மேலும் அறிய

Pichaikaran 2: பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் பிச்சைக்காரன் 2..! நாளுக்கு நாள் எகிறும் வசூல்...!

விஜய் ஆண்டனி இயக்கி, நடித்துள்ள பிச்சைக்காரன் 2 படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த 19 ஆம் தேதி திரையரங்குகளில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பிச்சைக்காரன் 2 திரைப்படம் முதல் நாள் நல்ல வசூலை எட்டியுள்ளதைத் தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களிலும் நல்ல வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிச்சைக்காரன் 2:

2016ஆம் ஆண்டு  விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி பிச்சைக்காரன் படம் மிகப்பெரும் வெற்றி பெற்ற நிலையில், அதன் தொடர்ச்சியாக பிச்சைக்காரன் 2 தற்போது வெளியாகியுள்ளது.

அம்மா சென்டிமென்ட்டை மையமாக வைத்து வெளியான பிச்சைக்காரன் படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தெலுங்கில் ‘பிச்சகாடு’ என்ற பெயரிலும், இந்தியில் ‘ரோட்சைட் ரவுடி’ என்ற பெயரிலும் இந்தப் படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் பிச்சைக்காரன் 2 படம் தங்கை செண்டிமெண்ட், மூளை மாற்று அறுவை சிகிச்சை என செண்டிமெண்ட், ஆக்‌ஷன், த்ரில்லர் கலந்து விஜய் ஆண்டனியின் இயக்கத்திலேயே வெளியாகியுள்ளது. நேற்று தெலுங்கிலும் பிச்சகாடு 2 என்ற பெயரில் இப்படம் வெளியானது.

18 கோடி வசூல்:

தமிழைவிட இப்படத்துக்கு தெலுங்கில் பிரம்மாண்ட ஓப்பனிங் அமைந்துள்ளதாக  தகவல் வெளியானது . இந்நிலையில் பிச்சைக்காரன் 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் சேர்த்து முதல் நாள் 6 கோடிகள் வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியது.

முதல் நாளான  தமிழில் 2.55 கோடிகளும், தெலுங்கில் 3.45 கோடிகளும் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்களை வெளியிடும் sacnilk தளம் தகவல் பகிர்ந்துள்ளது. முதல் நாளைத் தொடர்ந்து அடுத்த இரண்டு வார இறுதி நாட்களிலும் இந்தப் படம் நல்ல வசூலை ஈட்டியுள்ளது.

ரசிகர்கள் வரவேற்பு:

இரண்டாவது நாளில் இந்தியளவில் 5.65 கோடிகளும் மூன்றாவது நாளாக 6.3 கோடிகளும் வசூல் செய்துள்ளது.வெளியான நாளில் இருந்து இதுவரை மொத்தம் 17.95 கோடிகள் இந்தியா முழுவதிலும் வசூல் செய்துள்ளது பிச்சைக்காரன் 2 திரைப்படம். தொடர்ந்து இந்த வார வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பிச்சைக்காரன் 2 படம் வசூலில் பணக்காரனாக மிளிரும் என்று எதிர்பார்க்கலாம்.  சுமார் 20 கோடிகள் செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் முதல் நாளே 6 கோடிகள் வரை வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .தற்போது மொத்தம் மூன்று நாட்களில் 18 கோடி வரை படத்தின் வசூல் நெருங்கியிருக்கிறது. மேலும் அடுத்த வாரம் வரை படம் நல்ல வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப் படுகிறது. 

முன்னதாக பிச்சைக்காரன் 2 திரைப்படம் தன் ஆய்வுக்கூடம் படத்தி்ன் கதை எனவும், இதற்காக விஜய் ஆண்டனி ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கூறி ராஜகணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், தன் படம் வெளியாவதைத் தடுக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், தனக்கு   பொருளாதார ரீதியாக இழப்பு மற்றும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக விஜய் ஆண்டனி ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

ஊருக்கே சோறு போட்டேன்.. என் மகனை விட்டுட்டேன்.. கண்ணீர் மல்க பேசிய சூரியின் அம்மா!
ஊருக்கே சோறு போட்டேன்.. என் மகனை விட்டுட்டேன்.. கண்ணீர் மல்க பேசிய சூரியின் அம்மா!
"வடிவேலு மண்டைக்கனமா மாறிட்டான்.." விட்டு விளாசிய சுறா தயாரிப்பாளர் சங்கிலிகருப்பு!
"அரசியல் வேண்டாம்னு விஜய்கிட்ட அரைமணி நேரம் பேசுனேன்.." உடைத்துப் பேசிய சுறா தயாரிப்பாளர்
விஜயகாந்த் - எஸ்ஏ சந்திரசேகர் கூட்டணியில் உருவான படங்கள் இத்தனையா? எத்தனை ஹிட்?
விஜயகாந்த் - எஸ்ஏ சந்திரசேகர் கூட்டணியில் உருவான படங்கள் இத்தனையா? எத்தனை ஹிட்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: உதயநிதி அப்செட்..! மாஜி அமைச்சர்களின் அதிகாரம் பறிப்பு - வைகோ காலத்திற்கு பிறகு திமுகவில் மாற்றம்?
உதயநிதி அப்செட்..! மாஜி அமைச்சர்களின் அதிகாரம் பறிப்பு - வைகோ காலத்திற்கு பிறகு திமுகவில் மாற்றம்?
Annamalai: டாக்ஸிக் படத்தை எல்லாம் பார்த்தால்..! கடுப்பாகி பேசிய அண்ணாமலை - என்ன காரணம் தெரியுமா?
டாக்ஸிக் படத்தை எல்லாம் பார்த்தால்..! கடுப்பாகி பேசிய அண்ணாமலை - என்ன காரணம் தெரியுமா?
Railway Fine: ரயில்களில் இனி இதையெல்லாம் செய்யாதிங்க..! புதிய அபராதங்களை அறிவித்த ரயில்வே நிர்வாகம் - முழு லிஸ்ட்
ரயில்களில் இனி இதையெல்லாம் செய்யாதிங்க..! புதிய அபராதங்களை அறிவித்த ரயில்வே நிர்வாகம் - முழு லிஸ்ட்
Nepal Flood: நேபாளம் பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்.. முதற்கட்டமாக 21 பேர் சென்னை வருகை!
Nepal Flood: நேபாளம் பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்.. முதற்கட்டமாக 21 பேர் சென்னை வருகை!
Mahindra BaaS: XEV 9S, XEV 9e SUV-க்களின் விலையை லட்சங்களில் குறைத்த மஹிந்த்ரா - என்ன மாற்றம்? காரணம் என்ன?
XEV 9S, XEV 9e SUV-க்களின் விலையை லட்சங்களில் குறைத்த மஹிந்த்ரா - என்ன மாற்றம்? காரணம் என்ன?
"விஜய் தொகுதியில் 462 அடுக்குமாடி குடியிருப்புகள்..." வீட்டு வசதி வாரியத்தில் மெர்சலான 20 அறிவிப்புகள்
"அரசியல் வேண்டாம்னு விஜய்கிட்ட அரைமணி நேரம் பேசுனேன்.." உடைத்துப் பேசிய சுறா தயாரிப்பாளர்
Rasi Palan Today (29-08-2026): தேய்பிறை பிரதமை.. இந்த 5 ராசிகள் கவனமா இருங்க.. இன்றைய பலன்கள் இதோ!
Rasi Palan Today (29-08-2026): தேய்பிறை பிரதமை.. இந்த 5 ராசிகள் கவனமா இருங்க.. இன்றைய பலன்கள் இதோ!
Embed widget