Chandramukhi2 OTT Release: பேய் பட ரசிகர்கள் பாப்கார்னோட ரெடியாகுங்க.. ஓடிடியில் வெளியான ‘சந்திரமுகி 2’!
இரண்டாம் பாகத்தில் சந்திரமுகி, வேட்டையன் கதைகள் இருந்தாலும், முதல் பாகத்தை போன்ற ஆடம்பர பங்களா பாடல்கள், கிளைமேகஸ் காட்சிகள் உள்ளிட்டவை முதல் பாகத்தை போன்று இருந்ததாக ரசிகர்கள் விமர்சித்தனர்.
Chandramukhi2 OTT Release: ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா ரனாவத் நடித்த சந்திரமுகி 2 படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள சந்திரமுகி 2 படம் கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரஜினி, நயன்தாரா, ஜோதிகா நடித்த சந்திரமுகி படத்தை தொடர்ந்து சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. இதில் ராதிகா, வடிவேலு, மகிமா நம்பியார், லஷ்மி மேனன் என பலர் நடித்திருந்தனர்.
முதல் பாகத்தில் சந்திரமுகி கதாபாத்திரம் ஹிட் கொடுத்ததால், இரண்டாம் பாகத்தில் சந்திரமுகியாக கங்கனா ரானாவத் நடித்திருந்தார். வேட்டையன் ராஜாவாக ராகவா லாரன்ஸ் நடித்திருந்தார். படத்தில் பெரிய அளவில் நட்சத்திர பட்டாளங்கள் நடிக்க வைக்கப்பட்டிருந்தனர். இரண்டாம் பாகத்தில் சந்திரமுகி, வேட்டையன் கதைகள் இருந்தாலும், முதல் பாகத்தை போன்ற ஆடம்பர பங்களா பாடல்கள், கிளைமேகஸ் காட்சிகள் உள்ளிட்டவை முதல் பாகத்தை போன்று இருந்ததாக ரசிகர்கள் விமர்சனத்தை முன்வைத்தனர்.
லைகா நிறுவனம் தயாரித்திருந்த சந்திரமுகி 2 படத்துக்கு ஆஸ்கர் விருது பெற்ற எம்.எம். கீரவாணி இசை அமைத்திருந்தார். முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் மிரட்டலான த்ரில்லிங் காட்சிகள் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படம் பெரிதாக ஈர்க்கவில்லை என்றே ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த சூழலில் சந்திரமுகி 2 படம் ஓடிடியில் ரிலீசாகியுள்ளது.
Grab a popcorn 🍿 & enjoy the movie with your family! 🤗✨ #Chandramukhi2 🗝️ OUT NOW on @Netflix_INSouth
— Lyca Productions (@LycaProductions) October 26, 2023
▶️ https://t.co/Hc42o4JWeY#PVasu @offl_Lawrence @KanganaTeam @mmkeeravaani @RDRajasekar #ThottaTharani @editoranthony @film_dn_ @neeta_lulla #RaabtabyRahuls… pic.twitter.com/KemecGCR5N
தற்போது நெட்பிளிக்ஸ் தளத்தில் சந்திரமுகி 2 படம் வெளியாகி ரசிகர்களின் விமர்சனத்தை பெற்று வருகிறது. திரைக்கு சென்று சந்திரமுகி படத்தை பார்க்காதவர்கள் நெட்பிளிக்ஸ் தளத்தில் படத்தை பார்க்கலாம். இதேபோன்று நாளை மறுநாள் அக்.28ம் தேதி சந்திரமுகி 2 படத்துக்கு போட்டியாக திரைக்கு வந்த இறைவன் படமும் ஓடிடியில் நாளை ரிலீசாக உள்ளது. அஹமது இயக்கத்தில் சைகோ கில்லர் பாணியில் எடுக்கப்பட்ட இறைவன் படித்தில் ஜெயம்ரவி, நயன்தாரா மற்றும் நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மேலும் படிக்க: Suriya 43: சூர்யா நடிக்கும் ‘புறநானூறு’.. இணைந்த துல்கர், நஸ்ரியா.. வெளியான அதிகாரப்பூர்வ அப்டேட்!