மேலும் அறிய

Pathu Thala Teaser: 'ரஹ்மான் பாயின் சம்பவத்துக்கு தயாராகுங்க..' பத்து தல டீசரால் ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்த சிம்பு

”இப்போது தான் டீசர் பாத்தேன். பாயின் சம்பவத்துக்கு அனைவரும் தயாராகுங்கள்” என ஏ.ஆர்.ரஹ்மானைக் குறிப்பிட்டு சிம்பு உற்சாகமாகப் பதிவிட்டுள்ளார்.

பத்து தல படத்தின் டீசர் அப்டேட் வெளியாகி சிம்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

பத்து தல:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சிலம்பரசன் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக சிம்பு நடிப்பில் ’பத்து தல’ படம் விரைவில் ரிலீசாகவுள்ளது. ஏஜிஆர் எனும் கதாபாத்திரத்தில் பத்து தல படத்தில் சிம்பு நடிக்கும் நிலையில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. 

மார்ச் 30 ரிலீஸ்:

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களை இயக்கிய கிருஷ்ணா இப்படத்தை இயக்கியுள்ள நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 2017ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் ஹிட் அடித்த மஃப்டி படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள பத்து தல படத்தில் பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கலையரசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முன்னதாக பத்து தல படம் கடந்த டிசம்பர் 14 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிப்போனது.  தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 30 என அறிவிக்கப்பட்டதுடன், சிம்புவின் பிறந்த நாள் பிப்ரவரி 3 ஆம் தேதி அன்று, பத்து தல படத்தின் முதல் பாடலாக ’நம்ம சத்தம்’ பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

மிரட்டப்போகும் டீசர்:

நள்ளிரவு 12.06 மணிக்கு வெளியான இந்த பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாடியிருந்தார். பாடலாசிரியர் விவேக் வரிகளை எழுயிருந்த நிலையில், இப்பாடல் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதேபோல் முன்னதாக இந்தப் படத்தின் கதாபாத்திரங்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் ஹிட் அடித்தன. இது குறித்து “என்ன ரத்தங்களா ஹேப்பியா, நீங்க இல்லாம நான் இல்ல” எனப் பதிவிட்டு சிம்பு தன் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.  

வரும் மார்ச் 18ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமான முறையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக முன்னதாகத் தகவல் வெளியானது. ஆனால் படத்தின் இசை, ட்ரெய்லர் வெளியீடு குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதனால் சிம்பு ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் ஆழ்ந்திருந்தனர். இந்நிலையில்,  அவர்களை மகிழ்விக்கும் வகையில் நாளை பத்து தல படத்தின் டீசர் வெளியாகும் என ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பாயின் சம்பவம்:

மேலும் இது குறித்து பதிவிட்டுள்ள நடிகர் சிம்பு, ”இப்போது தான் டீசர் பாத்தேன். பாயின் சம்பவத்துக்கு அனைவரும் தயாராகுங்கள்... இவ்வளவு தான் சொல்ல  முடியும்” என ஏ.ஆர்.ரஹ்மானைக் குறிப்பிட்டு உற்சாகமாகப் பதிவிட்டுள்ளார்.

சிம்புவின் இந்த ட்வீட் அவரது ரசிகர்களை உற்சாகக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்

Embed widget