Rajinikanth Next Movie: தகிட..தகிட.. ரஜினி - நெல்சன் - அனிருத்.! நாளை வெளியாகும் அறிவிப்பு.. குஷியில் ரஜினி ரசிகர்கள்!
இன்னும் பெயரிடப்படாத இந்தப்படத்தை ரசிகர்கள் “தலைவர்169” என்று அவரது ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.
ரஜினிகாந்தின் அடுத்தப்படம் தொடர்பான தகவல்கள் தினம் தினம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவா இயக்கத்தில் அண்ணாத்த படம் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியானது. அடுத்தப்படத்தை எந்த இயக்குநருக்கு ரஜினி கொடுக்கப்போகிறார் என பல யூகங்கள் இருந்த நிலையில் நெல்சன் பெயர் அடிபட்டது. நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிக்கிறார். இதுவும் வழக்கமான நகைச்சுவை நிறைந்த நெல்சன் படமாகவே இருக்கும் என தகவல் வெளியானது.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் அல்லது மே மாத இறுதியில் தொடங்கும் என்றும், படம் வருகிற டிசம்பர் மாதம் அல்லது அடுத்து வருட ஜனவரி மாதம் திரைக்கு வரும் எதிர்பார்க்கப்படுவதாகவும் பல இணையதளங்கள் செய்தி வெளியிட்டன. அந்த தகவலின் அடுத்த அப்டேட் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அதன்படி, ரஜினி நடிக்கும் 169 வது படத்தை நெல்சன் தான் இயக்கவுள்ளதாகவும், அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் அதிகாரபூர்வ தகவல் நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. நாளை ரஜினி படத்தின் அப்டேட் என்ற தகவல் ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
இன்னும் பெயரிடப்படாத இந்தப்படத்தை ரசிகர்கள் “தலைவர்169” என்று அவரது ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். கொரோனா சூழ்நிலைகளை பொறுத்து, 5 முதல் 6 மாதங்களில் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அவரது 170 வது படத்திற்காக இயக்குநர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். 169 ஆவது படத்தை முடிப்பதற்குள் ரஜினிகாந்த் 170 படத்தை தேர்வு செய்வதற்கான வேலைகளை முடித்துவிட திட்டமிட்டிருக்கிறாராம்.
கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார், தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் இயக்குநர் செல்வராகவன், கிங்ஸ் லீ உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். விறுவிறுப்பாக நடந்து வந்த பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. அப்போது விஜய்யுடன் நெல்சன் எடுத்துக்கொண்ட புகைப்படமும், பீஸ்ட் படத்தின் செட் புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகின.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்