மேலும் அறிய

R.J. Balaji : 'தசாவதாரம்' படம் பார்த்துட்டு ஷோல போய் மாகாபா என்ன சொன்னான் தெரியுமா? ஆர்.ஜே. பாலாஜி பகிர்ந்த ஸ்வாரஸ்யம்

R.J. Balaji : சிங்கப்பூர் சலூன் புரொமோஷனுக்கு போன ஆர்.ஜே. பாலாஜி, 'தசாவதாரம்' படம் பார்த்துவிட்டு ஷோவில் மாகாபாசெய்த காமெடி குறித்த சுவாரஸ்யமான செய்தி ஒன்றை நிகழ்ச்சியில் பகிர்ந்து இருந்தார். 

திரையுலகில் திறமையானவர்களுக்கு என்றுமே வரவேற்பு அதிகமாக இருக்கும் என்பதை தனது அசாத்தியமான திறமையாலும், பேச்சாற்றலும் நிரூபித்தவர் ஆர்.ஜே. பாலாஜி. ஒரு ஆர்.ஜேவாக தனது பயணத்தை தொடங்கி, தன்னுடைய தனித்துமான காமெடி சென்ஸ், டயலாக் டெலிவரி என ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். 

 

R.J. Balaji : 'தசாவதாரம்' படம் பார்த்துட்டு ஷோல போய் மாகாபா என்ன சொன்னான் தெரியுமா? ஆர்.ஜே. பாலாஜி பகிர்ந்த ஸ்வாரஸ்யம்

வெள்ளித்திரை என்ட்ரி : 

அதன் மூலம் வெள்ளித்திரையில் நானும் ரவுடி தான், எதிர்நீச்சல், வடகறி, தீயா வேலை செய்யணும் குமாரு, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட ஏராளமான படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். எல்.கே.ஜி படம் மூலம் முழு நீள ஹீரோவான ஆர்.ஜே. பாலாஜி தொடர்ந்து மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம், ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடிக்க அதனை தொடர்ந்து அவரின் 'சிங்கப்பூர் சலூன்' திரைப்படம்  தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

கவனத்தை ஈர்த்த சிங்கப்பூர் சலூன் :

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் ஐசரி கணேஷ் தயாரிக்க கோகுல் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ஆர்.ஜே. பாலாஜி மிகவும் ஸ்டைலான ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக நடித்துள்ளார். அவருடன் சத்யராஜ், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள 'சிங்கப்பூர் சலூன்' படத்தின் புரொமோஷனுக்காக சென்ற போது ஆர்.ஜே. பாலாஜி, மாகாபா ஆனந்த் குறித்து சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை பகிர்ந்து இருந்தார். 

 

R.J. Balaji : 'தசாவதாரம்' படம் பார்த்துட்டு ஷோல போய் மாகாபா என்ன சொன்னான் தெரியுமா? ஆர்.ஜே. பாலாஜி பகிர்ந்த ஸ்வாரஸ்யம்

மாகாபா செய்த காமெடி :

"தசாவதாரம் படம் ரிலீசான போது எங்க எல்லாரையும் படம் பார்த்துவிட்டு படம் ரொம்ப பிடிச்சுது, படத்தை பத்தி என்ன தோணுதோ அதை உங்களுடைய ஷோல சொல்லுங்கன்னு எங்க ஸ்டேஷன்ல சொன்னாங்க. அப்போ மாகாபாவோட ஷோ தான் ஃபர்ஸ்ட் வருது. அவன் போய் தசாவதாரம் படம் பத்தி சொல்லும் போது 'இந்த படத்துல கமல் சார் நல்லா வேஷம் போட்டு இருந்தாரு. பத்து வேஷம் போட்டு இருந்தாரு. அதிலயும் அந்த நெப்போலியன் வேஷம் சூப்பரா இருந்துச்சு...' அப்படினு பேசுனான். அவன் வேணுமே அப்படி பேசலை. அவனுக்கு உண்மையிலேயே எது வேஷம், எது நிஜம் என தெரியல. அந்த அளவுக்கு தான் இருந்துது அவனோட சினிமா நாலெட்ஜ்" என தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் கலாய்த்து பேசி இருந்தார் ஆர்.ஜே. பாலாஜி. 

மாகாபா பயணம் :
 

மாகாபா ஆனந்தும் ஒரு ஆர்.ஜேவாக தான் தன்னுடைய பயணத்தை துவங்கினார். கோவையில் சூரியன் FMல் இருந்து பின்னர் ரேடியோ மிர்ச்சி FM சேனலுக்கு வந்தார். அதன் மூலம் விஜய் டிவியில் அது இது எது மற்றும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக வானவராயன் வல்லவராயன் என்ற படத்திலும் அறிமுகமானார். தற்போது விஜய் டிவியின் மோசட் வான்டட், மோசட் ஃபேவரட் தொகுப்பாளராக ஏராளமான ரசிகர்களை பெற்று கலக்கி வருகிறார் மாகாபா ஆனந்த். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் மாகாபாவும், பிரியங்கா தேஷ்பாண்டேவும் ஒன்றாக இணைந்தால் அந்த நிகழ்ச்சி படு ஜோராக என்டர்டெயினிங்காக இருக்கும் என்பதை யாராலும் மறுக்கவே முடியாது.    

தலைப்பு செய்திகள்

Peddi Twitter Review: ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
Actor Suriya: மாஸ் காட்டிய கருப்பு.. சம்பளத்தை உயர்த்திய சூர்யா.. இத்தனை கோடியா?
Actor Suriya: மாஸ் காட்டிய கருப்பு.. சம்பளத்தை உயர்த்திய சூர்யா.. இத்தனை கோடியா?
CM Joseph Vijay: உங்க பேச்சு அருவருப்பா இருக்கு.. முதல்வர் விஜயை விளாசிய வினோதினி!
CM Joseph Vijay: உங்க பேச்சு அருவருப்பா இருக்கு.. முதல்வர் விஜயை விளாசிய வினோதினி!
தலைவர் 173 பட இயக்குநர் மாற்றம்.. சூப்பர்ஸ்டார் ரஜினியை இயக்கப்போகும் இயக்குநர் இவர்தான்
தலைவர் 173 பட இயக்குநர் மாற்றம்.. சூப்பர்ஸ்டார் ரஜினியை இயக்கப்போகும் இயக்குநர் இவர்தான்

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
Udhayanidhi Vs CM Vijay : “அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
“அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
Edappadi Palanisamy: “தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
“தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt., Vs Ration Workers: ‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
Hyundai i20 Facelift: டக்கரான ஒரு கார் விரைவில் டாப் டக்கரா வரப் போகுது; தரமான ஐ20 ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஹூண்டாய்
டக்கரான ஒரு கார் விரைவில் டாப் டக்கரா வரப் போகுது; தரமான ஐ20 ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஹூண்டாய்
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Maruti Flex Fuel Car: பெட்ரோல், டீசல் பத்தின கவலைய விட்டுடுங்க; வந்துடுச்சு நாட்டின் முதல் Flex Fuel கார்; அசத்திய மாருதி
பெட்ரோல், டீசல் பத்தின கவலைய விட்டுடுங்க; வந்துடுச்சு நாட்டின் முதல் Flex Fuel கார்; அசத்திய மாருதி
Embed widget