மேலும் அறிய

Pathu Thala First Single Glimpse Video: வெளியானது 'நம்ம சத்தம்' கிளிம்ப்ஸ் வீடியோ... ஏ.ஆர். ரஹ்மான் குரலில் 'பத்து தல' பர்ஸ்ட் சிங்கிள்..

நடிகர் சிலம்பரசன் நடித்துள்ள பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ”நம்ம சத்தம்” பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள சிலம்பரசன் தற்போது பத்து தல படத்தில் நடித்து வருகிறார். சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். இந்த படம் கன்னட படமான மஃப்டியின் ரீமேக் ஆகும். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

Pathu Thala First Single Glimpse Video: வெளியானது 'நம்ம சத்தம்' கிளிம்ப்ஸ் வீடியோ... ஏ.ஆர். ரஹ்மான் குரலில் 'பத்து தல' பர்ஸ்ட் சிங்கிள்..

சிம்பு பர்த்டே ஸ்பெஷல் :

கடந்த டிசம்பர் மாதம் 'பத்து தல' திரைப்படம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் படப்பிடிப்பு முடியாத காரணத்தால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்ட தற்போது மார்ச் 30ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம். அந்த வகையில் நடிகர் சிம்புவின் பிறந்தநாள் நாளை பிப்ரவரி 3ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான "நம்ம சத்தம்" பாடலை நாளை வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இந்த பாடலை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார்.

ஃபர்ஸ்ட் சிங்கிள் கிளிம்ப்ஸ் :

பத்து தல படத்தின் முதல் பாடலான ”நம்ம சத்தம்” என தொடங்கும் பாடல் பிப்ரவரி 3 ஆம் தேதி நண்பகல் 12.06 மணிக்கு வெளியாகும் என நேற்று தெரிவித்து இருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். அதனை தொடர்ந்து "நம்ம சத்தம்" பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். முழுப்பாடல் சிம்புவின் பிறந்தநாளான நாளை வெளியாகும். இந்த கிளிம்ப்ஸ் வீடியோ சிம்பு ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்துள்ளது. 

சிம்புவின் மாஸ் ரீ-என்ட்ரி :

நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகர் சிலம்பரசன் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பரில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் வெளியானது. இதையடுத்து, கடந்தாண்டு ஹன்சிகா முதன்மை வேடத்தில் நடித்த மஹா படத்தில் சிறப்பு தோற்றத்திலும், இதனை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் ஹீரோவாகவும் சிம்பு நடித்திருந்தார். இதில் வெந்து தணிந்தது காடு படம் சிம்புவுக்கு சிறப்பான வெற்றியை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வெற்றியை தொடர்ந்து பத்து தல திரைப்படம் ஹாட்ரிக் வெற்றி கொடுக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. 

தலைப்பு செய்திகள்

Rajinikanth Video: ஆட்டோவில் வந்த சூப்பர் ஸ்டார்.! ஆர்ப்பரித்த ரசிகர்கள்.! மைசூரில் ‘தர்மன்‘ ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரல்
ஆட்டோவில் வந்த சூப்பர் ஸ்டார்.! ஆர்ப்பரித்த ரசிகர்கள்.! மைசூரில் ‘தர்மன்‘ ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரல்
Amala paul: டிரஸ் இல்லாமல் நான் நடிக்கவே மாட்டேன் சாமி.. பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல.. பதறிய அமலாபால்!
Amala paul: டிரஸ் இல்லாமல் நான் நடிக்கவே மாட்டேன் சாமி.. பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல.. பதறிய அமலாபால்!
Baththa Review: கேங்ஸ்டராக அசத்தினாரா விஜய் சேதுபதி? எப்படி இருக்கு அட்லீயின் பத்தா? திரைப்பட விமர்சனம்
கேங்ஸ்டராக அசத்தினாரா விஜய் சேதுபதி? எப்படி இருக்கு அட்லீயின் பத்தா? திரைப்பட விமர்சனம்
ஜெயிலர் 2 ஆல்பம் ரிவியூ: மாஸ் முதல் கிளாசிக்கல் வரை கலக்கும் அனிருத்
ஜெயிலர் 2 ஆல்பம் ரிவியூ: மாஸ் முதல் கிளாசிக்கல் வரை கலக்கும் அனிருத்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பணத்துக்காக போய் மாட்டிக்காதீங்க.! ரஷ்யா செல்லும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை
பணத்துக்காக போய் மாட்டிக்காதீங்க.! ரஷ்யா செல்லும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை
Dharapuram by Election : தாராபுரம் பிரச்சார மேடையில் சத்யபாமாவின் காதில் சொன்னது இது தான்.! ராஜ்மோகன் பரபரப்பு விளக்கம்
தாராபுரம் பிரச்சார மேடையில் சத்யபாமாவின் காதில் சொன்னது இது தான்.! ராஜ்மோகன் பரபரப்பு விளக்கம்
ப்ளீஸ் வேண்டாம் விட்டுடுங்க.. தாலி கட்டிய பொண்டாட்டிணு கூட பார்க்காமல்.. அண்ணனும், கணவரும் மாறி மாறி.!
ப்ளீஸ் வேண்டாம் விட்டுடுங்க.. தாலி கட்டிய பொண்டாட்டிணு கூட பார்க்காமல்.. அண்ணனும், கணவரும் மாறி மாறி.!
Vijay Speech: ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
Amudha IAS : ’நெல் கொள்முதல் தேக்கம் – பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்’ ரூல்ஸ் ராமனுஜமாக அமுதா ஐ.ஏ.எஸ்..!
’நெல் கொள்முதல் தேக்கம்' பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்..!
Rajinikanth Video: ஆட்டோவில் வந்த சூப்பர் ஸ்டார்.! ஆர்ப்பரித்த ரசிகர்கள்.! மைசூரில் ‘தர்மன்‘ ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரல்
ஆட்டோவில் வந்த சூப்பர் ஸ்டார்.! ஆர்ப்பரித்த ரசிகர்கள்.! மைசூரில் ‘தர்மன்‘ ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரல்
DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு கிடைக்குமா.? நம்பிக்கையை கொடுத்த அந்த புள்ளிவிவரம் என்ன.?
மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு கிடைக்குமா.? நம்பிக்கையை கொடுத்த அந்த புள்ளிவிவரம் என்ன.?
ASIAN GAMES : ஆடவர் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி... மற்றுமொரு தங்கத்தை எதிர்நோக்கி ரசிகர்கள்...
ASIAN GAMES : ஆடவர் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி... மற்றுமொரு தங்கத்தை எதிர்நோக்கி ரசிகர்கள்...
Embed widget