மேலும் அறிய

‛பொறுத்திருந்து 3D.,யில் பாருங்க...’ ஆதிபுருஷ் டீசர் விமர்சனத்திற்கு பிரபாஸ் பதில்!

Adipurush Teaser : கிண்டல்களுக்கும் சர்ச்சைகளுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் ஆதிபுருஷ் பட டீசர்... சூப்பராக சமாளித்த நடிகர் பிரபாஸ்

பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் டீசரை அனைவரும் பார்த்து சிரித்தனர். இதற்கு காரணம் பொம்மை படம்  போல் அமைக்கப்பட்ட க்ராபிக்ஸ்தான். ஒருபக்கம் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளான ஆதிபுருஷ், மற்றொரு பக்கம் கடுமையாக கண்டிக்கப்பட்டது. ராமர், லட்சுமணன் மற்றும் ராவணனை தவறாக சித்தரித்ததாகவும், ஹிந்து மத நம்பிகைகளையும்  புராணங்களையும் சீர்குலைத்தாகவும் சர்ச்சை கிளம்பியது.

இதற்கு இடையில் நொந்து போன பிரபாஸின் ரசிகர்கள், ஹைதராபாத் 3டி டீசர் வெளியீட்டு விழாவில் பிரபாஸ் கூறிய விஷயத்தால் ஆறுதல் அடைந்துள்ளனர். ஸ்டைலாக மக்களை சந்திக்க வந்த பிரபாஸ், ஆதிபுருஷ் பட டீசரின் மீது புகுத்தப்பட்ட விமர்சனங்களுக்கு பதில் அளித்த பின், படம் தியேட்டரில் பாக்க நன்றாக இருக்கும் என்று நம்பிக்கையாக பேசி ஆறுதல் கூறினார். ரசிகர்களிடம் பொருத்து இருந்து பாருங்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


முப்பரிமாண டீசரை பார்த்த பிரபாஸ் கூறியதாவது:

“இதை 3டியில் நான் பார்க்கும் போது, குழந்தையாக உணர்ந்தேன். அதில் வரும் மிருகங்கள் உங்கள் கண் முன் தோன்றுவது போல் இருக்கும். இது போன்ற 3டி காட்சி இதுவரை இந்தியாவில் அமைக்கபடவில்லை. இப்படம், திரையரங்கில் வெளியிட உருவாக்கப்பட்டது அதுவும், 3டியில் பார்க்க உருவாக்கப்பட்டது.

ஆதிபுருஷ் படத்தை 3டியில் பார்த்து மகிழுங்கள். வரும் வாரங்களில், ஆதிபுருஷ் குழு ஒரு முக்கிய தகவலை வெளியிடும். இந்த 3டி டீசரை மக்கள் காண, 60 தியேட்டர்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று பிரபாஸ் விளக்கம் கொடுத்தார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prabhas (@actorprabhas)

பாகுபலி பிரபாஸுக்கு இந்த நிலமையா என்று கேள்விபடும் போது சற்று வருத்தமாக தான் உள்ளது. இருந்தாலும் பிரபாஸ் அவரையும் ஆதிபுருஷ் பட இயக்குநர் ஓம் ரவுத்தின் மானத்தை காக்க நன்றாக சமாளித்துள்ளார் என்றுதான் சொல்லவேண்டும். இருப்பினும் பொருத்து இருந்து பார்ப்போம்..! படத்தின் டீசர் அக்டோபர் 2 அன்று வெளியானது என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க : Bigg Boss 6 Tamil House: பிக்பாஸ் சீசன் 6 வீடு... இந்த முறை புதிய வசதிகள் அறிமுகம்... இதோ பிக்பாஸ் வீடு டூர்!

 

 

 

தலைப்பு செய்திகள்

அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!
”போலி ஆபாச வீடியோ...பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
”போலி ஆபாச வீடியோ”...”பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்

வீடியோ

Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
Top 5 EV Car Companies: களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்
களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்
Kia Sorento: கியா சொரெண்டோவ வாங்கலாமா, வேண்டாமா.? 3 சாதகங்களையும், 3 பாதகங்களையும் படிச்சுட்டு முடிவெடுங்க
கியா சொரெண்டோவ வாங்கலாமா, வேண்டாமா.? 3 சாதகங்களையும், 3 பாதகங்களையும் படிச்சுட்டு முடிவெடுங்க
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
Embed widget