மேலும் அறிய

Watch Video: அண்ணாத்த ‛ஓப்பனிங்’ பாடலை ஓராண்டிற்கு முன்பே ரிலீஸ் செய்த இந்த ‛கிங் மேக்கர்’ யார்?

சிவா சார் படத்துல தலைவர் கூட அண்ணாத்த அண்ணாத்த... அதிரடி சரவெடி... என்கிற பாடலுக்கு தலைவர் கூட ஆடிட்டு வந்திருக்கேன்... என்னை இங்கே யாருக்கும் தெரியல...’ என அவர் ஒரு பாடலை பாடி, ஆடியும் காட்டினார். 

தீபாவளி நெருங்க நெருங்க... அண்ணாத்த அப்டேட் தான் வைரல். இன்று மாலை அண்ணாத்த ட்ரெய்லர் வெளியாகிறது. சில வாரங்களுக்கு முன் பஃர்ஸ்ட் சிங்கிளில் தொடங்கி, அடுத்தடுத்து பாடல்களை ரிலீஸ் செய்து தீபாவளியை நெருக்கி செய்திருக்கிறது சன் பிக்சர்ஸ். 

சிவா இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் அண்ணாத்த, ரஜினியின் சினிமா பயணத்தில் முற்றிலும் மாறுபட்ட படமாக இருக்கும் என கூறப்படுகிறது. 

Watch Video: அண்ணாத்த ‛ஓப்பனிங்’ பாடலை ஓராண்டிற்கு முன்பே ரிலீஸ் செய்த இந்த ‛கிங் மேக்கர்’ யார்?

கடந்த 1 மாதமாக அடுத்தடுத்த அப்டேட்டுகளால் அலற விடும் அண்ணாத்த படத்தை ஒருவர் ஓர் ஆண்டுக்கு முன் அலற விட்டது எத்தனை பேருக்கு தெரியும்.  அண்ணாத்த படத்தில் ரஜினியின் துவக்கப்பாடலாக கூறப்படும் அண்ணாத்த அண்ணாத்தா... பாடல் கடந்த அக்டோபர் 4ம் தேதி வெளியானதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் அது பொய். 2020ல் அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியானதும், அன்றைய தினம் ரஜினியின் தர்பார் படம் வெளியானதும் எத்தனை பேருக்கு தெரியும். 

தர்பார் வெளியான முதல் நாளில் ரசிகர்களின் ரியாக்ஷன் பார்ப்பதற்காக பல யூடியூப் சேனல்கள் மைக்கோடு தியேட்டர் வாசலில் நின்று கொண்டிருக்க, ஆதன் தொலைக்காட்சி என்கிற யூடியூப் சேனலுக்கு மட்டும் அந்த அதிர்ஷ்டம் கிடைத்தது. கருப்பு ஆடையோடு வந்த ஒரு ரசிகர், மகிழ்ச்சி வெள்ளத்தில் பேசத் தொடங்கினார். ‛நான் இங்கு தினமும் வருகிறேன்.... என்னை இங்கு யாருக்கும் தெரியவில்லை... நான் இப்போ தான் தலைவர் கூட ஆடிட்டு வர்றேன்... சிவா சார் படத்துல தலைவர் கூட அண்ணாத்த அண்ணாத்த... அதிரடி சரவெடி... என்கிற பாடலுக்கு தலைவர் கூட ஆடிட்டு வந்திருக்கேன்... என்னை இங்கே யாருக்கும் தெரியல...’ என அவர் ஒரு பாடலை பாடி, ஆடியும் காட்டினார். 

ஆனால் அப்போது அந்த உலகம், அவரை கேலியும் கிண்டலுமாக தான் பார்த்தது. பொதுவாக ஓப்பனிங் ஷோ அன்று ரசிகர்கள் இப்படி தான் உற்சாக மிகுதியில் இருப்பார்கள். இதுவும் அப்படியான ஒன்று தான் என்று அனைவரும் கடந்து சென்றார். ‛நம்புங்கய்யா... நானும் ரவுடி தான்... நானும் ரவுடி தான்...’ என அந்த மனுஷன் கெஞ்சாத குறையா கெஞ்சியும் யாரும் நம்பவில்லை. 

ஆனால் அண்ணாத்த முதல் சிங்கிள் வந்த பிறகு தான் இந்த உலகம், அந்த உத்தமரை உணர்ந்தது. 2021 அக்டோபர் 4 ம் தேதி வெளியான பாடலை, 2020 ஜனவரி 9 ம் தேதியே ரிலீஸ் செய்து பெருமைக்கு சொந்தகாரர், இந்த பெயர் தெரியாத பெஸ்ட் மேன் தான். அசால்ட்டாக சூப்பர் ஸ்டாரின் பாடலை ரிலீஸ் செய்த அந்த நடனக்கலைஞரின் காட்சிகள், அந்த லிரிக் வீடியோவில் இடம் பெற்றிருப்பது தான் இன்னும் சிறப்பு.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget