மேலும் அறிய

''கடந்த ஜென்மத்தில் சோழனாக பிறந்திருப்பேனோ'' - பெருமிதப்பட்ட நடிகர் பார்த்திபன்

போன ஜென்மத்தில் நான் சோழனாக ஏதும் பிறந்திருப்பேனோ என்னவோ தெரியவில்லை. இதுபோன்று வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்று பெருமிதத்துடன் நடிகர் பார்த்திபன் தெரிவித்தார்.

இந்தியா முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘பொன்னியின் செல்வன் பாகம்-1’ திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகி உள்ளது. கதைக்களமாக இடம் பெற்றுள்ள தஞ்சையில் திரையரங்குகளை ரசிகர்கள் திருவிழா போன்று அலங்கரித்து வெடி, வெடித்து உற்சாகத்துடன் கொண்டாடினர்.எழுத்தாளர் கல்கி எழுதிய மிகவும் புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள படம் பொன்னியின் செல்வன்-1 படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

'கடந்த ஜென்மத்தில் சோழனாக பிறந்திருப்பேனோ'' - பெருமிதப்பட்ட நடிகர் பார்த்திபன்

படத்தின் திரைக்கதையை மணிரத்னமும் குமரவேலும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன், கலை - தோட்டா தரணி. பிரமாண்ட பொருட்செலவில் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பொன்னியின் செல்வன்-1 இன்று உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாகி உள்ளது.

படத்தின் முதல் காட்சி இன்று காலை 4.30 மணிக்கு திரையிடப்பட்டது. தஞ்சை திரையரங்குகளில் அதிகாலை முதலே குவிந்த ரசிகர்கள் பேனர்கள், கட் அவுட்கள் வைத்து, மேள தாளத்துடன் கொண்டாடினர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தஞ்சையில் இன்று ரசிகர்களுடன் அமர்ந்து ஆரவாரத்துடன் நடிகர் பார்த்திபன் பார்த்து ரசித்தார். பின்னர் அவர் தஞ்சாவூர் பெரிய கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோயில் அருகில் உள்ள இராஜராஜ சோழன் சிலைக்கு நடிகர் பார்த்திபன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். 

'கடந்த ஜென்மத்தில் சோழனாக பிறந்திருப்பேனோ'' - பெருமிதப்பட்ட நடிகர் பார்த்திபன்
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சை மண்ணிற்கு என்னுடைய வணக்கம். ராஜராஜ சோழனின் பெருமையை சொல்லி நம்மால் மாளாது. ஆயிரம் ஆண்டுகளாக சொல்லி வருகிறோம். ராஜராஜன் செய்த சாதனைகளை இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அப்படியே நிலைத்து நிற்கும். பெரிய கோயிலை பார்க்கும்போது அவர்கள் எவ்வாறு ரசனையோடு வாழ்ந்து இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அதே ரசனையோடு தான் இந்த பொன்னியின் செல்வன் இருக்கும். இந்த பொன்னியின் செல்வனை நாம் கொண்டாட வேண்டியது, பாராட்ட வேண்டியது இந்த தஞ்சை மண்ணில் தான். இது ஒரு பான் இந்தியா படம். அதனால் ஒவ்வொருவரும், ஒவ்வொரு இடத்திற்கு சென்று உள்ளார்கள். இதில் நடித்த நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்.

'கடந்த ஜென்மத்தில் சோழனாக பிறந்திருப்பேனோ'' - பெருமிதப்பட்ட நடிகர் பார்த்திபன்

ஆயிரத்தில் ஒருவனுக்குப் பிறகு இதுபோல் வாய்ப்பு அமைந்துள்ளது. போன ஜென்மத்தில் நான் சோழனாக ஏதும் பிறந்திருப்பனா என்று தெரியவில்லை. இதுபோன்று வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. மக்கள் அனைவரும் இரவின் நிழலுக்கு ஆஸ்கார் விருது கிடைக்குமா என கேட்கிறார்கள். அதுவே எனக்கு ஆஸ்கார் கிடைத்தது போல் இருப்பதாகவும். இந்தியாவிலிருந்து சென்ற தமிழ் படமான இரவின் நிழலுக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தித்தேன். இதுபோல் படங்கள் தொடர்ந்து செய்வதற்கு, பாராட்டுகளும் உந்துதல்களும்தான் காரணம்.

பொன்னியின் செல்வனுக்கு பிரமாதமான வரவேற்பு கிடைத்துள்ளது. வட இந்தியாவில் பாகுபலி போன்ற படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. பொன்னியின் செல்வன் மூலம் தமிழுக்கும் அந்த பெயர் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget