Madhavan R | Fun பண்ணியிருக்கோம்.. போலீஸ்லயும் மாட்டியிருக்கோம்.. காதல் நினைவுகளை ரிவீல் செய்த மாதவன்!
”எங்கள் வீட்டில் நான் மூன்றாவதாகத்தான் கவனிக்கப்படுவேன். முதலில் எனது மகன் , இரண்டாவது வீட்டு நாய்கள் மூன்றாவதுதான் நான்”
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் முக்கிய பிரபலமாக அறியப்படுபவர் மாதவன். தற்போது மும்பையில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் சமூக வலைத்தளங்களில் செம ஆக்டிவ். அவ்வபோது செலக்டிவான கதைகளில் நடித்து வரும் மாதவன் , தான் ஒரு சோம்பேறியான நடிகர் என்றே சொல்லிக்கொள்கிறார்.
குடும்பத்துடன் அதிக நேரங்களை செலவிட விரும்பும் மாதவன் சமீபத்தில் பிரபல யூடியூப் நிறுவனத்தின் நேர்காணல் ஒன்றில் சொந்த வாழ்க்கையின் பல சுவாரஸ்ய நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார். மாதவன் 8 வருடங்கள் காதலித்த பிறகு கடந்த 1999 ஆம் ஆண்டு சரிதா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு வேதாந்த் என்னும் மகன் உள்ளார். இந்நிலையில் பேட்டியில் மும்பை குறித்து பேசிய மாதவன், ”கடற்கரை அருகில் இருக்கும் பாறைகள் எங்கள் காதல் கதைகளை சொல்லும்.. நானும் சரிதாவும் காதலித்த சமயங்களில் நெருங்கி பழக வேண்டும் என்பதற்காக இங்கு வருவோம். மற்ற காதலர்களை போலவே நாங்களும் டபுள் டக்கர் பஸ்ஸில் கூச்சலிடுவது, பாறைகளில் அமர்ந்து பேசுவதை செய்திருக்கிறோம். ஒரு முறை போலிஸ் எங்களை “வீட்டுக்கு போங்க “என கண்டித்தும் அனுப்பியிருக்கிறார் என கூறியிருக்கிறார்.
View this post on Instagram
வருடங்கள் ஓடினால் , காதலில் இது போன்ற ஃபன் எலமெண்ட் குறைந்துவிடுமா என கேட்க, அதற்கு பதிலளித்த மாதவன். ”காதலில் ஃபன் எலமெண்ட் எப்போதுமே இருக்கும் ஆனால் அது வயதுக்கு ஏற்ற மாதிரியாக மாறிவிடும் என்றார். மேலும் பிஸினஸ் கிளாஸில் நானும் எனது மனைவியும் சென்றபோது அங்கு நானும் என் மனைவியும் வழக்கம் போல சேட்டைகள் செய்தோம். என்ன ஒன்று நமக்கு குழந்தைகள் வந்த பிறகு முக்கியத்துவம் மாறிவிடுகிறது. எங்கள் வீட்டில் நான் மூன்றாவதாகத்தான் கவனிக்கப்படுவேன். முதலில் எனது மகன் , இரண்டாவது வீட்டு நாய்கள் மூன்றாவதுதான் நான் “ என வேடிக்கையாக பதிலளித்துள்ளார். மாதவன் மற்றும் சரிதா இருவருமே மிகவும் நெருக்கமான நட்பு பாராட்டும் ஜோடிகள் , இவர்கள் இருவரும் அவ்வபோது வெளியிடும் புகைப்படங்கள் பலரின் வரவேற்பை பெறும்.
View this post on Instagram
மாதவன் தனக்கு பிடித்தமான இடங்களை பற்றி கூறுகையில் சென்னை, மும்பை மற்றும் துபாய் என்கிறார். துபாயில் தனது மகன் விக்ராந்திற்கான பயிற்சிகள் அளிக்கப்படுவதால் அங்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளாராம் மாதவன்.