மேலும் அறிய

Priyanka Chopra To Kamala Harris: ‘நாங்கள் இந்தியாவின் மகள்கள்.. சமத்துவம்..காலநிலைமாற்றம்..’ - பிச்சு உதறிய பிரியங்கா சோப்ரா!

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தானும் அமெரிக்க துணை ஜனாதிபதி ஆகிய இருவரும் ஒரு வகையில் இந்தியாவின் மகள்கள் என்று பேசி இருக்கிறார். 

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தானும் அமெரிக்க துணை ஜனாதிபதி ஆகிய இருவரும் ஒரு வகையில் இந்தியாவின் மகள்கள் என்று பேசி இருக்கிறார். 

பாலிவுட்டில் மட்டுமல்லாது ஹாலிவுட்டிலும் தன்னுடைய இருப்பை பதிவு செய்திருக்கும் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த வாரம் அமெரிக்கா துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை, ஜனநாயக தேசியக் குழு மகளிர் தலைமை மன்றம் விடுத்த அழைப்பின் பேரில் நேர்காணல் செய்தார். இதில் பல நாடுகளில் இருந்து மிக முக்கியமான பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

View this post on Instagram
 
A post shared by Priyanka (@priyankachopra)

முதலில் பேசத் தொடங்கிய பிரியங்கா, “ஒரு வகையில் நாங்கள் இருவரும் இந்தியாவின் மகள்கள் என்று நான் நினைக்கிறேன்” என்றார். மேலும் பேசிய அவர்,  “நீங்கள் இந்திய தாய்க்கும், ஜமைக்கா தந்தைக்கும் பிறந்த அமெரிக்காவில் பிறந்த பெருமைக்குரிய மகள்.

நான் இரண்டு மருத்துவர்களை பெற்றோராகக் கொண்ட இந்தியன். இந்த நாட்டிற்கு சமீபத்தில் குடியேறினேன். அமெரிக்கா, முழு உலகிற்கும் நம்பிக்கை, சுதந்திரம் மற்றும் விருப்பத்தின் கலங்கரை விளக்கமாக கருதப்படுகிறது. இந்தக் கோட்பாடுகள் இப்போது முடிவில்லாமல் தாக்கப்படுகின்றன.

ஆண் நடிகர்களுக்கு இணையான சம்பளம்

20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய பிறகு, இந்த ஆண்டுதான் ஆண் நடிகர்களுக்கு இணையான சம்பளம் எனக்கு கிடைத்தது. தொடர்ந்து சமத்துவ பிரச்சினை பற்றி பேசிய பிரியங்காவின் பேச்சை ஆமோதித்த கமலா ஹாரிஸ் இப்போது அமைதியற்ற உலகில்  மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டார்.

கமலா ஹாரிஸ்

தொடர்ந்து பேசிய கமலா ஹாரிஸ், “நான் துணை ஜனாதிபதியாக உலகம் முழுவதும் பயணம் செய்து வருகிறேன். 100 உலகத் தலைவர்களுடன் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ நேரடியாகப் பேசியுள்ளேன். நாங்கள் நீண்ட காலமாக எடுத்துக் கொண்ட விஷயங்கள் இப்போது விவாதத்திற்கும், கேள்விகளுக்கும் உள்ளாகி இருக்கின்றன. 

ரஷ்யா போர்

உதாரணமாக, உக்ரைனில் ரஷ்யாவின் தூண்டப்படாத போரை நீங்கள் பார்க்கிறீர்கள். பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைப் பிரச்சினைகள்  நன்றாக தீர்க்கப்பட்டுவிட்டதாக நாங்கள் நினைத்தோம், இப்போது அங்கு என்ன நடக்கிறது என்பதை பார்க்கும் போது அது விவாத வளையத்திற்குள் வந்திருக்கிறது. நாங்கள் எங்கள் சொந்த நாட்டை பார்க்கிறோம். அமெரிக்காவில் வாக்களிக்கும் உரிமை பிரச்சினை தீர்க்கப்பட்டதாக நினைத்தோம். எங்களிடம் ஷெல்பி வி. ஹோல்டர் முடிவு இருந்தது. 2020 தேர்தலுக்குப் பிறகு, முன்னெப்போதையும் விட அதிகமான மக்கள் வாக்களித்தனர். அதிக இளைஞர்கள் வாக்களித்தபோது, ​​​​நம் நாட்டைச் சுற்றியுள்ள மாநிலங்கள் முறையாகவும் வேண்டுமென்றேவும் மக்கள் வாக்களிப்பதை கடினமாக்கத் தொடங்கின.

ஒரு பெண்ணின் உரிமை, அரசியலமைப்பு உரிமை, தனது சொந்த உடலைப் பற்றி முடிவெடுக்கும் உரிமை தீர்ந்தது என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் இப்போது அது இல்லை.” என்று பேசினார்.

ஆமோதித்த பிரியங்கா சோப்ரா

இதை ஆமோதித்த ப்ரியங்கா சோப்ரா, “ நிச்சயமாக. நீங்கள் சொல்வது சரிதான். இன்னும் நாம் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.” என்றார். தொடர்ந்து பருவநிலை மாற்றம் பற்றி பேசிய பிரியங்கா சோப்ரா, “ இது போன்ற தீவிர வானிலை மாற்றங்கள் அடிக்கடி வருவதோடு கடுமையானதாகவும் மாறி வருகின்றன
இந்த ஆண்டின் தொடக்கத்தில் வரலாற்றில் காலநிலை மாற்றம் தொடர்பான சட்டத்தை நிறைவேற்றியதற்காக நிர்வாகத்தை வரவேற்க விரும்பினேன்.

நெருக்கடி உண்மையானது

அமெரிக்காவின் தலைமை உலகெங்கிலும் உள்ள மற்ற பெரிய பொருளாதாரங்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைகிறது என்பது உண்மைதான். நெருக்கடி உண்மையானது, மற்றும் கடிகாரம் முள் டிக் என சென்று கொண்டிருக்கிறது. நாம் செயல்பட வேண்டிய அவசரம் எந்த கேள்வியும் இல்லாமல் உள்ளது என்று கூற அதை கமலா ஹாரிஸ் ஆமோதித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget