Dindigul I.Leoni Speech: ‛நித்யானந்தாவுக்கும் விவேகானந்தருக்கும் இது தான் வித்தியாசம்’ -திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு!
PanniKutty movie: பன்னி குட்டி, அனுசரண் இயக்கிய திரைப்படம். இதில் யோகி பாபு மற்றும் கருணாகரன், ராமர், தங்கதுரை, ஐ.லியோனி, லட்சுமிபிரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அனுசரண் முருகையன் இயக்கிய நகைச்சுவைத் திரைப்படம் பன்னி குட்டி. இதில் யோகி பாபு மற்றும் கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், மேலும் சிங்கம்புலி, ராமர், தங்கதுரை, திண்டுக்கல் ஐ.லியோனி, லட்சுமிபிரியா மற்றும் டி.பி.கஜேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கே படத்திற்கு இசையமைக்கிறார். அத்திரைப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் திமுகவைச் சேர்ந்த பட்டிமன்ற நடுவரும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவருமான ஐ.லியோனி கூறுகையில்,
”சூப்பர் டாகிஸின் ரொம்ப அருமையான தயாரிப்பில், ஜூலை 8ஆம் தேதி வெளியாக இருக்கும் பன்னிக்குட்டி என்ற படத்துல இவங்கள்லாம் நடித்திருக்கிறார்கள் என்பது, இங்க வந்து தான் எனக்கு தெரியும். ஏனென்றால் என் காட்சியில் ஒரு குறிப்பிட்ட ஆட்களோட தான் நான் நடித்தேன். கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்னாடி ஷூட் பண்ண படம், இப்போ தான் வெளிவருவது என்பது ரொம்ப மகிழ்ச்சியான விஷயம். இருபத்தியோரு வருஷங்களுக்கு முன்னாடி கங்கா கௌரி படத்தில் வடிவேலுக்கும், அருண் விஜய்க்கும் அப்பா கேரக்டரில் நடித்தேன். அதற்குப் பிறகு நிறைய பட வாய்ப்புகள் வந்தது. சிவாஜி படத்தில சூப்பர் ஸ்டாருக்கு மாமனாராக நடிக்கிற வாய்ப்பு வந்தது. அப்போ ஸ்கூல் ஆசிரியராய் இருந்ததால சினிமால நடிக்க எனக்கு லீவ் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. ரிசைன் பண்ணிட்டு போ, இல்ல வேலையை பாரு என்ற நெருக்கடி ஆனதால் , அப்படத்துல நடிக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு இல்லாம போச்சு. அதுக்கப்புறம் இந்த படத்துல அனுசரண் சார் வந்து என்னை சூஸ் பண்ணதுக்கு அவருக்கு பெரிய நன்றியை தெரிவிக்கிறேன்.
நான்தான் பட்டிமன்ற நடுவர், எல்லோருக்கும் பேச வாய்ப்பு கொடுப்பேன். எனக்கு இங்கு பேச வாய்ப்பு கொடுத்திருக்கிறார் தங்கதுரை. நீங்க முதல்ல பேசுங்க, பின்னர் நாங்கள்லாம் பேசுறோம் என பெல் அடிச்சி வாய்ப்பு கொடுத்திருக்கிறார். உண்மையிலேயே இதுவும் ஒரு புது அனுபவம்தான். இந்த இடத்துல பத்திரிக்கையாளர்களுக்கு மற்றும் ஊடக மக்களுக்கு வணக்கம்.
இந்தப் படத்துல என்னை எப்படி தேர்ந்தெடுத்தார்கள் என்றால், எனக்காக இந்த சாமியார் பாத்திரத்தை டிசைன் பண்ணிருக்காங்கனு சொன்னார். நாங்க மேடையில் நிறைய பேசி இருக்கோம். பட்டிமன்றம் மேடையில் ஒரு பேச்சாளர் திடீரென்று என்னிட்ட கேட்டார், நித்யானந்தாவிற்கும் விவேகானந்தருக்கும் என்ன வித்தியாசம் என்று. இப்போ என்ன சொன்னாலும் மாட்டிப்பேன்.. ஏன்னா விவேகானந்தர் ஒரு மிகப்பெரிய லெஜெண்ட், நித்யானந்தா எப்படினு நம்ம எல்லாருக்கும் தெரியும். இரண்டு பேரையும் இணைத்து என்ன வித்தியாசம் என்று கேட்கிறார்கள். இதான் எங்க பொழப்பு, இந்த மாதிரி ஒரு கேள்விக்கு நான் சொன்ன பதில், விவேகானந்தர் அவர் சீடர்களால் பிரபலமானார், நித்தியானந்தா அவர் சீடிகளால் பிரபலமானார் என்று. உடனே எல்லாருக்கும் ஒரே சிரிப்பு. பிறகு நான் சொன்னேன் சீடருக்கு பெண்பால், சீடி கிடையாது, சீடி என்றால் காம்பாக்ட் டிஸ்க் என்று. க்வாட்டர் சாமியார், விலக்குமாறு சாமியார், சாக்கடை சாமியார் போன்ற பல சாமியார்களை பத்திரிக்கையாளர்கள் ஆகிய நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் எனக்கு ஒரு சாமியார் பாத்திரத்தை டைரக்டர் கொடுத்திருக்கிறார். லியோனிக்கு சாமியார் பாத்திரம் குடுத்து எப்படி நடிக்கிறார் பாக்கணும்னு திட்டம்போட்டு எனக்கு கொடுத்திருக்கிறார் அனுசரண் சார்.
