எஸ்.எஸ்.ராஜமௌலி - மகேஷ் பாபுவின் SSMB29: வில்லன் பிருத்விராஜ் மிரட்டலான தோற்றம் வெளியீடு! தலைப்பு வெளியீட்டு விழா எப்போது?
எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்தப் படத்தில் பிரபல ஹீரோ பிருத்வி ராஜ் வில்லனாக நடிக்கிறார்.

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் வில்லன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் வில்லனாக பிருத்விராஜ் நடிக்கிறார். கதாப்பாத்திரத்திற்கு கும்பா என பெயரிடப்பட்டுள்ளது.
மகேஷ் பாபு நடிக்கும் SSMB29 படத்தின் தலைப்பு வெளியீட்டு விழா வரும் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. படத்தின் தயாரிப்பாளர்கள் தற்போது பிருத்விராஜ் சுகுமாரனின் முதல் தோற்றத்தை வெளியிட்டுள்ளனர். அதில் ஒரு கொடூரமான சூப்பர்வில்லன் மற்றும் முக்கிய எதிரியான கும்பா என்ற கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இந்த போஸ்டரை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட இயக்குநர் ராஜமெளலி, “பிருத்வியுடன் முதல் ஷாட்டை எடுத்த பிறகு, நான் அவரிடம் நடந்து சென்று, நீங்கள் எனக்குத் தெரிந்த மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர். இந்த கொடூரமான, இரக்கமற்ற, சக்திவாய்ந்த எதிரியான கும்பாவுக்கு உயிர் கொடுத்தது ஆக்கப்பூர்வமாக மிகவும் திருப்திகரமாக இருந்தது. நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
After canning the first shot with Prithvi, I walked up to him and said you are one of the finest actors I’ve ever known.
Bringing life to this sinister, ruthless, powerful antagonist KUMBHA was creatively very satisfying.
Thank you Prithvi for slipping into his chair…… pic.twitter.com/E6OVBK1QUS
">
இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் சமீபத்தில் ஹைதராபாத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தலைப்பு வெளியீட்டு நிகழ்வை ராமோஜி பிலிம் சிட்டியில் நடத்துவதாக அறிவித்தனர். நவம்பர் 15 ஆம் தேதி மாலை 6 மணிக்குத் தொடங்கும் நேரடி நிகழ்வு ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.





















