மேலும் அறிய

Aadu Jeevitham Box Office : எல்லா மொழிகளிலும் வசூல் மழை.. பிருத்விராஜின் ஆடுஜீவிதம் - பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

Aadu Jeevitham : பிருத்விராஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஆடு ஜீவிதம் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது

Aadu Jeevitham Box office : தமிழ் , தெலுங்கு, மலையாளம் , இந்தி என அனைத்து மொழிகளிலும் வசூலை குவித்துள்ளது ஆடு ஜீவிதம் திரைப்படம்.

ஆடு ஜீவிதம்

மலையாள இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் நடித்துள்ள ஆடு ஜீவிதம், படம் நேற்று மார்ச் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு , மலையாளம் , இந்தி , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. 

படத்தின் கதை

எப்படியாவது வெளிநாட்டுற்கு வேலைக்கு சென்று கொஞ்சம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற சின்ன ஆசையில், செழிப்பான தனது சொந்த ஊரையும், கர்ப்பமாக இருக்கும் தனது மனைவி சைனியையும் விட்டு சவுதி அரேபியா செல்கிறார் நாயகன் நஜீப் முகமது (பிருத்விராஜ்) மற்றும் அவரது நண்பன் ஹக்கீம். செளதி சென்று சேர்ந்ததும் தன்னை அழைத்துச் செல்ல ஏஜெண்ட் யாரும் வராமல் தவிக்கிறார்கள். அப்போது ஏஜெண்ட் போல பாவனை செய்யும் ஒருவரிடம் மாட்டிக்கொண்டு ஆடுகள், ஒட்டகங்கள் மேய்க்கும் அடிமையாக பாலைவனத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். தான் பேசுவதை புரியவைக்க முடியாமல், எதிரில் இருப்பவர் பேசும் மொழியும் புரியாமல் தவிக்கும் நஜீப், தான் அடிமையாக்கப்பட்டிருப்பதையே ஒரு சில  நாட்களுக்குப் பிறகுதான் உணர்கிறார்.

இந்த பாலைவனத்தில் இருந்து தப்பித்து, நஜீப் முகமது மீண்டு வந்த கதையை மிக உணர்ச்சிகரமான வகையில் சொல்லியிருக்கிறது ஆடு ஜீவிதம் படம்.

இப்படத்தை உருவாக்க 14 ஆண்டுகள் இயக்குநர் பிளெஸ்ஸி காத்திருந்திருக்கிறார். மேலும் இப்படத்திற்காக நடிகர் பிருத்விராஜ் தனது உடல் எடையை குறைத்து கடுமையான உழைப்பை செலுத்தியிருக்கிறார். படத்தில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது பிருத்விராஜின் நடிப்பு. ஒவ்வொரு காட்சியிலும் உணர்ச்சிகரமாகவும், உடல்மொழியில்  நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள். ஆடு ஜீவிதம் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

முதல் நாள் வசூல்

இப்படத்திற்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பரவலான எதிர்பார்ப்பு இருந்தது. வேலை நாளில் படம் வெளியாகியுள்ள போதும் படம் நல்ல வசூலை எடுத்திருக்கிறது. ஆடு ஜீவிதம் படம் முதல் நாளில் இந்தியளவில் ரூ 7.45 கோடி வசூல் செய்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. முதல் மூன்று காட்சிகளைக் காட்டிலும் இரவு காட்சிக்கு ரசிகர்களின் வருகையும் அதிகரித்துள்ளதாக இந்த தளம் தகவலை வெளியிட்டுள்ளது. அடுத்து வர இருக்கும் இரண்டு விடுமுறை நாட்களில் இந்த வசூல் இருமடங்காக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: 20 மாவட்டங்களில் காலை 8 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு; வேலைக்கு போறவங்களே எச்சரிக்கை!
20 மாவட்டங்களில் காலை 8 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு; வேலைக்கு போறவங்களே எச்சரிக்கை!
Iran President Death Impact: ஈரான் அதிபர் மறைவு: உயரும் தங்கம், கச்சா எண்ணெய் விலை; இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
Iran President Death Impact: ஈரான் அதிபர் மறைவு: உயரும் தங்கம், கச்சா எண்ணெய் விலை; இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
Covaxin பக்க விளைவு ஆய்வே தவறு: மன்னிப்பு கேட்க வலியுறுத்தும் ICMR 
Covaxin பக்க விளைவு ஆய்வே தவறு: மன்னிப்பு கேட்க வலியுறுத்தும் ICMR 
MS Dhoni: ”எனக்கு இரண்டு மாதங்கள் டைம் வேணும்” - ஓய்வு குறித்த சிந்தனையில் தல தோனி!
MS Dhoni: ”எனக்கு இரண்டு மாதங்கள் டைம் வேணும்” - ஓய்வு குறித்த சிந்தனையில் தல தோனி!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

