Ponniyin Selvan Teaser: தமிழில் சூர்யா.. பொன்னியின் செல்வன் டீசர்.. சூப்பர் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்..
மலையாளத்தில் மோகன்லாலும், தெலுங்கில் மகேஷ் பாபுவும், கன்னடத்தில் ராக்ஷீத் ஷெட்டியும், இந்தியில் அமிதாப்பச்சனும் வெளியிட உள்ளனர்.

பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழா நாளை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. நாளை (ஜூலை. 07) மாலை ஆறு மணிக்கு சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இந்த டீசர் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் டீசலை சோஷியல் மீடியாவில் வெளியிடும் நட்சத்திரங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழில் நடிகர் சூர்யாவும், மலையாளத்தில் மோகன்லாலும், தெலுங்கில் மகேஷ் பாபுவும், கன்னடத்தில் ராக்ஷீத் ஷெட்டியும், இந்தியில் அமிதாப்பச்சனும் வெளியிட உள்ளனர்.
Thank You, Suriya Sir! @Suriya_offl#PS1🗡️ @madrastalkies_ @LycaProductions #ManiRatnam @arrahman @Tipsofficial @TipsRegional #TipsTamil pic.twitter.com/dJOVUURPeC
— Lyca Productions (@LycaProductions) July 7, 2022
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளிவருகிறது. முன்னதாக இப்படத்தின் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா கதாபாத்திரங்களின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும் இப்படம் குறித்த அப்டேட்கள் இந்த வாரம் முழுவதும் வெளியிடப்பட்டு வருகின்றன.கதாபாத்திரங்களின் லுக்கும் வெளியாகி வருகிறது.
Thank You, Mahesh Garu! @urstrulyMahesh#PS1🗡️ @madrastalkies_ @LycaProductions #ManiRatnam @arrahman @tipsofficial @TipsRegional #TipsTelugu pic.twitter.com/PjBaTJGRfA
— Lyca Productions (@LycaProductions) July 7, 2022
கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களாக பொன்னியின் செல்வன் வெளிவர உள்ள நிலையில், இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம் உள்ளிட்ட மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
முன்னதாக டீசர் வெளியீட்டையே பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் கதைக்களமான தஞ்சாவூரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் சில காரணங்களால் இத்திட்டம் கைவிடப்பட்டதாகவும் கூறப்பட்டது.
View this post on Instagram
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

