Pongal Clash Movies: சரவெடி பொங்கல் கேள்விப்பட்டு இருக்கீங்களா? பொங்கலுக்கு மோதும் படங்கள் என்னென்ன? இதோ வெளியான பட்டாசு லிஸ்ட்
Pongal Release Tamil Movies 2024: பொங்கல் 2024க்கு நேரடியாக மோதிக்கொள்ள வெளியாகும் தமிழ் படங்கள் என்னென்ன?
தீபாவளி முடிஞ்சாச்சு அடுத்து பொங்கல் தான். அப்போ கண்டிப்பா சக்கரை பொங்கலுடன் சேர்த்து என்னென்ன படங்கள் ரிலீசாகுது என்றும் தெரிஞ்சுக்கணும் இல்லையா. இந்த பொங்கல் தித்திக்கும் பொங்கல் மட்டுமல்ல சரவெடி பொங்கலும் தான். காரணம் ஒன்று அல்ல இரண்டல்ல மொத்தம் 11 பொங்கல் ரிலீஸ் படங்கள் நேரடியாக மோத களத்தில் குதிக்கின்றன. அதிலும் தமிழ் படங்கள் மட்டுமே 5 என்றால் பாத்துக்கோங்க...
கடந்த 2023ம் ஆண்டு பொங்கலுக்கு விஜயின் வாரிசு படமும் அஜித்தின் துணிவு படமும் ஒரே நாளில் பொங்கல் ஸ்பெஷல் ரிலீஸ் படங்களாக வெளியாகி தாறுமாறான வெற்றியை இரண்டு படங்களுமே பெற்றது. அந்த வகையில் பொங்கல் 2024க்கு என்னென்ன படங்கள் வெளியாக உள்ளன, மோதிக்கொள்ள போகின்றன என்பதை குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.
அயலான் :
ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏலியன் ஜானரில் உருவாகியுள்ள 'அயலான்' படத்தில் ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பலமுறை ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்ட நிலையில் உறுதியாக பொங்கலுக்கு வருகிறோம் என அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
அரண்மனை 4 :
சுந்தர்.சி இயக்கத்தில் 'அரண்மனை 4' படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, VTV கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கே ஜி எஃப் ராம், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஹாரர் கலந்த காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
கேப்டன் மில்லர் :
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வரலாற்று பணியில் உருவாகியுள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சிவராஜ்குமார், சுமேஷ் மூர் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனம் ஈர்த்தது. டிசம்பர் 15 வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது ரிலீஸ் தேதி தள்ளிப்போய் பொங்கலுக்கு வெளியாகும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
லால் சலாம் :
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கேமியோ ரோலில் ரஜினிகாந்த் நடிக்க விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'லால் சலாம்' திரைப்படம் பொங்கலுக்கு வெற்றி நடை போட உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை லைகா நிறுவனத்தின் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார்.
மெர்ரி கிறிஸ்துமஸ் :
ஸ்ரீராம் ராகவனின் இயக்கத்தில் இந்தி மற்றும் தமிழ் என இரு மொழிகளில் கத்ரீனா கைஃப் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'மெர்ரி கிறிஸ்துமஸ்' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இப்படத்தின் தமிழ் வர்ஷனில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கெவின் ஜெய் பாபு மற்றும் ராஜேஷ் வில்லியம்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இது தவிர குண்டூர் காரம், ஹனுமான், சைந்தவ், பேமிலி ஸ்டார், ஈகிள், நான் சாமி ரங்கா என மற்ற தென்னிந்திய படங்களும் சங்கராந்தி பண்டிகையை ஒட்டி வெளியாக உள்ளன.