Coolie: படமே ரிலீஸ் ஆகலை.. வசூல் மன்னனாக மாறும் ரஜினி.. சன் பிக்சர்ஸ் போட்ட பிளான் சக்ஸஸ்
பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியிருக்கும் கூலி திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமம் பல கோடி கணக்கில் விற்பனையாகியுள்ளது. இதனால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு பணமழை அடித்திருப்பதாக கூறப்படுகிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் கூலி. இப்படம் குறித்த அறிவிப்பு வெளியானபோதே ஜெயிலர் படத்தை போன்ற எதிர்பார்ப்பும் அதிகரிக்க செய்தது. ஜெயிலர் படத்தின் வெற்றி கொடுத்த ஊக்கம் ரஜினிகாந்த் அடுத்த படத்திற்கு தயராகிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினியுடன் சத்யராஜ் இணைந்து நடித்திருப்பதை மிகப்பெரிய பிளஸ் ஆக பார்க்கப்படுகிறது.
பெரிய பட்ஜெட்
ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினி நடிக்கும் கூலி, ஜெயிலர் 2 படங்களை தயாரித்துள்ளது. கிட்டத்தட்ட கூலி படத்தின் படப்பிடிப்பு முடிந்து வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர இருப்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். முன்னதாக வெளியான டைட்டில் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோன்று அனிருத் இசையில் பட்டையை கிளப்பியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
நட்சத்திர பட்டாளங்கள்
கூலி படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், படப்பிடிப்பின் 100 நாள் கொண்டாட்டத்தை வீடிேயாவாக வெளியிட்டு ரசிகர்களுக்கு இயக்குநர் ஹிண்ட் கொடுத்திருந்தார். இதில் ரஜினிகாந்தின் லுக்கை பார்த்து தளபதி கெட்டப்பை ரீ கிரியேட் செய்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர். இப்படத்தில் அமீர் கான், நாகர்ஜூனா, செளபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், உபேந்திரா, ரெபா மோனிகா ஜான் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். நாகர்ஜூனா இப்படத்தில் வில்லனாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தை போன்றே இப்படமும் மல்டி ஸ்டார் ரேஞ்சில் படம் உருவாகியுள்ளது. வணிக ரீதியாக 1000 கோடியை தொடும் முதல் படமாக கூலி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
81 கோடிக்கு விற்பனை
படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வரும் நிலையில், கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இப்படத்தின் வெளிநாட்டு உரிமம் ரூ.81 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாடுகளில் அதிக தொகைக்கு விற்கப்பட்ட முதல் தமிழ் படம் கூலி என்ற பெருமையை பெற்றிருக்கிறது. இதேபோன்று பிற மாநில விநியோகஸ்தர்களிடமும் அதிக தொகைக்கு பேசப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஒரே கதை நடிகர்கள் வேறு
தற்போது தமிழ் சினிமாவில் கொலை, கொள்ளை போன்ற காட்சிகளை ஊக்குவிக்கும் விதமாக படங்கள் அதிகம் வெளியாவதாக விமர்சிக்கப்படுகிறது. குறிப்பாக ஸ்டார் நடிகர்கள் நடிக்கும் படங்களில் அதிக வன்முறை காட்சிகள் இருப்பதாகவும் விமர்சிக்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களில் அதிகமாக வன்முறை காட்சிகளோடு போதை, போதை மாத்திரை போன்ற காட்சிகள் அதிகம் இடம்பெறுகிறது. கூலி படத்தில் போதைக்கு பதிலாக தங்கத்தை கடத்துவது போன்று எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. மாடல் ஒன்று தான் சட்டை வேறு என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.அதிக செலவில் படங்கள் வெளியாகும் நிலையில் நல்ல கதை இல்லை என்ற பார்வையும் சினிமா ரசிகர்களிடம் உலாவி வருகிறது. இதை லோகேஷ் கனகராஜ் கவனத்தில் எடுத்துக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டுமாம்.





















