Prithviraj Sukumaran | ‛லைட்..கேமரா..அக்ஷன்’ பாலிவுட்டில் இயக்குநராக களமிறங்கும் பிரித்விராஜ்?
கனவு மெய்ப்பட கரம் கொடுத்தவர் நடிகர் மோகன்லால். கடந்த 2019 ஆம் ஆண்டு லூசிஃபர் என்னும் படம் மூலமாக நடிகர் பிரித்விராஜ் இயக்குநராக அறிமுகமானார்.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் பிரித்திவி ராஜ். தமிழ் சினிமாவில் மொழி, சத்தம் போடாதே உள்ளிட்ட சில படங்களில் நாயகனாக நடித்தார். அதன் பிறகு இவருக்கு கோலிவுட் பக்கம் பெரிய வாய்ப்புகள் கிடைக்காததால் , மல்லுவுட் பக்கமே அதிகம் கவனம் செலுத்தி வந்தார். என்னதான் பிரித்வி ராஜ் நடிகராக அவதாரம் எடுத்திருந்தாலும் அவருருக்கு இயக்குநர் ஆக வேண்டும் என்பதுதான் கனவு. நடிக்க வருவதற்கு முன்பு சில காலம் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். கனவு மெய்ப்பட கரம் கொடுத்தவர் நடிகர் மோகன்லால். கடந்த 2019 ஆம் ஆண்டு லூசிஃபர் என்னும் படம் மூலமாக நடிகர் பிரித்விராஜ் இயக்குநராக அறிமுகமானார். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. படத்தில் டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர், விவேக் ஓப்ராய் என பல பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர்.
View this post on Instagram
அதன் பிறகு மகள் எழுதிய குட்டி கதை ஒன்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார். ட்ராயிங் பேட் ஒன்றிலி பிரித்திவியின் மகள் அலங்ரிதா “ அமெரிக்காவில் வசிக்கும் அப்பா மற்றும் மகள் இருவரும் , இரண்டாம் போர் ஏற்படுவதன் காரணமாக , அங்கிருந்து அகதிகள் முகாமிற்கு சென்று விடுகின்றனர். பின்னர் போர் நின்ற பிறகு தன் சொந்த நாட்டிற்கு திரும்பி விடுகின்றனர்” என எழுதியிருக்கிறார்.இதனை பகிர்ந்த பிரித்திவி “ நான் கொரோனா ஊரடங்கு காலத்தில் கேட்ட நல்ல கதைகளில் சிறந்த கதை இதுதான், இதன் மூலம் நான் எனது அடுத்த கதையை தேர்வு செய்துவிட்டேன். என தெரிவித்திருந்தார். படத்திற்கு “ப்ரோ டாடி” என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. படத்தில் நாயகனாக மோகன்லால் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
இந்த நிலையில் பாலிவுட் பக்கம் இயக்குநர் அவதாரம் எடுக்க போகிறாராம் பிரித்வி. இந்தியாவின் ‘பிஸ்கட் மன்னன்’ ராஜன் பிள்ளையின் வாழ்க்கையை , இந்தியில் வெப் சீரிஸாக எடுக்க இருக்கிறார்களாம். அதனை இயக்கும் பொறுப்பு பிரித்விக்கு வழங்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் நாயகனான ராஜன் பிள்ளை கதாபாத்திரத்திலும் பிரித்வி நடிப்பார் என கூறப்படுகிறது. வெப் தொடரின் தயாரிக்கும் உரிமையை பிரபல யூடுல் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.