Sara Arjun Aishwarya Rai: பொன்னியின் செல்வன் நந்தினியுடன் குட்டி நந்தினி..! வைரலாகும் சாரா - ஐஸ்வர்யா ராய் செல்பி..!
பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாக நடித்த ஐஸ்வர்யாராயுடன் இளவயது நந்தினியாக நடித்த சாரா அர்ஜுன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் தியேட்டர்களில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஐஸ்வர்யா ராயுடன் சாரா அர்ஜுன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இளவயது நந்தினி:
பேபி சாராவாக தெய்வத்திருமகள், சைவம் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் பல இந்திப் படங்களிலும் நடித்தவர் சாரா அர்ஜுன். குறிப்பாக தெய்வத்திருமகள் படத்தில் தந்தையின் மீது அதீத பாசம் கொண்ட மகளாக அசத்தி இருந்தார். பொன்னியின் செல்வன் படத்தில் இளம் வயது நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். இளம் நந்தினியாகவும் மந்தாகினியாகவும் ஐஸ்வர்யா ராய் டபுள் ரோலில் மிரட்டிய நிலையில், இளம் வயது நந்தினியாக எந்தவொரு பழி வாங்கும் உணர்வில்லாமல் சாதுவாக, அழகியாக, பார்த்த மாத்திரத்திலேயே ரசிகர்களை கவரும் விதமாக நடித்து கலக்கி இருந்தார் சாரா.
முதல் பாகத்தில் சிம்மாசனத்தை ஐஸ்வர்யா ராய் பார்க்கும் போது இளம் வயது நந்தினியான சாரா அர்ஜுன் அதில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு ஃபிரேம் படம் பார்த்தவர்களை புல்லரிக்கச் செய்திருக்கும். இந்நிலையில், இயக்குனர் இரண்டாம் பாகத்தின் முதல் ஃபிரேமிலேயே குளத்தில் இருந்து குளித்தபடி சாரா அர்ஜுன் வெளியே வரும் காட்சியைத் தான் வைத்திருப்பார். பொன்னியின் செல்வன் 2-வில் இளம் வயது நந்தினி மற்றும் இளம் வயது ஆதித்த கரிகாலனின் காதல் காட்சிகள், குந்தவை மற்றும் அரச குடும்பத்தினரின் சூழ்ச்சியால் அவர்கள் எப்படி பிரிகின்றனர் என்பது குறித்து தெளிவாக காட்டப்பட்டிருக்கும். அதன் பின் தான் கடலில் விழுந்த பொன்னியின் செல்வன் என்ன ஆனார் என்று காட்டப்பட்டிருக்கும்.
ஐஸ்வர்யா ராயுடன் சாரா அர்ஜூன்:
படத்தில் இளம் வயது நந்தினியாக சாரா அர்ஜுனும் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த நிலையில், தற்போது இருவரும் ஒரே ஃபிரேமில் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை நடிகை சாரா அர்ஜுன் ஷேர் செய்து, "im so glad to work with you" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் தங்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.
அடுத்ததாக சன்னி லியோன், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் கொட்டேஷன் கேங் படத்திலும் சாரா அர்ஜுன் தனது மிராட்டலான நடிப்பை வெளிப்படுத்த உள்ளார்.
மேலும் படிக்க