மேலும் அறிய

Pathu Thala: 'லூசுப் பெண்ணே... லவ் ஆந்தம்....மூன் வாக்...' பத்து தல விழாவில் பட்டையை கிளப்பிய சிம்பு - ரசிகர்கள் உற்சாகம்

புது லுக்கில் காளை பட ஹேர்ஸ்டைலில் வருகை தந்திருந்த சிம்பு, இசை வெளியீட்டு விழாவில் நடனமாடியும், பாடியும் தன் ரசிகர்களை மகிழ்வித்தார்.

நடிகர் சிம்புவின் அடுத்த படமான பத்து தல திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை பிரம்மாண்டமாக நடைபெற்றது.

கன்னட படமான முஃப்தி படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தில் சிம்புவுடன் பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ் மேனன், டீஜே, அனு சித்தாரா, கலையரசன் உள்ளிட்ட பலர்- இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது,  ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 

பெற்றோருடன் வருகை

நேற்று மாலை தொடங்கி இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்ற நிலையில், நடிகர் சிம்பு இந்த விழாவுக்கு தன் பெற்றோர் டி.ராஜேந்தர் - உஷா ஆகியோருடன் வருகை தந்திருந்தார்.

மேலும் தன் புது லுக்கில் காளை பட ஹேர்ஸ்டைலில் வருகை தந்திருந்த சிம்பு, இசை வெளியீட்டு விழாவில் நடனமாடியும், பாடியும் தன் ரசிகர்களை மகிழ்வித்தார்.

பாட்டு, நடனம்

முதலில் நடன அமைப்பாளர் சாண்டி சிம்பு இசையமைத்துப் பாடிய லவ் ஆந்தம் பாடலுக்கு பெர்ஃபார்ம் செய்த நிலையில், மேடையை விட்டு கீழிறங்கி நடிகர் சிம்புவையும் இந்தப் பாடலுக்கு ஆட வைத்தார். இது அங்கிருந்த சிம்பு ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.

அதேபோல், விழா முடியும்போது தன் பேச்சை முடித்துவிட்டு, தன் ரசிகர்களுக்காக எனக் கூறி வல்லவன் படத்தில் இடம்பெற்ற லூசுப் பெண்ணே பாடலை பாடத் தொடங்கினார். தொடர்ந்து அந்த்ப் பாடலுக்கு மேடையில் நடனமாடியும் மூன் வாக் செய்தும் தன் ரசிகர்க்ளை உற்சாகப்படுத்தினார்.

வழக்கத்துக்கு மாறாக இசை வெளியீட்டு விழாவில் சிம்புவின் இந்த பெர்ஃபாமன்ஸ் அவரது ரசிகர்களைக் கவர்ந்து லைக்ஸ் அள்ளி வருகிறது. 

 

’கௌதம் கார்த்திக்குக்காக நடித்தேன்’

முன்னதாக இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சிம்பு, “இந்தப் படம் தொடங்கியபோது கஷ்டமான சூழலில் இருந்தேன். நான் வீட்டுக்குள்ளேயே இருப்பதாக அப்போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறினார்.  ஒரு மனுஷன் வீட்டில் இருந்தாலும் பிரச்சினையா என கவலைப் பட்டேன். அதன்பின் கொஞ்ச நாள் கழித்து இந்தப் படம் பண்ண கேட்டார். கன்னட படத்தோட ரீமேக் இந்தப் படம் எனக் கூறினார்கள்.

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடித்த பாத்திரத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லிட்டேன். ஆனால் இந்தப்படத்தில் இப்போது நடித்துள்ளதற்கு முக்கியக் காரணம் கௌதம்  கார்த்திக். எனக்கு படம் பிடித்திருந்தால்  சிறிய படம் பெரிய படம் என்றெல்லாம் பார்க்காமல் அந்தப் படத்தில் நடித்தவர்களை கூப்பிட்டு பாராட்டுவேன். ஏனென்றால் இங்கு தட்டி விடுவதற்கு நிறைய பேர் உள்ளார்கள். தட்டிக் கொடுக்கதான் யாருமே இல்லை. ஆனால் என்னைத் தட்டிக் கொடுக்க என் ரசிகர்கள் உள்ளனர். 

இந்தப் படம் எனக்கு வெற்றியாக இருக்குமோ இல்லையோ, கௌதம் கார்த்திக்குக்கு வெற்றியாக அமையும். அவருக்காக மட்டுமே இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என நினைத்தேன்” என்று நடிகர் சிம்பு பேசிமுடித்தார்.

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget