு அருமையான பையன். அப்பா அம்மாவை மதிக்கிறார். பெற்றோர்களைத் தெய்வமாக கருதுகிறார். மனைவியை நன்றாகப் பார்த்துக் கொள்கிறார். தனுஷ் ஒரு நல்ல அப்பா; நல்ல மாப்பிள்ளை; நல்ல மனிதர்; நல்ல திறமைசாலி’ எனப் புகழ்ந்து பேசியுள்ளார்.

இந்நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியினர் பிரியவில்லை எனவும், அவர்களுக்குள் நிகழ்ந்து கொண்டிருப்பது குடும்பச் சண்டை எனவும், இதற்காக விவாகரத்து நடக்காது எனவும் நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா கூறியிருந்தார். மேலும், விவாகரத்தை அறிவித்த தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் ஹைதராபாத்தில் ஒரே ஹோட்டலில் தற்போது தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. தனுஷ் தற்போது நடித்து வரும் நேரடி தெலுங்கு படமான `வாத்தி' படத்திலும், ஐஸ்வர்யா ஒரு காதல் பாடலைப் படமாக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

