Thalaivar 173 Director: அப்படிப்போடு.. ரஜினியின் அடுத்தப் படத்தின் இயக்குநர் இவரா!
Thalaivar 173 Director Name: நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் தனது 173வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நடிகர் ரஜினியின் 173வது படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்விக்கு நாளை (ஜனவரி 3) விடை கிடைத்து விடும். அதற்கான அறிவிப்பு வெளியாவது குறித்து ராஜ்கமல் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கூலி படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தின் அடுத்தப்படமான ஜெயிலர் 2 படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இப்படம் 2026ம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படியான நிலையில் எதிர்பாராதவிதமாக ரஜினியின் 173வது படத்தை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவுள்ளதாக 2025ம் ஆண்டு கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 6ம் தேதி வெளியானது.
ALAPPARA KELAPPAROM 🔥#Arambikalama #Thalaivar173 #SuperStarPongal2027 @rajinikanth @ikamalhaasan #Mahendran @RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/sGSG9LkEZG
— Raaj Kamal Films International (@RKFI) January 2, 2026
அப்போது இந்த படத்தை சுந்தர்.சி இயக்குவார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அடுத்த சில வாரங்களில் இந்த படத்தில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக சுந்தர்.சி அறிவித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் திட்டமிட்டபடி ரஜினிகாந்த் - கமல்ஹாசன் படம் உருவாகுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் ரஜினியை திருப்திப்படுத்தும் வகையில் யார் வேண்டுமானாலும் கதை சொல்லலாம் என கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.
அதன்படி இளம் இயக்குநர்களான பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், டிராகன் பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து உள்ளிட்ட பெயர்கள் அடிபட்டன. ரஜினியும் கடந்த சில ஆண்டுகளாக இளம் இயக்குநர்களுடன் இணைய ஆர்வம் காட்டி வருவதால் யாருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரஜினி 173 பட இயக்குநர் இவரா?
இந்த நிலையில் ரஜினியின் 173வது படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. ஜனவரி 3ம் தேதி காலை 11 மணிக்கு அப்டேட் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இயக்குநர் யார் என அறிவிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப் பதிவில், “அலப்பறை கெளப்புறோம்” என்ற கேப்ஷன் இடம் பெற்றுள்ளது. அதன்படி பார்த்தால் ரஜினியை வைத்து ஜெயிலர் மற்றும் ஜெயிலர் 2 படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமாராக இருக்கலாம் என பலரும் கணித்துள்ளனர். அதேசமயம் வெளியாகியுள்ள போஸ்டரை அடிப்படையாக கொண்டு ராம்குமார் பாலகிருஷ்ணன், அஸ்வத் மாரிமுத்து, டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி ஆகியோராகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது. எது எப்படியோ தலைவர் ரஜினிகாந்த் - உலகநாயகன் கமல்ஹாசன் கூட்டணி மஜாவாக இருக்கும் என ரசிகர்கள் ஆர்ப்பரித்துள்ளனர்.





















