மேலும் அறிய

Ponniyin Selvan 2: அடேங்கப்பா..! 'புல்லரிக்கச் செய்யும் கமலின் குரல்..' பொன்னியின் செல்வன் 2 ஓபனீங் காட்சி ரிலீஸ்..!

பொன்னியின் செல்வன் படத்தின் 2 ஆம் பாகத்தில் இடம் பெறும் கமலின் தொடக்க உரையை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

பொன்னியின் செல்வன் படத்தின் 2 ஆம் பாகத்தில் இடம் பெறும் கமலின் தொடக்க உரையை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

எழுத்தாளர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இயக்குநர் மணி ரத்னத்தின் கைவண்ணத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த பொன்னியின் செல்வன் படம் வசூலில் 500 கோடியை தாண்டியதாக சொல்லப்படுகிறது.  

ஜெயம் ரவி, ஜெயராம்,  கார்த்தி, த்ரிஷா, பிரபு, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, பிரபு, லால்,ஜெயசித்ரா,நாசர், ரகுமான், கிஷோர் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் படத்துக்கான ப்ரோமோஷன்களும் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது.  

முன்னதாக  சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 29 ஆம் தேதி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் பங்கேற்றார். மேலும் அமைச்சர் துரை முருகன், இயக்குநர் பாரதிராஜா, நடிகர் சிலம்பரசன் என பலரும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் கமல்ஹாசன் பின்னணி குரலுடன் தொடங்கியது. இது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இந்நிலையில்  பொன்னியின் செல்வன் படத்தின் 2 பாகமும் கமலின் பின்னணி குரலுடன் தான் தொடங்குகிறது. அதனை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

மிரட்டும் கமலின் குரல்:

அந்த வீடியோவில், “ஆண்டு 968, சோழர்களின் பூமி ஒரு பெரும் போரை எதிர்நோக்கி கொண்டிருந்தது. ராஷ்ட்ரக்கூட மன்னன் கோத்திகன் தஞ்சையை தாக்க ஒரு பெரும்படையை திரட்டி கொண்டிருந்தான். வீரபாண்டியனின் சாவுக்கு பழிதீர்க்க பாண்டிய ஆபத்துதவிகள் சோழ நாட்டுக்குள் ஊடுருவியிருந்தது. சுந்தர சோழரின் பெரிய தந்தையான கண்டராதித்தரின் மகன் மதுராந்தகன், தன் தந்தையை விருத்தையும், தாயின் ஆணையையும் மீறி மணிமுடிக்காக வெறிகொண்டிருந்தான். 

சோழ நாட்டின் நிதியமைச்சர் பெரிய போர் வீரர் பெரிய பழுவேட்டரையரும், சிற்றரசர்களும் மதுராந்தகனுக்கு துணையாக நின்றனர். பெரிய பழுவேட்டரையரின் மனைவி நந்தினி, பாண்டிய ஆபத்துதவிகளுடன் சேர்ந்து சோழ நாட்டுக்கு எதிராக சதியில் இறங்கினாள். இளவரசன் அருண்மொழிவர்மனை இலங்கையில் இருந்து சிறைபிடித்து வர அரசரை கொண்டே ஆணை பிறப்பித்தாள். 

ஆனால் அருண்மொழியுடன் சோழ சிறைக்கலம் புயலில் சிக்கி கடலில் மூழ்கியது. அருண்மொழி இறந்ததாக பரவிய செய்தியால் நாடு கொந்தளித்தது. பொன்னியின் செல்வன் கடலில் மூழ்கியதுக்கு நந்தினியே காரணம் என ஆதித்ய கரிகாலன் வெறிகொண்டு தன் படையுடன் தஞ்சையை நோக்கி விரைந்தான்” என்ற வரிகள் இடம் பெற்றுள்ளது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Yellow Fever: தடுப்பூசி இல்லை என்றால் இந்தியாவுக்கு நோ எண்ட்ரி.. மஞ்சள் காய்ச்சல் அலர்ட்..
தடுப்பூசி இல்லை என்றால் இந்தியாவுக்கு நோ எண்ட்ரி.. மஞ்சள் காய்ச்சல் அலர்ட்..
PM Modi's Nomination: நாடாளுமன்ற தேர்தல் - வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!
PM Modi's Nomination: நாடாளுமன்ற தேர்தல் - வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!
11th Supplementary Exam: பிளஸ் 1 தேர்வு; ஜூலை 2 முதல் துணைத்தேர்வு- மே 15 முதல் மறுகூட்டல் / விடைத்தாள் நகல்
11th Supplementary Exam: பிளஸ் 1 தேர்வு; ஜூலை 2 முதல் துணைத்தேர்வு- மே 15 முதல் மறுகூட்டல் / விடைத்தாள் நகல்
Breaking News LIVE: ஐபிஎல் இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை - தேதி அறிவிப்பு
Breaking News LIVE: ஐபிஎல் இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை - தேதி அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge vs Modi  : Vindhya about Savukku Shankar : ”அதிமுகவுக்காக பேசிய சவுக்கு திமுக செய்வது சரியில்ல” - விந்தியாModi Varanasi Nomination  : மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல்! எளிமையாக வந்து அசத்தல்Savukku Shankar |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Yellow Fever: தடுப்பூசி இல்லை என்றால் இந்தியாவுக்கு நோ எண்ட்ரி.. மஞ்சள் காய்ச்சல் அலர்ட்..
தடுப்பூசி இல்லை என்றால் இந்தியாவுக்கு நோ எண்ட்ரி.. மஞ்சள் காய்ச்சல் அலர்ட்..
PM Modi's Nomination: நாடாளுமன்ற தேர்தல் - வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!
PM Modi's Nomination: நாடாளுமன்ற தேர்தல் - வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!
11th Supplementary Exam: பிளஸ் 1 தேர்வு; ஜூலை 2 முதல் துணைத்தேர்வு- மே 15 முதல் மறுகூட்டல் / விடைத்தாள் நகல்
11th Supplementary Exam: பிளஸ் 1 தேர்வு; ஜூலை 2 முதல் துணைத்தேர்வு- மே 15 முதல் மறுகூட்டல் / விடைத்தாள் நகல்
Breaking News LIVE: ஐபிஎல் இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை - தேதி அறிவிப்பு
Breaking News LIVE: ஐபிஎல் இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை - தேதி அறிவிப்பு
Cow Theft:
"பீப் கடைக்கு " மாடுகளை திருடிய பார்ட் டைம் திருடர்கள் ..! ஜெயிலுக்கு அனுப்பிய போலீஸ் ..!
Fact Check: மோடிக்கு எதிரான பேச்சு - பரப்புரையில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கப்பட்டாரா? உண்மை என்ன?
Fact Check: மோடிக்கு எதிரான பேச்சு - பரப்புரையில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கப்பட்டாரா? உண்மை என்ன?
TN TRB Recruitment 2024: விண்ணப்பித்துவிட்டீர்களா? உதவிப் பேராசிரியர் பணிக்கு 4000 பணியிடங்கள்- நாளையே கடைசி!
TN TRB Recruitment 2024: விண்ணப்பித்துவிட்டீர்களா? உதவிப் பேராசிரியர் பணிக்கு 4000 பணியிடங்கள்- நாளையே கடைசி!
TN 11th Exam Results 2024: +1 தேர்வு முடிவுகள் - 592 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்த மாணவி - சென்னை அரசு பள்ளிகள் நிலவரம்
TN 11th Exam Results 2024: +1 தேர்வு முடிவுகள் - 592 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்த மாணவி - சென்னை அரசு பள்ளிகள் நிலவரம்
Embed widget