BJP cadre false complaint : பொய் சொன்ன பாஜக பிரமுகர்! உண்மையை உடைத்த கொள்ளையன்! ஆத்திரத்தில் POLICEVeeralakshmi on Vijay Dhanush : ”விஜய், தனுஷ், த்ரிஷா..உடனே டெஸ்ட் எடுங்க”வீரலட்சுமி பரபரப்பு புகார்Akshay kumar first vote : 56 வயதான அக்‌ஷய் குமார்! முதல்முறையாக வாக்களித்தார் காரணம் என்ன?Salem differently abled : மூன்று சக்கர வாகனத்தில் உணவு டெலிவரி! அசத்தும் மாற்றுத்திறனாளி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: 20 மாவட்டங்களில் காலை 8 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு; வேலைக்கு போறவங்களே எச்சரிக்கை!
20 மாவட்டங்களில் காலை 8 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு; வேலைக்கு போறவங்களே எச்சரிக்கை!
Iran President Death Impact: ஈரான் அதிபர் மறைவு: உயரும் தங்கம், கச்சா எண்ணெய் விலை; இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
Iran President Death Impact: ஈரான் அதிபர் மறைவு: உயரும் தங்கம், கச்சா எண்ணெய் விலை; இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
Covaxin பக்க விளைவு ஆய்வே தவறு: மன்னிப்பு கேட்க வலியுறுத்தும் ICMR 
Covaxin பக்க விளைவு ஆய்வே தவறு: மன்னிப்பு கேட்க வலியுறுத்தும் ICMR 
MS Dhoni: ”எனக்கு இரண்டு மாதங்கள் டைம் வேணும்” - ஓய்வு குறித்த சிந்தனையில் தல தோனி!
MS Dhoni: ”எனக்கு இரண்டு மாதங்கள் டைம் வேணும்” - ஓய்வு குறித்த சிந்தனையில் தல தோனி!
Watch Video: காதலியுடன் பைக்கில் மஜாவாக வலம் வந்த காதலன்: அலேக்காக தூக்கிய போலீஸ்! காரணம் என்ன?
Watch Video: காதலியுடன் பைக்கில் மஜாவாக வலம் வந்த காதலன்: அலேக்காக தூக்கிய போலீஸ்! காரணம் என்ன?
Fact Check: ஆந்திராவை தட்டித்தூக்கும் பாஜக கூட்டணி.. பரப்பப்படும் கருத்துக்கணிப்பு உண்மையா?
ஆந்திராவை தட்டித்தூக்கும் பாஜக கூட்டணி.. பரப்பப்படும் கருத்துக்கணிப்பு உண்மையா?
IPL 2024: எதிரணியை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்; இதுவே கடைசியாக கூட இருக்கலாம்: வறுத்தெடுக்கப்படும் ஆர்சிபி!
IPL 2024: எதிரணியை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்; இதுவே கடைசியாக கூட இருக்கலாம்: வறுத்தெடுக்கப்படும் ஆர்சிபி!
Fact Check: பிரதமர் மோடியை சந்தித்தாரா உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்? வீடியோ உண்மையானதா?
பிரதமர் மோடியை சந்தித்தாரா உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்? வீடியோ உண்மையானதா?
Embed widget