Pichaikkaran 2: 'எல்லாம் முடிஞ்சதுனு நினைச்சேன்..' கண்கலங்கிய விஜய் ஆண்டனி மனைவி..! சசிக்கு நன்றி சொன்ன விஜய் ஆண்டனி..!
பிச்சைக்காரன் 2 ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி, மன்சூர் அலிகான், பாரதிராஜா, பாக்யராஜ், இயக்குநர் சசி, மோகன் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
![Pichaikkaran 2: 'எல்லாம் முடிஞ்சதுனு நினைச்சேன்..' கண்கலங்கிய விஜய் ஆண்டனி மனைவி..! சசிக்கு நன்றி சொன்ன விஜய் ஆண்டனி..! pichaikkaran 2 movie pre release event vijay antony sasi bhagyaraj bharathiraja vijay antony wife speech details Pichaikkaran 2: 'எல்லாம் முடிஞ்சதுனு நினைச்சேன்..' கண்கலங்கிய விஜய் ஆண்டனி மனைவி..! சசிக்கு நன்றி சொன்ன விஜய் ஆண்டனி..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/16/760371544ac25a9da4e26a84d858f4d71684241386063574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன்-2' திரைப்படம் வரும் 19ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி, சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. இதில் விஜய் ஆண்டனி, மன்சூர் அலிகான், பாரதிராஜா, பாக்யராஜ், இயக்குநர் சசி, மோகன் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பிச்சைக்காரன் 2:
விழாவின் இடையில் அயோத்தி பட இயக்குநர் மந்திரமூர்த்தி, டாடா பட இயக்குநர் கணேஷ் கே.பாபு, யாத்திசை பட இயக்குநர் தரணி ராசேந்திரன் ஆகியோர் பிச்சைக்காரன்-2 படக்குழுவால் விழா மேடையில் கவுரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து விழாவில் விஜய் ஆண்டனியின் மனைவி ஃபாத்திமா மேடையில் பேசுகையில், “இறைவனுக்கு நன்றி. உங்களைப் போல நிறைய உள்ளங்கள் எங்களுக்காக உள்ளீர்கள். மாட்டு பொங்கல் அன்று மலேசியாவில் இருந்து விஜய் ஆண்டனி உதவியாளர் என்னை தொடர்பு கொண்டால் சாருக்கு விபத்து ஏற்பட்டது. தண்ணீர் மூழ்கி விட்டதால் என தொலைபேசியை கட் செய்து விட்டார்.
என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இங்குள்ள பத்திரிக்கையாளர்கள் பலர் எனக்கு பாசிடிவ்வாக சொன்னார்கள். இப்போது இங்கு அவர் உள்ளார், கடவுளின் செயல் மற்றும் உங்களின் ஆசிர்வாதம் தான். அவர் கடவுள் சார்ந்து இருப்பதில்லை, ஆனால் எல்லா நல்ல விஷயங்களையும் செய்வார். அவருக்கு பின்னால் இருப்பது மகிழ்ச்சி. அவரை திருமணம் செய்தது மகிழ்ச்சி. உங்கள் அனைவருக்கும் நன்றி” என உணர்ச்சிகரமாகப் பேசினார்.
தொடர்ந்து பிச்சைக்காரன் முதல் பாகத்தின் இயக்குநர் சசி மேடையில் பேசுகையில், “இந்தக் கதையை இவரிடம் சொல்வதற்கு முன்பு 4, 5 பேரிடம் கூறினேன். எல்லோரும் பிச்சைக்காரனின் கதையாகப் பார்த்தார்கள். ஆனால் விஜய் ஆண்டனிதான் பணக்காரனின் கதையாக பார்த்தார்.
விஜய் ஆண்டனி இசையமைப்பதற்காக ஒரு கேள்வி கேட்டு, இந்த கதையில் ஒரு திருப்பத்தை கொண்டு வந்தார். நூறு சாமிகள் என்ற பாடல் அனைவரிடமும் இருக்கிறது என்றால் அது விஜய் ஆண்டனியின் பங்கு தான்” என்றார்.
தொடர்ந்து, விஜய் ஆண்டனி மேடையில் பேசுகையில், பிச்சைக்காரன் படம் நீங்கள் (சசி) போட்ட பிச்சை. இந்தப் படம் இயக்க எனக்கு விருப்பம் இல்லை. இதை நீங்கள் தான் பண்ண வேண்டும் என நினைத்தேன். கதை எழுதி விட்டேன். 10 நாள் முதலில் சரியாக வரவில்லை. இயக்கத்தை இந்தப் படத்தில் கற்றுக் கொண்டேன். பிச்சைக்காரனில் சசி என்ன செய்தாரோ அதே எமோஷனலை காபி செய்து வைத்தது தான் பிச்சைக்காரன்-2 படம் எடுத்துள்ளேன்” என்றார்.
இந்த விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் பாரதிராஜா பேசியதாவது: “60 ஆண்டுகளுக்கு மேலாக இந்தத் திரைப்பயணத்தை கடந்து விட்டோம். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார் தானே... எதுக்கு படம் என நினைப்பேன். பிச்சைக்காரன் படத்தை பார்த்தேன். அருமை. கமர்ஷியலாக இதன் எல்லை எங்கே போகும் என்றே தெரியாது. சூப்பர்.
எனக்கு பாக்யராஜ் இல்லை என்றால் நிறைய விஷயங்கள் இல்லாமல் போயிருக்கும். அதனால் writer மிக முக்கியம். பாக்யராஜ் ஒரு சிறந்த எழுத்தாளர். விஜய் ஆண்டனி நல்ல இசையமைப்பாளர். எனக்கு இது இரண்டாம் வாழ்க்கை. போன மாதம் முன்புதான் பிழைத்து வந்தேன். பெயரிலேயே விஜய், வி - வெற்றி, ஜெய்-வெற்றி. இந்த படத்தின் வெற்றி விழாவில் பாரதிராஜாவும் வருவேன். பாக்யராஜும் வருவார்” எனப் பேசினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)