maanaadu| ’மாநாடு’ அடுத்த பாடல் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!
டைம் லூப் என்னும் சயின்ஸ் ஃபிக்ஸனுடன் அரசியலை இணைத்து புதிய முயற்சியை வெங்கட் பிரபு மாநாடு திரைப்படம் மூலம் கையில் எடுத்திருக்கிறார்.
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் திரைப்படம் ‘மாநாடு’. இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க, படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படம் தீபாவளி பண்டிகை அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அன்று முக்கிய படங்கள் ரிலீஸானதால் படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்தனர். இது குறித்து விளக்கம் அளித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பண்டிகை நாட்களில் ரசிகர்கள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட படங்களை பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தாலும் விநியோகஸ்தர்களும் திரையரங்க வெளியீட்டிற்காக பணம் போட்டவர்களும் என் பட வெளியீட்டின் மூலம் இலாபம் காண வேண்டும் என்ற நோக்கத்தில் படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றி வைக்கிறோம் என குறிப்பிட்டிருந்தார். அதன்படி படம் வருகிற நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
விரைவில் ,🎶🔥🔥🔥 @SilambarasanTR_ @thisisysr @TherukuralArivu #maanaadu pic.twitter.com/hEMV7VEybk
— sureshkamatchi (@sureshkamatchi) November 14, 2021
இந்நிலையில் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் மாநாடு குறித்த ஹிண்ட் ஒன்றை கொடுத்துள்ளார். நடிகர் சிம்பு,தெருக்குரல் அறிவு. இசையமைப்பாளர் யுவன் ஆகியோர் இடம்பெற்ற புகைப்படத்தை பகிர்ந்த அவர் “விரைவில் இசை” என குறிப்பிட்டுள்ளார். அதன்படி படத்தின் ஆடியோ வெளியீட்டிற்கு படக்குழு தயாராகிறதா அல்லது படத்தின் அடுத்த சிங்கிளை வெளியிட போகிறார்களா என்பது சரியாக தெரியவில்லை. ஆனால் யுவனின் இசையில் தேன்குரல் அறிவு மற்றும் சிம்பு இணைந்து ஒரு பாடல் பாடியிருப்பார்கள் என எதிர்பார்க்கலாம். அதற்கான ஹிண்டைத்தான் தயாரிப்பாளர் தற்போது வெளியிட்டுள்ளார். மேலும் படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் சிம்பு நேருக்கு நேராக மோதும் காட்சி அடங்கிய புகைப்படம் ஒன்றையும் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Abdulkhaliq &dhanuskodi #maanaadu Exclusive @SilambarasanTR_ @vp_offl @iam_SJSuryah pic.twitter.com/ureYimYWNU
— sureshkamatchi (@sureshkamatchi) November 14, 2021
மாநாடு படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மெஹரிசைலா என தொடங்கும் அந்த பாடல் ஒரு டூயட் பாடலாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. டைம் லூப் என்னும் சயின்ஸ் ஃபிக்ஸனுடன் அரசியலை இணைத்து புதிய முயற்சியை வெங்கட் பிரபு மாநாடு திரைப்படம் மூலம் கையில் எடுத்திருக்கிறார். மாநாடு படம் வெளியாவதற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் வேலைகளை மீண்டும் தொடங்கியுள்ளனர் படக்குழு. படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருக்கிரார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, கருணாகரன், மனோஜ், டேனியல், பிரேம்ஜி அமரன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே மாநாடு படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.