Playback singer Srilekha: ‛இதயம் நல்லெண்ணெய் தான் வாழ்க்கை கொடுத்துச்சு..’ பாடகி ஸ்ரீலேகா பகிர்ந்த கதை!
இதயம் நல்லெண்ணெய் விளம்பரம் தன்னை எப்படி ஒரு பின்னணி பாடகியாக மாற்றியது என்பது பற்றி ஸ்ரீலேகா பகிர்ந்து இருக்கிறார்.
![Playback singer Srilekha: ‛இதயம் நல்லெண்ணெய் தான் வாழ்க்கை கொடுத்துச்சு..’ பாடகி ஸ்ரீலேகா பகிர்ந்த கதை! Playback singer Srilekha shares how the jyothika idhayam oil advertisement turned her into a playback singer. Playback singer Srilekha: ‛இதயம் நல்லெண்ணெய் தான் வாழ்க்கை கொடுத்துச்சு..’ பாடகி ஸ்ரீலேகா பகிர்ந்த கதை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/06/75aa62f61cb04c148708268745fb59771659782024_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இதயம் நல்லெண்ணெய் விளம்பரம் தன்னை எப்படி ஒரு பின்னணி பாடகியாக மாற்றியது என்பது பற்றி ஸ்ரீலேகா பகிர்ந்து இருக்கிறார்.
ஶ்ரீலேகா பேசும் போது, “ நான் அரசு விளம்பரங்கள், ஆன்மீகம் சமந்தமான கவர் சாங்ஸ் அப்படின்னு பாடிட்டு இருந்தேன். ஒரு கட்டத்தில் எனக்கு ரொம்ப போரடிச்சிட்டு. அப்பதான் பின்னணி பாடகியாகலாம்னு முடிவெடுத்தேன். மும்பைக்குதான் போக ஆசைப்பட்டேன். ஆனா அப்பா அந்த விஷயத்துல ரொம்ப ஸ்கிரிட்டா சென்னைதான் போகணும்னு சொல்லிட்டாரு. அந்த தேடலோடு சென்னை வந்தேன்.
View this post on Instagram
இங்க வந்ததுக்கு அப்புறமா, பாடுனதெல்லாத்தையும் சீடியில் பதிவு பண்ணி இசையமைப்பாளர்கள் எல்லாத்துட்டையும் கொடுத்திட்டு இருந்தேன். அப்ப இசையமைப்பாளர் கோபி சுந்தர் எனக்கு இதயம் நல்லெண்ணெய் விளம்பரத்தோட ( ‘தினந்தோறும் வாங்குவேன் இதயம்’) ஜிங்கிள பாடுவதற்கான வாய்ப்பை கொடுத்தாரு. முதல்ல இந்த ஜிங்களை வேறொரு பிரபல சிங்கர்தான் பாடுறத இருந்துச்சு.
View this post on Instagram
அவங்களால அன்னைக்கு வரமுடியல, அதனால அந்தப்பாட்டோட ட்ராக்கை நான் பாடுனேன். அந்த ட்ராக்கை கேட்ட புரொடியூசர் லேகா ரத்னம்குமார் இந்த வாய்ஸ் யாரோடதுன்னு கேட்க, இங்க இருந்து டெல்லியிலிருந்து லேகா அப்படிங்கிற பொண்ணுன்னு சொல்லியிருக்காங்க. அவர் பொன்னோட பேரும் லேகா அப்படிங்கிறதால உடனே அவரு கனெக்ட் ஆகிருச்சு. 2 நாளு யோசிச்சி பார்த்தவரு, என்னோட வாய்சே இருக்கட்டும்னு சொல்லிட்டாரு. லேசா லேசா படத்துல ‘ஏதோ ஒன்று’ பாட்டுக்கும் இதே மாதிரிதான் நடந்துச்சு. இதயம் நல்லெண்ணெய்க்காக நான் பாடுன கேட்டுதான் அவரு அந்த வாய்ப்ப ஹாரிஸ் எனக்கு கொடுத்தாரு” என்று பேசினார். தொடர்ந்து பல பாடல்களை பாடிய அவர் சின்னத்திரையிலும் நடித்தார். விஜய் டிவியில் தர்மயுத்தம் சீரியலில் அறிமுகமான இவர், ஜீ டிவியின் ரஜினி சீரியலிலும் நடித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)