Pavani Reddy: முகப்பரு நிறைய வந்துருச்சு.. அமீருக்கும் எனக்கும் என்ன கனெக்ஷன்.. லைவ்வில் எமோஷனல் ஆன பாவனி..
பாவனி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக்பாஸ் பற்றியும் அமீர் குறித்தும் என பல விஷயங்களை பேசியிருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இதில் ராஜு ஜெயமோகன், இமான் அண்ணாச்சி, பிரியங்கா, தாமரை செல்வி, அக்ஷரா, நிரூப், சிபி சந்திரன், வருண், ஐக்கி பெர்ரி, இசை வாணி உள்ளிட்டோர் போட்டியாளர்களாக பங்கேற்றனர். அமீர், சஞ்சீவ் உள்ளிட்டோர் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றனர்.
இவர்களில் ராஜு, பிரியங்கா, பாவ்னி, அமீர், நிரூப் ஆகிய ஐந்து பேரும் இறுதி போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த ஐந்து பேரில் ராஜு ஜெயமோகன் டைட்டில் வின்னராகவும், பிரியங்கா ரன்னராகவும் வெற்றி பெற்றனர். மூன்றாவது வெற்றியாளராக பாவனி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
View this post on Instagram
சீசன் முடிந்த நிலையில் பாவனி அபிஷேக், அபினய், மதுமிதா, சுருதி, வருண், அக்ஷரா, அமீர், ஆகியோருடன் பார்ட்டிக்கு சென்று புகைப்படங்களை பதிவிட்டார். இந்த நிலையில் பாவனி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக்பாஸ் பற்றியும் அமீர் குறித்தும் பல விஷயங்களை பேசியிருக்கிறார். வீடியோ சுட்டி கீழே..
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்