Also Read | Rishi Sunak : இங்கிலாந்து பிரதமர் ஆவாரா இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்? யார் இவர்?
அனுசரணோட மிகப்பெரிய ரசிகர்களில் நானும் ஒருவன்.காரணம் கிருமி படத்தில் அவர் கொடுத்த அற்புதமான மெசேஜ், அது எந்த டைரக்டரும் கொடுக்காதது. 21 வருடங்களுக்கு அப்புறம் ஒரு டைரக்டரோடு நான் நடிக்க ஆசைப்பட்டு நடிச்ச ஒரு டைரக்டர் என்னுடைய தம்பி அனுசரன். நெறைய டென்ஷனான டைரக்டர்களை பார்த்து இருக்கேன்,ஆனா எந்தவித டென்ஷன் பதற்றமும் இல்லாமல் கூலாக டைரக்ட் பண்ண முடியும் என்ற பல டைரக்டர்களில் என் தம்பி அருண்சரன் ஜம். அவருடன் வேலை செய்த அனுபவம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க அனுபவமாக இருந்தது. என் கூட வேலை செய்த என் தம்பிகள் தங்கதுரை,ராமர், கருணாகரன் எனக்கு ரொம்ப பிடிக்கும் . அதுவும் கருணாகரன் குரல் மிகவும் பிடிகும், ஒரு கதாநாயகனாக்கு அவர் குரல் ரொம்ப முக்கியம். அதே மாதிரிஅந்த முழி இருக்கு பாத்தீங்களா, அந்த முழி பல மெசஜ்களை சொல்லக்கூடிய ஒரு முழி. 21 வருஷங்களுக்கு அப்புறம் நான் ரசிக்கிற ஒரு ஹீரோவோட நடிச்சது எனக்கு மிகவும் சந்தோஷம்.
என் தம்பி ராமருடன் நடிச்சது எனக்கு நிஜமான மகிழ்ச்சி. நான் நிறைய பேரை சிரிக்க வைத்து இருக்கேன், ஆனால் என்னையே சிரிக்க வைத்தார் என் தம்பி ராமர். இவங்க எல்லாருடன் நடிச்சது எனக்கு ரொம்ப பெருமை. பன்னிக்குட்டி, இந்த பெயரை கேட்டாலே ஏன் அப்படி வெச்சிருக்காங்கனு இருக்கும். அந்த விலங்கு ஒரு நல்ல சகுனத்தை குருக்க கூடிய ஒரு விலங்கு இல்லையே,அத பெயராக வெச்சிருக்காங்களேன்னு இருக்கும். இந்தப் பெயரில் எவ்வளவு அழகு இருக்கு தெரியுமா.
முதல் வார்த்தை பன்னி இருக்கும் அது நம்மை எத்தனை இடத்தில் காப்பாற்றக்கூடிய வார்த்தை தெரியுமா. ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு ரொம்ப அற்புதமாக பயன்படுத்தும் ஒரு வார்த்தை. வீட்டில் நாம் நேசிக்கிறவர்களை குட்டி என்று தான் கூப்பிடுவோம். எனவே அது ஒரு விலங்கை குறிப்பிடும் பேராக நான் பார்க்கவில்லை. இரண்டு அழகிய சொற்கள் சேர்ந்த ஒரு பெயராக தான் நான் பார்க்கிறேன். அதுவும் ரிலீஸ் டேட் 8, நிறைய பேரு 8 வேணாம் சொல்லுவாங்க , ஆனால் ப்ரொடியூசர் தைரியமா எட்டாம் தேதியில் ரிலீஸ் பண்ணுவது அவருடைய துனிச்சலை காமிக்கிறது. அதே மாதிரி இந்த படம் ஒரு வெற்றி படமாக மாறும் நான் நம்புறேன். இந்த படத்தில் ஒரு நல்ல மெசேஜ் என்னவென்றால் நம்பிக்கைகள் கொடுக்கிறது ரொம்ப முக்கியம். ஒரு சொல் கொள்ளும் ஒரு சொல் வெல்லும். ஒரு சொல் வெல்லும் தான் வாழ்க்கை உடைய திருப்புமுனையாக டைரக்டர் இந்த படத்தில மிக அழகாய் சொல்லி இருக்கிறார்.”
அத்துடன் அவர் படத்தின் குழுவிற்கு தனது நன்றிகள் மற்றும் வாழ்த்துகளையும் கூறி தனது பேச்சை முடித்தார்.