மேலும் அறிய

"ஆயிரம் கைகள் மறைத்தாலும்.. ஆதவ(ன்) மறைவதில்லை" ஆதவ் அர்ஜுனா பரபரப்பு ட்வீட்!

தொண்டர்களின் குரலாக தான் எப்போதும் இருப்பேன் என விசிகவில் இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து இடைக்காலமாக நீக்கப்பட்ட அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, "ஆயிரம் கைகள் மறைத்தாலும், ஆதவ(ன்) மறைவதில்லை" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 
 
கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்த முதல்முறையாக கருத்து பதிவிட்டுள்ள அவர், "ஆயிரம் கைகள் மறைத்தாலும், அதிகாரத்தை அடைவோம்’ என்று எழுச்சித் தமிழர் எந்த முழக்கத்தோடு இந்த கட்சியைக் கட்டமைத்தாரோ அந்த அதிகாரத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடனே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் எனது பயணத்தைக் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பித்தேன்.
 
"தொண்டர்களின் குரலாக எப்போதும் இருப்பேன்"
 
எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பினை உணர்ந்து கொள்கை உறுதிப்பாட்டுடன் கட்சியை அடுத்தகட்டத்திற்கு வளர்த்தெடுக்கும் பணியினையே நான் முழுமையாக மேற்கொண்டேன். கட்சியின் பிரச்சார வியூகத்தையும் கொள்கை வழியிலேயே கட்டமைத்தேன்.
 
நான் கட்சியில் என்ன பணி செய்தேன் என்பதை அடிமட்ட தொண்டர்களாய் களமாடும் தோழர்கள் நன்கு அறிந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அந்த தொண்டர்களின் குரலாக நான் எப்போதும் இருப்பேன்.
 
தலைவரின் கையெழுத்திட்ட துணைப் பொதுச்செயலாளர் என்கிற பொறுப்பு கடிதம் கிடைக்கப்பெற்ற போது என்ன மனநிலையில் இருந்தேனோ, அதே மனநிலையில் இப்போது தலைவரின் கையெழுத்துடன் வெளியாகியுள்ள எனது இடைநீக்கம் குறித்த கடிதத்தையும் எதிர்கொள்கிறேன்.
 
தலித் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற முழக்கத்தை அந்த மக்களுக்கான அதிகாரம் கிடைக்கும் வரை தொடர்ந்து முழங்கிக்கொண்டு இருப்பதே நேர்மையான மக்கள் அரசியலாக இருக்கும் என்ற எனது உள்ளார்ந்த எண்ணத்தை தோழர்கள் மத்தியில் இப்போதும் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன்.
 
ஆதவ் அர்ஜுனா சொன்னது என்ன?
 
குறிப்பாக, 'ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கும் மனநிலைதான் மன்னர் பரம்பரைக்கான மனநிலை' என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த மக்களுக்கான அதிகாரத்தைத் தட்டிப்பறிக்கும் அந்த மனநிலையை எதிர்காலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் உடைத்தெறிந்து, ஜனநாயக வழியில் அதைப் பெறும் போராட்டத்தில் பங்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுவேன்.
 
கருத்தியல் வழியாகத் தோன்றும் தலைவர்களே மக்களுக்கான ஆட்சியாளர்களாக விளங்க முடியுமே தவிர, பிறப்பால் அல்ல என்ற கொள்கையில் உறுதியாகப் பயணிக்கிறேன். மக்களே ஜனநாயகத்தின் நீதிபதிகள். கருத்தியல் பேசிக்கொண்டு ஊழலை உருவாக்கும் போலி கருத்தியல்வாதிகளை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்திக் காட்டுவோம்.
 
மத பெரும்பான்மைவாதம், சாதி ஆதிக்கம், பெண்ணடிமைத்தனம், சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல், எளிய மக்களுக்கு எதிரான ஆதிக்க மனநிலை என இந்த சமூகத்தில் தொடர்ந்து நடந்துவரும் அநீதிகளுக்கு எதிரான என்னுடைய குரல் சமரசமில்லாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
 
புரட்சியாளர் அம்பேத்கர், பெரியார், அண்ணா ஆகியோரின் கருத்துக்களை உள்வாங்கி அரசியல் பயணத்தைத் துவங்கினேன். அந்த கொள்கைகளின் வழியில் எனது பயணம் எப்போதும் தொடரும். புரட்சியாளர் அம்பேத்கர் சுட்டிக்காட்டியது போல், ‘சிந்திப்பதற்கான சுதந்திரமே, உண்மையான சுதந்திரம்’ என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டு புதிய ஜனநாயகத்தை உருவாக்குவோம்.
 
எனது சிறுவயதிலிருந்து ஏமாற்றம், தோல்விகள், இழப்புகள் எனக் காலம் தந்த நெருக்கடிகளே என்னை உத்வேகத்துடன் பயணிக்கச் செய்தன. கட்சித் தலைமையின் இந்த நடவடிக்கையினையும் அந்த காலத்தின் கரங்களில் ஒப்படைக்கிறேன். ஆயிரம் கைகள் மறைத்தாலும், ஆதவ(ன்) மறைவதில்லை" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Donald Trump: நிறைமாத கர்ப்பிணிகள் அலறல், ட்ரம்பை கூப்பில் உட்கார வைத்த நீதிமன்ற உத்தரவு - இந்தியர்கள் ஹாப்பி
Donald Trump: நிறைமாத கர்ப்பிணிகள் அலறல், ட்ரம்பை கூப்பில் உட்கார வைத்த நீதிமன்ற உத்தரவு - இந்தியர்கள் ஹாப்பி
Donald Trump: ஆத்தி..! உலக நாடுகளை மிரட்டும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.. உற்பத்தியா? வரியா?
Donald Trump: ஆத்தி..! உலக நாடுகளை மிரட்டும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.. உற்பத்தியா? வரியா?
Oscar Nominations 2025 Academy Awards: சூர்யாவின் கனவு கலைந்தது.. தூக்கி வீசப்பட்ட கங்குவா.. ஆஸ்கர் விருதுக்கான இறுதி பரிந்துரை பட்டியல்
Oscar Nominations 2025 Academy Awards: சூர்யாவின் கனவு கலைந்தது.. தூக்கி வீசப்பட்ட கங்குவா.. ஆஸ்கர் விருதுக்கான இறுதி பரிந்துரை பட்டியல்
இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Lorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | MaduraiTVK Member Audio | RN Ravi Praised Tamilnadu | ”தமிழ்நாடு தான் BESTபெண்கள் பாதுகாப்பா இருக்காங்க” RN ரவி புகழாரம் | DMKCongress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Donald Trump: நிறைமாத கர்ப்பிணிகள் அலறல், ட்ரம்பை கூப்பில் உட்கார வைத்த நீதிமன்ற உத்தரவு - இந்தியர்கள் ஹாப்பி
Donald Trump: நிறைமாத கர்ப்பிணிகள் அலறல், ட்ரம்பை கூப்பில் உட்கார வைத்த நீதிமன்ற உத்தரவு - இந்தியர்கள் ஹாப்பி
Donald Trump: ஆத்தி..! உலக நாடுகளை மிரட்டும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.. உற்பத்தியா? வரியா?
Donald Trump: ஆத்தி..! உலக நாடுகளை மிரட்டும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.. உற்பத்தியா? வரியா?
Oscar Nominations 2025 Academy Awards: சூர்யாவின் கனவு கலைந்தது.. தூக்கி வீசப்பட்ட கங்குவா.. ஆஸ்கர் விருதுக்கான இறுதி பரிந்துரை பட்டியல்
Oscar Nominations 2025 Academy Awards: சூர்யாவின் கனவு கலைந்தது.. தூக்கி வீசப்பட்ட கங்குவா.. ஆஸ்கர் விருதுக்கான இறுதி பரிந்துரை பட்டியல்
இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
IND Vs ENG 2nd T20: சென்னை சேப்பாக்கம் மைதானம் எப்படி? இந்தியா சாதிக்குமா? இதுவரை நடந்த போட்டிகளின் விவரங்கள்
IND Vs ENG 2nd T20: சென்னை சேப்பாக்கம் மைதானம் எப்படி? இந்தியா சாதிக்குமா? இதுவரை நடந்த போட்டிகளின் விவரங்கள்
கேலி செய்த எம்.ஜி.ஆரையே தக்லைஃப் செய்த வாலி! ஜாம்பவான்களுக்குள் நடந்தது என்ன?
கேலி செய்த எம்.ஜி.ஆரையே தக்லைஃப் செய்த வாலி! ஜாம்பவான்களுக்குள் நடந்தது என்ன?
PM Modi: மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு  - திருமாவை சாடிய அன்புமணி
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு - திருமாவை சாடிய அன்புமணி
Embed widget