ஆத்தாடி... ஆனது அண்ணாத்த.... 40 லட்சம் பார்வையாளர்களை கடந்தது டீசர்!
ரஜினியின் நடை, ஸ்டைல், வசனம் என ஒவ்வொன்றும் நன்றாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ படத்தின் டீசர் 40 லட்சம் பார்வையாளர்களை கடந்து, யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது.
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிக்கப்பட்டு, தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தீபாவளி வெளியீடாக திரைக்கு வர உள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் பார்வையும், மோஷன் போஸ்டரும் கடந்த 10ஆம் தேதி வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
#AnnaattheAnnaatthe - The first single from #Annaatthe is here: https://t.co/30YYUr8vgy@rajinikanth @directorsiva #SPBalasubrahmanyam #Nayanthara @KeerthyOfficial @immancomposer @Viveka_Lyrics @AntonyLRuben @dhilipaction @vetrivisuals #PremRakshith #AnnaattheFirstSingle
— Sun Pictures (@sunpictures) October 4, 2021
இதனைத்தொடர்ந்து, கடந்த 4ஆம் தேதி ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் அறிமுக பாடல் வெளியானது. இந்த பாடலை மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். அதன்பின், இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியானது. ஸ்ரேயா கோஷல், சித் ஸ்ரீராம் குரலில் மொலோடி பாடலான இதில், ரஜினிகாந்த் நயன்தாராவுடன் டூயர் பாடியுள்ளார்.
The much-awaited #AnnaattheTeaser is here:
— Sun Pictures (@sunpictures) October 14, 2021
▶️ https://t.co/MPUZxEvDnw@rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @prakashraaj @IamJagguBhai @khushsundar #Meena @sooriofficial @actorsathish @AntonyLRuben @dhilipaction @vetrivisuals #Annaatthe
இந்த நிலையில், அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த படத்தின் டீசர் நேற்று வெளியானது. அதிரடியாகவும், மாஸாக உள்ள டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ரஜினியின் நடை, ஸ்டைல், வசனம் என ஒவ்வொன்றும் நன்றாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். டீசர் வெளியாகி 12 மணி நேரத்தில் 40 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. அத்துடன் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்