TN Weather Update: தென்கிழக்கு வங்கக்கடலில் உருவானது ’மோக்கா’ புயல்.. எங்கே எப்போது கரையை கடக்கும்? தமிழகத்தின் நிலை என்ன?
தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான மோக்கா புயல், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை- நாளை மறுதினம் அதி தீவிர புயலாக மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு 11 மணி அளவில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்தது கடந்த 06 மணிநேரத்தில் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து இன்று காலை புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு மோக்கா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அதாவது அட்சரேகை (latitude) 10.8°N மற்றும் தீர்க்கரேகை (longitude) 88.2°E, போர்ட் பிளேயர் மேற்கு-தென்மேற்கே சுமார் 500 கி.மீ தொலைவிலும், காக்ஸ் பஜாரின் (வங்காளதேசம்) தென்-தென்மேற்கே 1250 கி.மீ தொலைவிலும், சிட்வேவிற்கு (மியான்மர்) தென்-தென்மேற்கில் 1150 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது இன்று காலை அதே பகுதியில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவடைந்து புயலாக மாறியுள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புயலாக மாறிய பின், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக தீவிரமடைந்து இன்று இரவு தீவிர சூறாவளி புயலாக மாறும். தொடர்ந்து நாளை பகல் நேரத்தில் மத்திய வங்காள விரிகுடாவில் அதி தீவிர சூறாவளி புயலாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு, இது படிப்படியாக மீண்டு, மே 12ஆம் தேதி காலை முதல் வடக்கு-வடகிழக்கு திசையை நோக்கி நகர வாய்ப்புள்ளது. மே 13 ஆம் தேதி மாலையில் இருந்து சற்று வலுவிழந்து தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை கடக்கும் என் கூறப்பட்டுள்ளது. அது மேலும் நகர்ந்து மே 14 ஆம் தேதி காக்ஸ் பஜார் (வங்காளதேசம்) மற்றும் கியாக்பியு (மியான்மர்) இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது அதிகபட்சமாக 120-130 கிமீ வேகத்தில் அவ்வப்போது 145 கிமீ வேகத்தில் காற்று வீசுக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகும் புயலின் காரணமாக தமிழ்நாட்டில் மழை இருக்காது என தெரிவிக்கபட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
அந்தமான் கடல் பகுதிகள்: 11.05.2023 முதல் 12.05.2023 காலை வரை சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்: 11.05.2023 காலை முதல் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 12.05.2023 அன்று மணிக்கு 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 140 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 13.05.2023 அன்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தென் மேற்கு வங்கக்கடல் (தென்கிழக்கு வங்கக்கடல் ஒட்டிய பகுதிகள்): 11.05.2023 சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்: 11.05.2023 காலை முதல் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும், மாலை முதல் மணிக்கு 80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும், 12.05.2023 மாலை முதல் மணிக்கு 130 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 150 கிலோ மீட்டர் வேகத்திலும், 13.05.2023 அன்று மணிக்கு 140 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 160 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 14.05.2023 அன்று மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள்: 11.05.2023 அன்று மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும், 12.05.2023 அன்று மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 130 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 13.05.2023 அன்று மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.
வட கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்: 12.05.2023 அன்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து 13.05.2023 அன்று காலை மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும், மாலை முதல் 14.05.2023 காலைவரை மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 130 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.