Radhika Sarathkumar Diwali : ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்.. சிவக்குமார் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய ராதிகா.. வைரல் வீடியோ!
நடிகை ராதிகா சரத்குமார் நடிகர் சிவகுமாரின் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடியுள்ளார்.
நடிகை ராதிகா சரத்குமார் நடிகர் சிவகுமாரின் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடியுள்ளார். அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
View this post on Instagram
1980 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ராதிகா சரத்குமார். அதன் பின்னர் துணை நடிகையாக மாறி அதிலும் முத்திரை பதித்த அவர் அம்மா, தங்கை, வில்லி உள்ளிட்ட பல வேடங்களில் நடித்தார். அதே காலக்கட்டத்தில் முன்னணி நடிகராக இருந்த சரத்குமாருக்கும் இவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்தப்பழக்கம் நாளடைவில் காதலாக மாற, இருவரும் தங்களது முந்தைய திருமண வாழ்கையை விடுத்து திருமணம் செய்து கொண்டனர். இப்போதும் திரைத்துறையில் மிக முக்கியமான இடத்தில் இருக்கும் இந்தத்தம்பதிக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். ராகுலை தவிர்த்து ராதிகாவின் முன்னாள் கணவருக்கு பிறந்த ரேயன் சரத்குமாரும் இவர்களுடன் வசித்து வருகிறார். சரத்குமாரின் முன்னாள் மனைவிக்கு பிறந்தவர் நடிகை வரலட்சுமி அவரது அம்மாவுடன் வசித்து வருகிறார்.
ராதிகா குடும்பத்திற்கு நடிகர் சிவகுமார் குடும்பத்திற்கும் நல்ல நட்பு இருந்து வந்தது. ஆனால் கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த நடிகர் சங்க தேர்தலின் போது நடந்த பிரசாரத்தில் நடிகர் சரத்குமார் சிவகுமாரை கடுமையாக சாடியிருந்தார். அதன் பின்னர் அந்த பந்தத்தில் விரிசல் ஏற்பட்ட நிலையில், காலங்கள் செல்ல அந்த பிரச்னை சரியானதாக தெரிகிறது. இந்த நிலையில்தான் இந்த தீபாவளியை நடிகை ராதிகா சரத்குமார், சிவகுமார் குடும்பத்துடன் கலந்து கொண்டாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார். தென்பாண்டி தமிழே என்ற பின்னணியில் ஒலிக்கும் அந்த வீடியோவில் ராதிகா மருதாணி வைத்துக்கொள்வது, கார்த்தி நடனமாடுவது, சிவகுமார் மற்றும் சூர்யா உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.