மேலும் அறிய

Pongal Movie Release: இந்த 8 படங்கள் தான் பொங்கல் ரிலீஸ்.. உங்க சாய்ஸ் என்ன?

Pongal Movie Release 2024 : 2024 ஆம் ஆண்டு பிறந்தது முதலே அனைவரது எண்ணமும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகும் படங்கள் பற்றி தான் உள்ளது. நடப்பாண்டில் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15 ஆம் தேதி வருகிறது.

Pongal Movie Release: பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், திரையுலகில் வெளியாகவுள்ள புதிய படங்கள் பற்றி காணலாம். 

பண்டிகை தினம் என்றாலே அது புதுப்படங்கள் பார்க்காமல் முழுமை பெறாது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு பிறந்தது முதலே அனைவரது எண்ணமும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகும் படங்கள் பற்றி தான் உள்ளது. நடப்பாண்டில் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. முன்பெல்லாம் எந்த கிழமையாக இருந்தாலும் சரி பண்டிகை கால படங்கள் எல்லாம் சரியாக அந்த தினத்தில் தான் ரீலிசாகும். ஆனால் இப்போது நிலைமை எல்லாம் மாறிவிட்டது. 

2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை திங்கட்கிழமை வருகிறது. இதனால் வெள்ளிக்கிழமை (ஜனவரி 12) புதுப்படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் தேதி முதல் ஜனவரி 17 ஆம் தேதி வரை தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக படையெடுப்பார்கள் என்பது நிச்சயம். இதனை கருத்தில் கொண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் 8 படங்கள் என்னென்ன என பார்க்கலாம். 

கேப்டன் மில்லர் (Captain Miller)

தொடரி, பட்டாஸ், மாறன் படங்களை தொடர்ந்து சத்யஜோதி நிறுவனம் நடிகர் தனுஷை வைத்து 4வது முறையாக தயாரித்துள்ள படம் ‘கேப்டன் மில்லர்’. இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்திப் கிஷன், நிவேதிதா சதீஷ் , காளி வெங்கட், அதிதி பாலன், வினோஷ் கிஷன் என பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்த படம் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. வரலாற்று கதையில் வெளியான ட்ரெய்லரை பார்க்கும் போது கேப்டன் மில்லர் இந்த முறை நிச்சயம் பந்தயம் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அயலான் (Ayalaan)

கிட்டதட்ட நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த அயலான் படம் பொங்கலுக்கு வெளியாகிறது. ரவிகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்தி சிங், இஷா கோபிகர், யோகிபாபு, கருணாகரன், பால சரவணன், ஷரத் கேல்கர்,பானுப்ரியா என பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தின் ட்ரெய்லரை பார்க்கும் போது தரமான தமிழ் ஹாலிவுட் படம் பார்த்த ஃபீல் ஏற்படுவதாக  பலரும் தெரிவித்துள்ளனர். ஆக இந்த பொங்கல் அயலான் பொங்கல் தானா என்பது இன்னும் ஒரு சில நாளில் தெரிந்து விடும். 

மிஷன் சாப்டர் 1 (Mission Chapter 1)

ஏ.எல்.விஜய் இயக்கத்தில்  அருண் விஜய் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், இயல், அபி ஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம்  ‘அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1’.ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் ஆக்‌ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்து எடுக்கப்பட்டுள்ளது. 

மேரி கிறிஸ்துமஸ் (Merry Christmas)

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி இந்தியில் நடித்துள்ள படம் “மேரி கிறிஸ்துமஸ்”. இந்த படத்தை அந்தாதூன் படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக கத்ரீனா கைஃப் நடித்துள்ளார். மேலும் சஞ்சய் கபூர், வினய் பகத், ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ப்ரீதம் இசையமைத்துள்ளார். இந்த படம் தமிழில் டப் செய்யப்பட்டு 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

குண்டூர் காரம் (Guntur Kaaram)

தெலுங்கில் பிரபல இயக்குநராக உள்ள த்ரி விக்ரம் ஸ்ரீநிவாஸ் அடுத்ததாக, அந்த திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து எடுத்துள்ள படம் ‘குண்டூர் காரம்’. இந்த படத்தில் ஸ்ரீலீலா, மீனாட்சி சௌத்ரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு, ரம்யா கிருஷ்ணன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படம் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. 

நா சாமி ரங்கா (Naa Saami Ranga)

நாகார்ஜூனா ஹீரோவாக நடித்துள்ள ‘நா சாமி ரங்கா’ படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. பிரபல டான்ஸ் மாஸ்டர் விஜய் பின்னி இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தில் மிர்னா மேனன் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் ஆஷிகா ரங்கநாத், அல்லரி நரேஷ் என பலரும் நடித்துள்ளனர். எம்.எம்.கீரவாணி இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். 

சைந்தவ் (Saindhav)

தெலுங்கில் சைலேஷ் கோலானு இயக்கத்தில் வெங்கடேஷ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆர்யா, நவாசுதீன் சித்திக், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள ஆக்‌ஷன் த்ரில்லர் படமான “சைந்தவ்” படம் ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். 

ஹனுமான் (Hanuman) 

தெலுங்கில் இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் நடிகர் தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வினய் ராய் உள்ளிட்டோர் நடித்து வெளியாகவுள்ள படம் “ஹனுமான்”. இப்படத்துக்கு அனுதீப் தேவ், கௌராஹரி, கிருஷ்ணா சௌரப் ஆகியோர் இசையமைத்துள்ளனர். இந்த படம் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
TN Rain Update: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களில் கனமழை, அப்ப சென்னை? - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
TN Rain Update: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களில் கனமழை, அப்ப சென்னை? - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
"கேவலமா இருக்கு" டங்ஸ்டன் விவகாரம்.. முதல்வர் ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட இபிஎஸ்!
விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி! உளவுத்துறையை லெஃப்ட் ரைட் வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி! உளவுத்துறையை லெஃப்ட் ரைட் வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ’’நான் ஓயமாட்டேன்..மன்னர் பரம்பரை ஒழியணும்’’ஆதவ் அர்ஜுனா பரபரAadhav Arjuna Suspend | விஜய்யுடன் ரகசிய சந்திப்பு ஆதவ்-ஐ தூக்கியடித்த திருமா காரணம் என்ன? | VijayAadhav Arjuna Suspend : “எனக்கு பதவி கொடுங்க விஜய்”ஆதவ் போடும் CONDITION ஷாக்கில் புஸ்ஸி ஆனந்த்!Aadhav Arjuna Suspended: 6 மாதம் சஸ்பெண்ட்.. ஆதவ் அர்ஜூனா மீது Action.. திருமாவளவன் அதிரடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
TN Rain Update: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களில் கனமழை, அப்ப சென்னை? - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
TN Rain Update: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களில் கனமழை, அப்ப சென்னை? - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
"கேவலமா இருக்கு" டங்ஸ்டன் விவகாரம்.. முதல்வர் ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட இபிஎஸ்!
விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி! உளவுத்துறையை லெஃப்ட் ரைட் வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி! உளவுத்துறையை லெஃப்ட் ரைட் வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
"ஆயிரம் கைகள் மறைத்தாலும்.. ஆதவ(ன்) மறைவதில்லை" ஆதவ் அர்ஜுனா பரபரப்பு ட்வீட்!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
Embed widget