Pathaan Box Office: ரூ.1000 கோடியை நெருங்கும் பதான்.. உலகளவில் பட்டையக்கிளப்பும் வசூல்.. இந்தியாவில் மட்டும் இத்தனை கோடியா?
இந்தியாவில் ரூ.511 கோடி வசூலித்த எஸ்.எஸ்.ராஜமௌலியின் பாகுபலி 2: தி கன்க்ளூஷனுக்கு பிறகு, 500 கோடி வசூலைத் தாண்டிய முதல் பாலிவுட் படமாக பதான் இருக்கும்.
கடந்த ஜனவரி 25ஆம் தேதி பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில் உருவான பதான் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி சக்கைபோடு போட்டு வருகிறது. படம் வெளியாவதற்கு முன்பே பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும், சர்ச்சைகளுக்கு மத்தியிலும் பலத்த வரவேற்புடன் படம் வெளியானது. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கானின் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், அதே அளவிற்கு வசூலிலும் பல சாதனைகளை படைத்து வருகிறது.
இந்தநிலையில் பதான் திரைப்படம் இந்தியில் மட்டுமே 475 கோடி வசூலை எட்டியுள்ள நிலையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மொத்தமாக இந்தியாவில் 493 கோடியை கடந்துள்ளது. அதேபோல், பதான் உலகளவில் சுமார் 950 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இப்படம் உலக அளவிலான வசூலில் விரைவில் 1000 கோடி வசூலை எட்டி விரைவில் ரூ. 1000 கோடி கிளப்பில் நுழையவும் இருக்கிறது.
#Pathaan Worldwide In Crores #ShahRukhKhan #Pathan
— Box Office Worldwide (@BOWorldwide) February 14, 2023
Day 1:106
Day 2:113.5
Day 3:93.5
Day 4:116
Day 5:112
Day 6:48
Day 7:41
Day 8:33
Day 9:29
Day 10:33
Day 11:51
Day 12:52
Day 13:17
Day 14:16
Day 15:12
Day 16:11
Day 17:13
Day 18:23
Day 19: 22
Day 20: 7
Total: 953 crores https://t.co/P061rhFlVe pic.twitter.com/rDiGhQwmBw
அதேபோல், 500 கோடியை இந்த படம் கடந்தால், இந்தியாவில் ரூ.511 கோடி வசூலித்த எஸ்.எஸ்.ராஜமௌலியின் பாகுபலி 2: தி கன்க்ளூஷனுக்கு பிறகு, 500 கோடி வசூலைத் தாண்டிய முதல் பாலிவுட் படமாக பதான் இருக்கும்.
பதான்:
ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் ஆகியோர் முதன்முறையாக பதான் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை சித்தார்த் ஆனந்த் எழுதி இயக்க, யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இது YRF ஸ்பை யுனிவர்ஸின் நான்காவது பாகமாகும், மேலும், கடந்த 2018 ம் ஆண்டு வெளியான ஜீரோ படத்திற்கு பிறகு ஷாருக் கான் இந்த படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு கடந்த ஜனவரி 25, 2023 அன்று வெளியிடப்பட்டது. இந்த படத்தில் சல்மான் கான் கேமியோ ரோலில் நடித்தார். இப்படத்தில் ஷாருக்கான் RAW பீல்ட் ஏஜெண்டான பதான் ஆக நடித்துள்ளார். பதான் படத்தின் இசையை விஷால்-சேகர் இசையமைக்க, மேலும் சஞ்சித் பல்ஹாரா மற்றும் அங்கித் பல்ஹாரா ஆகியோர் பின்னணி இசையமைத்துள்ளனர்.
King Khan #Shahrukh Khan𓀠's #Pathan movie has been a super duper hit. #InShaAllah
— AISHA KHAN (@aisha786_khan) February 13, 2023
Now Coming #Jawan will be Super Hit. pic.twitter.com/SnCBz8yarf
இதற்கிடையில் நடிகர் ஷாருக்கான், ராஜ்குமார் ஹிரானியின் டன்கி மற்றும் அட்லீயின் ஜவான் உட்பட இரண்டு திரைப்படங்களை இந்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.