RRR Movie Koelae Promo: நாங்க வந்துக்கிட்டு இருக்கோம்.. நாளை வெளியாகிறது ஆர்.ஆர்.ஆர் படத்தின் கோலே பாடல்..!
ஆர்.ஆர்.ஆர் படத்தின் எண்ட் கிரெடிட் பாடல் நாளை வெளியாக இருப்பதாக படத்தின் இயக்குநர் ராஜமெளலி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
ஆர்.ஆர்.ஆர் படத்தின் எண்ட் கிரெடிட் ( படத்தின் இறுதியில் வரும் பாடல்) பாடலான கோலா வீடியோ பாடல் நாளை வெளியாக இருப்பதாக படத்தின் இயக்குநர் ராஜமெளலி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுருக்கும் பதிவில் கோலா பாடலின் ப்ரோமோவும் இடம்பெற்றிருக்கிறது.
பாகுபலி என்னும் பிரம்மாண்ட படைப்பிற்கு பிறகு அதன் இயக்குநர் ராஜமௌலி கையில் எடுத்திருக்கும் திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. 1920-ஆம் காலக்கட்டத்தில் வாழ்ந்த அல்லுரி சீதா ராமராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இவர்களுடன் ஆலியா பட், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாக இப்படம் தயராக இருக்கிறது.
View this post on Instagram
படத்தின் முன்னோட்டம், மேக்கிங் வீடியோ, ட்ரெய்லர் ஆகியவை மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், படத்தை கடந்த ஜனவரி 7 ஆம் தேதி அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் அதற்குள் நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்ததால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இதனையடுத்து மார்ச் 18 அல்லது ஏப்ரல் 28 ஆம் தேதியில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து படம் மார்ச் 25 ஆம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. முன்னதாக அன்றைய தினம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருந்த டான் திரைப்படம் வெளியாக இருந்த நிலையில், ஆர்.ஆர்.ஆர் படத்திற்காக, படத்தின் ரிலீஸ் தேதியை மே 12 க்கு தள்ளிவைத்தார் சிவகார்த்திகேயன்.