மேலும் அறிய

Pushpa 2: புஷ்பா -2 ரிலீஸ் தேதி எப்போது? அல்லு அர்ஜூன் வெளியிட்ட போஸ்டர்! அப்டேட் இதோ!

Pushpa 2: புஷ்பா திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரரான அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் டிசம்பர்-5 ம் தேதி வெளியாகிறது. தீபாவளியை முன்னிட்டு அல்லு அர்ஜூன் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

 அல்லு அர்ஜூனுக்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர் சுகுமார் இயக்கத்தில் 2021-ம் ஆண்டு வெளியான புஷ்பா படத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார். செம்மரக் கடத்தலை மையமாக கொண்டு உருவாயிருந்த இது,  தெலுங்கு மட்டுமின்றி தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. ரசிகர்கள் புஷ்பா கதாபாத்திரத்தை கொண்டாடினர். புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தயாரிப்பு அறிவிப்பு வந்ததும் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.

இந்நிலையில், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு வெளியானதும் ரசிகர்கள் அதன் ரிலீஸ் குறித்து ஆர்வத்துடன் இருந்தனர். தயாரிப்பு முடிந்து 2024-ம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி புஷ்பா படம் திரயரங்கில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

புஷ்பா 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு:

புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் வரும் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அல்லு அர்ஜூன் புதிய போஸ்டரை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

ஓடிடி உரிமை:

புஷ்பா- 2 படத்திற்கான ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் நெட்ஃப்ளிக்ஸில் இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதன் மதிப்பு மட்டும் ரூபாய் 270 கோடி ரூபாய் அளவிற்கு என்று கூறப்படுகிறது.

புஷ்பா படம் திரையரங்கில் வெளியிடுவதற்கான வர்த்தகம் மட்டும் தற்போது வரை ரூபாய் 650 கோடி வரை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூபாய் 500 கோடி பட்ஜெட்டில் புஷ்பா 2 படம் உருவாகியுள்ளதாக தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் மகிழ்ச்சி: 

புஷ்பா படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர். ஃபகத் ஃபாசில் புஷ்பா-2 படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். தமிழ்நாட்டில் இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் வெளியிடுகின்றனர். புஷ்பா படத்தில் நடிகை சமந்தா நடனம் ஆடிய ”ம்ம்ம் சொல்றியா” பாடல் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

One Sun One Moon Lyrics : இன்றைக்கும் என்றைக்கும் ஒரு தலைவன் தான்..One Sun One Moon பாடல் லிரிக்ஸ் இதோ
One Sun One Moon Lyrics : இன்றைக்கும் என்றைக்கும் ஒரு தலைவன் தான்..One Sun One Moon பாடல் லிரிக்ஸ் இதோ
"நானும் தனுஷும் சேர்ந்து நடிக்காததற்கு இவர்கள்தான் காரணம்" - குண்டைத் தூக்கிப்போட்ட வடிவேலு
நினைவு நாளில் நடந்த அதிர்ச்சி! பூட்டப்பட்ட எஸ்பிபி நினைவிடம்... கண்ணீருடன் திரும்பிய ரசிகர்கள்!
நினைவு நாளில் நடந்த அதிர்ச்சி! பூட்டப்பட்ட எஸ்பிபி நினைவிடம்... கண்ணீருடன் திரும்பிய ரசிகர்கள்!
இவராவது வாய் திறந்து பேசினாரே...சின்மயி, ஷாலின் மரியாவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் ஆதரவு
இவராவது வாய் திறந்து பேசினாரே...சின்மயி, ஷாலின் மரியாவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் ஆதரவு

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெகவில் இணைந்தவர்களுக்கு விஜய் தந்த சர்ப்ரைஸ்! மாஜி அமைச்சர்களுக்கு மாஸ் பொறுப்பு - யாருக்கு என்னென்ன பதவி?
தவெகவில் இணைந்தவர்களுக்கு விஜய் தந்த சர்ப்ரைஸ்! மாஜி அமைச்சர்களுக்கு மாஸ் பொறுப்பு - யாருக்கு என்னென்ன பதவி?
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
Aadhav Arjuna: ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
CM Vijay: முதல்வராக நான் இங்கு வரவில்லை: என் தங்கச்சி மரகதம் குமரவேல்- சிஎம் விஜய் உருக்கம்!
CM Vijay: முதல்வராக நான் இங்கு வரவில்லை: என் தங்கச்சி மரகதம் குமரவேல்- சிஎம் விஜய் உருக்கம்!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
Tata Aeris on EMI: மலிவு விலையில் ஹைடெக்கான Aeris காரை இறக்கிய டாடா.! இதை லோனில் வாங்கினால் EMI எவ்வளவு தெரியுமா.?
மலிவு விலையில் ஹைடெக்கான Aeris காரை இறக்கிய டாடா.! இதை லோனில் வாங்கினால் EMI எவ்வளவு தெரியுமா.?
Maruti Baleno Variants: நீங்க புது பலேனோவ வாங்கப் போறீங்களா.? அப்போ எந்த வேரியண்ட்ல என்னென்ன அம்சங்கள் இருக்குன்னு பாருங்க
நீங்க புது பலேனோவ வாங்கப் போறீங்களா.? அப்போ எந்த வேரியண்ட்ல என்னென்ன அம்சங்கள் இருக்குன்னு பாருங்க
Safety-யில் தெறிக்கவிடும் Monster.! 20 டன் பாறைகளை அசால்ட்டாக தாங்கி நின்ற Tata Aeris.! வீடியோ
Safety-யில் தெறிக்கவிடும் Monster.! 20 டன் பாறைகளை அசால்ட்டாக தாங்கி நின்ற Tata Aeris.! வீடியோ
Embed widget