மேலும் அறிய

Leo Trailer: "திருந்தாத ஜென்மங்கள்".. விஜய்யை தாறுமாறாக விமர்சித்த ராஜேஸ்வரி பிரியா.. கடுப்பாகும் ரசிகர்கள்..!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான லியோ ட்ரெய்லரை பார்த்து அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா கொந்தளித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான லியோ ட்ரெய்லரை பார்த்து அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா கொந்தளித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் “லியோ”. இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன், சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, அபிராமி வெங்கடாச்சலம், சாண்டி மாஸ்டர், கௌதம் மேனன், அனுராக் காஷ்யப் என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே கடந்த ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முதல் பாடலான “நா ரெடி” பாடலும் வெளியானது. இந்த பாடலை நடிகர் விஜய் பாடியிருந்தார். இப்பாடல் யூட்யூபில் 100 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது. தொடர்ந்து கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அதிகப்படியான பாஸ் கோரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு காரணமாக பின்னர் இந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து ரசிகர்களை சமாதானப்படுத்த இரண்டாவது பாடலான “பேட் தாஸ்” கடந்த வாரம் வெளியானது. இதனையடுத்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே லியோ படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இந்த படம் ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகளோடு இருப்பதால் வரவேற்பு இருப்பதற்கு மேலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக விஜய் ஒரு இடத்தில் கெட்டவார்த்தை பேசும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதனைக் கேட்ட ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் ஒருகணம் அதிர்ச்சியடைந்தனர். 

முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தனது படத்தில் இப்படி ஒரு விஷயத்தை செய்திருக்ககூடாது என பலரும் தெரிவித்திருந்தனர். படத்தில் சம்பந்தப்பட்ட அந்த வார்த்தை மியூட் செய்யப்படும் என்றாலும் இந்த சம்பவத்தை பலராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இப்படியான நிலையில் லியோ ட்ரெய்லரை பார்த்து அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா கடுமையான பதிவு ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், “லியோ ட்ரைய்லர் பார்த்தேன். விஜய் சுயநினைவோடுதான் நடித்தாரா? விஜய் கெட்ட வார்த்தை பயன்படுத்தியுள்ளது(1.46 நிமிடத்தில்)அவரது தரத்தை மிகவும் குறைத்துள்ளது. பெண்களை இழிவு செய்யும் வார்த்தை விஜய்க்கு வசனமா? திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்? ரசிகர்களை தவறாக வழிநடத்தும் விஜய்க்கு எமது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து கொள்கிறேன். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தகுதியில்லாத இயக்குனர். திரைப்படத் துறை முன்வந்து இதனை எதிர்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget