Ponniyin Selvan Trailer Launch: பொன்னியின் செல்வன் ட்ரெய்லரை முதல்வர் வெளியிடுகிறாரா?
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிரத்னத்தின் கனவுப்படமான ‘பொன்னியின் செல்வன்’ பாகம் 1 செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
View this post on Instagram
அந்த அப்டேட்டின் படி பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ட்ரெய்லரை வெளியிடுகிறார் என்றும் சென்னையில் செப் 6ம் தேதியும், ஐதராபாத்தில் 8ம் தேதியும் பாடல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது என்றும் சொல்லப்படுகிறது.
பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முன்னதாக இப்படத்தின் டீசரை தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் கடந்த ஜூலை 8 ஆம் தேதி வெளியிட்டது.
தமிழ்நாடு தாண்டி பிறமொழி ரசிகர்களிடையும் இந்த டீசர் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஜூலை மாதம் தொடங்கி பொன்னியின் செல்வன் பட அப்டேட்களை தொடர்ந்து வழங்கி படக்குழு மகிழ்வித்து வரும் நிலையில், இப்படத்தின் முதல் பாடல் கடந்த ஜூலை மாதம் 31 ஆம் தேதி வெளியானது. இது தொடர்பான நிகழ்ச்சி சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்தது. இந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி, ஜெயராம், ஜெயம்ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். அதனைத்தொடர்ந்து அதன் மேக்கிங் வீடியோவும் வெளியிடப்பட்டது.
View this post on Instagram
கடந்த ஜூலை 16 ஆம் தேதி தமிழர்களின் பொற்கால வரலாற்றை வரலாற்றாசிரியர்கள், எழுத்தாளர்கள், வல்லுநர்கள் சொல்வது போல ஒரு வீடியோ வெளியானது. இதனையடுத்து சோழர் காலத்தைப் பற்றி பல தகவல்கள் அடங்கிய வீடியோவும், அருண்மொழிவர்மன் எப்படி ராஜராஜ சோழனாக மாறினார் என்பது தொடர்பான தகவல்கள் அடங்கிய வீடியோவும் முன்னதாக வெளியாகி வரவேற்பைப் பெற்றன.
2 பாகங்களாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படம் டீசர் வெளியிட்டு விழாவும் அன்றைய தினம் பிரமாண்டமாக சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள ட்ரேட் சென்டரில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய இயக்குநர் மணிரத்னம் கிட்டதட்ட 40 ஆண்டுகளாக இந்நாவலை மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறேன் என்றும், இதனை படமாக்க 3 தடவை முயன்றுள்ளேன் எனவும் தெரிவித்திருந்தார்