மேலும் அறிய

பரிதாபங்கள் புகழ் கோபி, சுதாகரின் காமெடி திருவிழா; நாளை மறுநாள் ரிலீஸ் ஆகும் கோடியில் இருவர் வெப் சீரிஸ்

யூடுயூப் காமெடி மற்றும் சமூக பிரச்னைகளை நையாண்டி செய்யும் வீடியோக்கள் மூலம் தமிழகம் முழுக்க பிரபலமான கோபி மற்றும் சுதாகர் வென் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளனர்.

யூடுயூப் காமெடி மற்றும் சமூக பிரச்னைகளை நையாண்டி செய்யும் வீடியோக்கள் மூலம் தமிழகம் முழுக்க பிரபலமான கோபி மற்றும் சுதாகர், முதல்முறையாக தங்கள் களத்திலிருந்து மாறுபட்டு, ஒரு கலக்கலான, முழுமையான வெப் சீரிஸில் நடித்துள்ளனர்.Do. Creative Labs  தயாரிப்பில், பரிதாபங்கள் புரடக்சன்ஸ் மற்றும்  Scaler  நிறுவனம் இணைந்து வழங்க, பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ள வெப் சீரியஸை, இயக்குநர் ஷாகித் ஆனந்த் இயக்கவுள்ளார்.  ஸ்டார்ட் அப் துறையின் பின்னணியில் உருவாகியிருக்கும் காமெடி டிராமா சீரிஸ் ‘கோடியில் இருவர்’. வரும் பிப்ரவரி 25 முதல் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் இந்த சீரிஸ் ஒளிபரப்பாகவுள்ளது.  

கோடியில் இருவர் சீரிஸின் டிரெய்லர் வெளியான நிலையில், ரசிகர்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இணையம் முழுக்க வைரலாக பரவி வரும் இந்த டிரெய்லர் யூடுயூப் தளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

யூடுயூப் காமெடி மற்றும் சமூக பிரச்னைகளை நையாண்டி செய்யும் வீடியோக்கள் மூலம் தமிழகம் முழுக்க பிரபலமான கோபி மற்றும் சுதாகர், முதல்முறையாக தங்கள் களத்திலிருந்து மாறுபட்டு, ஒரு கலக்கலான, முழுமையான வெப் சீரிஸில் நடித்துள்ளனர். இந்த சீரிஸ் பரபரப்பான திரைக்கதையில், உயர்தர தொழில்நுட்ப அம்சங்களுடன், லைவ் லொகேஷன்களில் படமாக்கப்பட்டுள்ளது. 

படத்தின் கதை என்ன? 

கிராமத்தில் வாழும் இரு இளைஞர்கள் கிராம வாழ்வின் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க பெங்களூர் பயணித்து அங்கு ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி ஆரம்பிக்க முனைகிறார்கள். அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தான் இந்த சீரிஸின் கதை. ஐடி ஊழியர்கள், ஸ்டார்ட் அப் துவங்க ஆசைப்படும் இளைஞர்கள் என இன்றைய தலைமுறையினர் தங்கள் வாழ்வோடு எளிதில் தொடர்பு படுத்திக்கொள்ளும் வகையிலான திரைக்கதையுடன்,  நகைச்சுவை கலந்து, அனைவருக்கும் பிடிக்கும் வண்ணம், கலக்கலான சீரிஸாக இந்த சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது. 

ஸ்டார்ட் அப் துறை பற்றி வரும் பல தொடர்கள் போல அல்லாமல், அந்த துறையின் பின்னணியை முழுக்க முழுக்க உண்மைக்கு நெருக்கமாகச் சொல்லும் வகையில், மிகுந்த ஆராய்ச்சிகள் செய்து, அத்துறை வல்லுநர்களின் கருத்துக்களை கேட்டறிந்து, இந்த சீரிஸின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது. 

தங்கள் களத்திலிருந்து மாறுபட்டு ஒரு முழுமையான சிரீஸில் நடித்திருக்கும் கோபி, சுதாகர் தங்கள் முத்திரை காமெடியில் ரசிகர்களை மகிழ்விப்பார்கள் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

இதுவரையிலும் பெரிய ஓடிடி தளங்கள் மட்டுமே முயற்சித்து வரும் தரத்தில், முதல் முறையாக யூடுயூப் தளத்திற்காக உட்சகட்ட தரத்தில், இந்த “கோடியில் இருவர்” வெப் சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது என படக்குழு தெர்வித்துள்ளது. 

இந்த சீரிஸில் கோபி, சுதாகர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க,  அஜய் ரத்தினம், டிராவிட் செல்வம், செல்லா, விவேக் RV, நித்யஸ்ரீ, ராம்குமார் அண்ணாச்சி, ஆல்பர்ட் அஜய், அஸ்வத் போபோ, அர்ஜுன் மனோகர் (ஓர்ஜுன்), வெட்டிபையன் வெங்கட் & நிறைமதி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். 

பெங்களூருவில் பல JordIndian வீடியோக்களை இயக்கிய ஷாகித் ஆனந்த் இந்த சீரிஸினை இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் ஆஃப்ரோ இந்த சீரீஸ் டைட்டில் பாடலுக்கு இசையமைத்துள்ளார். 

போரிஸ் கென்னத் & ரோஹித் சுப்ரமணியன், டானில்லா கொரேயா, சாஹித் ஆனந்த் ஆகியோர் இணைந்து இந்த சீரிஸிக்கு கதை எழுதியுள்ளனர். ரோஹித் சுப்ரமணியன் & போரிஸ் கென்னத் ஆகியோர் வசனங்கள் எழுதியுள்ளனர்.

Do. Creative Labs பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த சீரிஸை, பரிதாபங்கள் புரடக்சன்ஸ் மற்றும்  Scaler  இணைந்து  வழங்குகிறது. ஆனந்த் அகல்வாடி, போரிஸ் கென்னத், ரோஹித் சுப்ரமணியன், டான்னிலா கொரேயா, சாஹித் ஆனந்த் ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமாPriyanka Gandhi Palestine bag : Shankar Jiwal Daughter : தமிழ்நாடு DGP-யின் மகள்..ஜெயம் ரவி ஹீரோயின்!யார் இந்த தவ்தி ஜிவால்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
Embed widget