மேலும் அறிய
Advertisement
Pokkiri Re-release Trailer : ”ஒருவாட்டி முடிவு பண்ணிட்டேன்னா” 4k டிஜிட்டல் தரத்தில் வெளியானது 'போக்கிரி' ரீ ரிலீஸ் டிரைலர்
Pokkiri Re-release Trailer : நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கும் 'போக்கிரி' படத்தின் டிரைலர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த ஆண்டை காட்டிலும் 2024ம் ஆண்டு தமிழ் சினிமா சற்று சரிவை சந்தித்துள்ளது. அதற்கு காரணம் ஸ்டார் நடிகர்களின் படங்கள் கூட பாக்ஸ் ஆபீஸில் பெரிய அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் அதே வேளையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படங்கள் தற்போது புது பொலிவுடன் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு பட்டையை கிளப்பும் அளவுக்கு வசூலை குவித்து வருகிறது.
அந்த வரிசையில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியான 'கில்லி' திரைப்படம் திரையரங்கில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு பிரமாண்டமான வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து பிரபுதேவா இயக்கத்தில் விஜய், அசின், பிரகாஷ்ராஜ், நாசர், நெப்போலியன், வடிவேலு, ஸ்ரீமன், முகேஷ் திவாரி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான 'போக்கிரி' ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
ஒரு சில பிளாக் பஸ்டர் படங்கள் மோசமான ஆடியோ மற்றும் குறைந்த காட்சி தரத்தில் இருந்தால் பெரிய அளவில் மக்களிடம் வரவேற்பை பெற தவறியது. அதனால் விஜயின் 'போக்கிரி' படத்தை 4k டிஜிட்டல் வடிவத்தில் ரீ ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் விஜய் ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டும் வகையில் மேம்பட்ட டிஜிட்டல் தளத்தில் போக்கிரி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஜூன் 21ம் தேதி அவரின் திரை பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்த 'போக்கிரி' படத்தை திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த செய்து விஜய் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய பர்த்டே ட்ரீட்டாக அமைந்துள்ளது. 17 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான விஜய் படத்தை இன்றைய காலகட்டத்து ரசிகர்களும் மிகவுமார்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion