''அமெரிக்காவின் நடுவில் ஒரு இந்தியா'' - தனது உணவகம் குறித்து பிரியங்கா சோப்ரா பெருமிதம்!
சோனா என்ற பெயரை இந்தியாவிற்கு வந்த பொழுது நிக் கேட்டதாகவும், அந்த பெயரை தன்னிடம் பரிந்துரைத்ததாகவும் கூறுகிறார் பிரியங்கா.
பாலிவுட் மட்டுமல்லாது ஹாலிவுட்டிலும் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் பிரபல பாடகரும் , ஹாலிவுட் நடிகருமான நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் அமெரிக்காவின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக கருதப்படும் நியூயார்க்கில் ரெஸ்டாரண்ட் ஒன்றை தொடங்கியுள்ளார். இதற்கு சோனா என பெயர் வைத்துள்ளார்கள். பெரும்பாலும் மேலை நாட்டு உணவகங்களில் சேலை போன்ற பாரம்பரிய உடைகள் அணிந்திருந்தால் அனுமதி மறுக்கப்படும். ஆனால் சோனாவில் இந்திய பாரம்பரிய உடைகளில் வருபவர்கள் வரவேற்க படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
சோனா- பெயர்காரணம்
கடந்த மூன்று வருடங்களாக திட்டமிடுதலில் இருந்த உணவகம் தற்போது திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த கடையின் பெயரை பிரியங்காவின் கணவர் ஜோனஸ்தான் தேர்வு செய்துள்ளார். அவர் சோனா என்ற பெயரை இந்தியாவிற்கு வந்த பொழுது கேட்டதாகவும், அந்த பெயரை தன்னிடம் பரிந்துரைத்ததாகவும் கூறுகிறார் பிரியங்கா. மேலும் சோனா என்றால் தங்கம் என பொருள். இது இரு நாடுகளுக்கும் பொருத்தமான பெயராக இருக்கும் என்பதால் அதையே ஃபிக்ஸ் செய்துவிட்டதாகவும் தெரிவிக்கிறார் பிரியங்கா.
என்னென்ன கிடைக்கும் சோனாவில் ?
சோனா உணவகத்தில் இந்தியாவின் பாரம்பரிய உணவுகள் அனைத்தும் கிடைக்கின்றன. இதற்காக தொடங்கப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வாயிலாக , எந்தெந்த கிழமைகளில் என்ன உணவுகள் கிடைக்கும் , மெனுவில் இருக்கும் இந்திய உணவுகள் என்னென்ன என்பது குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளனர். இதுவரையில் தனது சோனா உணவகத்திற்கு ஐந்து முறை சென்றுள்ளாராம் பிரியங்கா சோப்ரா. இவருக்கென தனி அறை ஒன்றும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளதாம்.கடந்த மாதம் இவர் அங்கு சென்று தனக்கு மிகவும் பிடித்த பானி பூரியை சாப்பிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கின. தற்போது தனது சோனா உணவகம் சென்றுள்ள பிரியங்கா சோப்ரா அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். அதில் “ இந்தியர்களுக்கான அனைத்தும் நியூயார்க்கின் மையப்பகுதியில் உள்ளது” என பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
பேலன்ஸிங் லைஃப்
பாலிவுட் , ஹாலிவுட் என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார் பிரியங்கா சோப்ரா. எப்படி இரண்டையும் பேலன்ஸ் செய்கிறீர்கள் என்ற தொகுப்பாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த பிரியங்கா “ எங்கள் நாட்டில் வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்வோம், அமெரிக்காவில் வீக் எண்ட் விடுமுறை நாட்களை பயன்படுத்தி நான் இந்தியாவிற்கு சென்று அங்குள்ள படங்களை நடித்து விடுவேன் “ என வேடிக்கையாக பதிலை கொடுத்திருந்தார். பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் சோனஸ் இருவருமே இரண்டு நாடுகளின் கலாச்சரங்களையும் பின்பற்றி வருகின்றனர்.இந்திய சுதந்திர தினம், அமெரிக்க சுதந்திர தினம், என இரண்டையுமே கொண்டாடுகின்றனர். இருநாட்டு பாரம்பரிய நிகழ்சிகளிலும் பங்கேற்கின்றனர்.இவ்வளவு ஏன் ஒவ்வொரு முறையும் ஹோலி பண்டிகையை இந்தியாவில்தான் கொண்டாடுகிறார்களாம் நிக் - பிரியங்கா தம்பதிகள்.