விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி! உளவுத்துறையை லெஃப்ட் ரைட் வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
இதக்கூட கவனிக்க மாட்டிங்களா என்று உளவுத்துறை தலைமையை அழைத்த ஸ்டாலின் லெப்ட் அண்ட் ரைட் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் வேங்கைவயல் விவகாரத்தை கையில் எடுத்த விஜய் அங்கே நீதிக்காக போராடியவர்களை மேடையேற்றி தமிழ் நாடு முழுவதும் திமுக இந்த விவகாரத்தில் கோட்டைவிட்டு விட்டது என்பதை எடுத்துச் சென்று விட்டார். இந்த நிலையில் விஜய் இது போன்ற ஒரு விஷயத்தை செய்ய இருக்கிறார் என்று ஏன் கணிக்க தவறினீர்கள் என்று ஸ்டாலின் கடுகடுத்துள்ளார்.
எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்னும் புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் மற்றும் வாய்ஸ் ஆப் காமன் ஆதவ் அர்ஜூனா இருவரும் திமுகவை பந்தாடியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய்,“சமூக நீதி பேசும் இங்கு இருக்கும் அரசு, வேங்கைவயல் விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுத்ததுபோலவே எனக்கு தெரியவில்லை. இத்தனை வருடங்கள் கடந்தும் ஒரு துரும்பைக் கூட கிள்ளி போடவில்லை. மக்கள் உணர்வுகளை மதிக்கத் தெரியாத, அடிப்படை சமூக நீதியான பாதுகாப்பை கூட உறுதி செய்ய இயலாத கூட்டணி கட்சிகளை கைக்குள் போட்டுக்கொண்டு அவர்களை நம்பி இருமாப்புடன் 200 தொகுதிகளை வெல்வோம் என எகத்தாளம் முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடும் எச்சரிக்கை.”என்று ஒரே பாலில் திமுக விசிக இரண்டு கட்சிகளையும் ஆட்டம் காண செய்துவிட்டார். அது மட்டுமின்றி வேங்கைவயல் விவகாரத்தில் போராடியவர்களை விஜய் மேடை ஏற்றி பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.
இதை கண்ட திமுக ஆட்டம் கண்டுவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சியோ திருமாவளவன் நேராடியக வேங்கைவயல் சென்று அங்கு மக்களை சந்தித்தார் திமுகவிற்கு அழுத்தம் கொடுத்தார் என்று முட்டுக் கொடுத்தனர். ஆனால் திமுகவால் இதற்கு எந்தவிதமான பதிலையும் சொல்ல முடியவில்லை.
இதனால் இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் கடுமையாக அப்செட் ஆகியுள்ளார். வழக்கமாகவே ஒரு முக்கியமான நிகழ்வு நடைபெற இருக்கிறது என்றால் உளவுத்துறை தரப்பில் நிகழ்ச்சியில் யார் பங்கேற்க இருக்கிறார்கள் என்ன மாதிரியான விசயங்கள் பேசப்பட இருக்கிறது அரசுக்கு எதிரான கருத்துக்கள் இடம் பெறுமா என்ற ரிப்போர்ட்டுகள் அரசிற்கு வழங்கப்படும்.
அதிலும் விஜய் அரசியல் அறிவிப்பை வெளியிட்டது முதல், விஜய்-ன் மாநாடு அடுத்தக்கட்ட நகர்வுகள் என அனைத்தையும் உளவுத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. குறிப்பாக விஜயின் ரிப்போர்ட்டுகள் முதல்வர் ஸ்டாலினின் மேஜைக்கு செல்கிறது. திமுக விஜய் விவகாரத்தை இவ்வளவு உண்ணிப்பாக கவனித்து வரும் நிலையில் வேங்கைவயல் விவகாரத்தை விஜய் பேசப்போகிறார் அதற்கு போராடியவர்களை மேடை ஏற்றி கெளரவிக்க போகிறார் என்பது எப்படி மிஸ் ஆனது, என்ற கேள்வி தான் முதல்வர் ஸ்டாலினின் ஆதங்கத்திற்கு காரணம்.
இதனால் உளவுத்துறை ஐஜி மற்றும் தலைமைச் செயலாளலரை அழைத்த முதல்வர் ஸ்டாலின் இதை எப்படி கவனிக்காமல் விட்டீர்கள் என்று கடுகடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக சமீபத்தில் நடந்த விமான சாகஷ நிகழ்ச்சியில் அதிகப்படியான மக்கள் கூடியதால் ஏற்பட்ட சிக்கல்கள், கள்ளக்குறிச்சி கள்ளச் சாரய விவகாரத்தில் முதலில் தவறான தகவல்களை அதிகாரிகள் அளித்தது, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கொள்ள சதித்திட்டம் போட்டதை கனிக்கத் தவறியது என உளவுத்துறையின் செயல்பாடுகள் ஸ்டாலினுக்கு அவ்வளவு திருப்திகரமானதாக இல்லை. இந்த நிலையில் உளவுத்துறை தலைமையை மாற்றுவதற்கான ஆலோசனைகளை ஸ்டாலின் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.