மேலும் அறிய

Prabhas - Disha Patani: பிரபாஸ் - கங்குவா நடிகை திஷா பதானி காதல்? உறுதி செய்த டாட்டூ! மகிழ்ச்சியுடன் பதிவிட்ட நடிகை!

Prabhas - Disha Patani: தற்போது தென்னிந்திய படங்களிலும் ஆர்வம் காண்பித்து வரும் திஷா, சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார்.

கல்கி (Kalki 2898AD) படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து நடித்ததைத் தொடர்ந்து நடிகை திஷா பதானி தன் கையில் பதிந்துள்ள புதிய டாட்டூ கவனத்தை ஈர்த்து பேசுபொருளாகியுள்ளது.

பாலிவுட் டூ கங்குவா நடிகை

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை திஷா பதானி (Disha Patani). நடிகர் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான “எம்.எஸ்.தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி” படத்தில் நடித்ததன் மூலம் பான் இந்திய அளவில் பிரபலமான இவர், தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்து வந்தார். தற்போது தென்னிந்திய படங்களிலும் ஆர்வம் காண்பித்து வரும் திஷா, சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், சென்ற வாரம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கல்கி 2898AD படத்தில் நடிகர் பிரபாஸூக்கு (Prabhas) ஜோடியாக ரோக்சி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

பிரபாஸ் உடன் டேட்டிங்

கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் எனப் பல உச்ச நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருவதுடன், 6 நாள்களில் 700 கோடிகளை வசூலித்து வாயைப் பிளக்க வைத்துள்ளது. வசூலில் சக்கைபோடு போட்டு ஒருபுறம் இப்படம் கவனமீர்த்து வரும் நிலையில், மற்றொருபுறம் இப்படத்தில் இணைந்து நடித்த பிரபாஸ் - திஷா பதானி இருவரும் டேட்டின் செய்வதாகத் தகவல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகின்றன. 

திஷா பதானி தன் கையில் பதிந்துள்ள புதிய டாட்டூ தான், இந்த சர்ச்சைக்கு தற்போது அடித்தளமிட்டுள்ளது. பிடி (PD) எனும் ஆங்கில எழுத்துக்கள் கொண்ட டாட்டூவை திஷா பதானி தன் கையில் பதிந்துள்ள நிலையில், பிரபாஸ் - திஷா என இருவரது பெயர்களைக் குறிக்கும் வகையில், இந்த டாட்டூவை திஷா தன் கையில் பச்சைக் குத்திக் கொண்டுள்ளதாகவு, இருவரும் தற்போது காதலித்து வருவதாகவும் ரசிகர்கள் இணையத்தில் உற்சாகம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், “என் டாட்டூவைப் பற்றி எல்லாரும் இவ்வளவு ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது. இது எதைப் பற்றியது எனக் கண்டுபிடிங்க” என சூசகமான பதிவு ஒன்றையும் இந்தப் புகைப்படத்துடன் திஷா தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

View this post on Instagram
 
A post shared by disha patani (paatni) 🦋 (@dishapatani)

திஷாவின் இந்தப் பதிவில் ரசிகர்கள் பிரபாஸ் - திஷா எனப் பதிவிட்டும், வாழ்த்துகளைப் பகிர்ந்தும் வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
ABP Premium

வீடியோ

அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா
Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
iPhone 17 Price Drop: மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Embed widget