குட் பேட் அக்லி வெற்றி... தல தான் காரணம்! அப்பா கங்கை அமரனுக்கு பிரேம் ஜி பதிலடி
Premji amaran: என் அப்பா அவங்க அண்ணனுக்கு சப்போர்ட் பண்ணி பேசுறாரு. இப்போ எங்க அண்ணனைப் பத்தி ஏதாவது வந்ததுன்னா நான் ஆதரவாக பேசுவேன். அந்த மாதிரிதான் என்றார் கங்கை அமரன்

இயக்குனர் ஆதிக் ரசிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றுள்ளது. இந்த படத்தில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் வெற்றிக்கே இந்த பாடல்கள் தான் மிகப்பெரிய காரணமாக அமைந்தது என்று சொல்லலாம். தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸுக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தார். படக்ல்குழு தனக்கு 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் அல்லது படத்தில் இருந்து பாடல்களை நீக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸ்சில் கூறப்பட்டிருந்தது. ஆனால் பாடல்களுக்கான உரிமையை சம்பந்தப்பட்ட ஸ்டுடியோவிடம் முறையாக அனுமதி பெற்றுள்ளதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தெரிவித்துள்ளது
கங்கை அமரன் பேட்டி:
இதற்கிடையில் நிகழ்ச்சி ஓன்றில் பேசிய கங்கை அமரன் “7 கோடி சம்பளம் வாங்கிய இசையமைப்பாளரின் பாடல்கள் ஹிட் ஆகவில்லை எங்களுடைய பாடல்களைதான் ரசிகர்கள் கொண்டாருகிறார். அப்படியென்றால் அதில் எங்களுலக்கும் பங்கு இருக்கிறது தானே. பாட்டை பயன்படுத்துகிறோம் என்று நேரடியாக கேட்டிருந்தால் இலவசமாகவே கொடுத்திருப்போம் .
அது அஜித் படமாக இருந்தால் என்ன. எங்கள் பாட்டை நீ எப்படி திருடலாம். எங்களுக்கு பணத்தாசை கிடையாது எங்களிடம் நிறைய பணம் இருக்கிறது. " என கங்கை அமரன் தெரிவித்தார்.
பிரேம் ஜி நச் பதில்:
என் அப்பா அவங்க அண்ணனுக்கு சப்போர்ட் பண்ணி பேசுறாரு. இப்போ எங்க அண்ணனைப் பத்தி ஏதாவது வந்ததுன்னா நான் ஆதரவாக பேசுவேன். அந்த மாதிரிதான். அஜித் படம் இளையராஜா பாடல்களை வைத்துத்தான் ஓடுதுன்னு சொல்றாங்க. அதெல்லாம் சும்மா.
தல அஜித்துக்காக தான் அந்தப் படம் ஓடும் என்றார் பிரேம்ஜி. ராயல்டி என்பது எல்லா இசையமைப்பாளர், பாடகர்களுக்கு கூட ராயல்டி இருக்கு. அது எல்லாருக்குமே வருகிற விஷயம்தான் இசையை உருவாக்குற எல்லாருக்குமே ராயல்டி வந்துக்கிட்டுதான் இருக்கு. நானே 15 படம் மியூசிக் பண்ணிருக்கேன். எனக்கும் வந்துக்கிட்டுத்தான் இருக்கு. என்றார் பிரேம்ஜி
கேள்வி : இளையராஜாவால தான் #GBU ஒடுச்சு சொல்றார்
— Joe Selva (@joe_selva1) April 22, 2025
பிரேம்ஜி (இளையராஜா பேமிலி) : அதெல்லாம் சும்மா #GoodBadUgly படம் தல #Ajith sir ku than ஒடுச்சு
எங்க பெரியப்பா தெரியமா பேசிட்டார் #Preamji pic.twitter.com/1iKIe2S14R
தற்போது பிரேம்ஜி பேசிய இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.






















