Adiyaathi Song: மஜா பண்ணிய யுவன் - அனிருத் கூட்டணி .. ஆட்டம் போடவைக்கும் ‘அடியாத்தி’ பாடல்..!
Adiyaathi Promo Song: பரம்பொருள் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் அனிருத் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.
Adiyaathi Promo Song: பரம்பொருள் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் அனிருத் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் முன்னணி இசையமைப்பாளர்கள் இசையமைக்கும் பெரும்பாலான படங்களில் அனிருத் குரலில் பாடல் இடம்பெற்றுவிடுகிறது. பரம்பொருள் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் அனிருத் அவருடன் இணைந்து அடியாத்தி என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் படத்தின் ப்ரோமோ பாடலாக தற்போது வெளிவந்துள்ளது. இந்த ப்ரோமோ பாடலை ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே அனிருத் யுவன் சங்கர் ராஜா இசையில் பாடவுள்ளது குறித்து இருவரும் இணைந்து ப்ரோமோ ஒன்றை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த பாடலும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு ”அடியாத்தி” பாடல் வெளியானது. இந்த பாடலில் யுவன் சங்கர் ராஜா, அனிருத், சரத்குமார், அமிதாஷ் மற்றும் நடனக் கலைஞர்கள் இடம் பெற்றுள்ளனர். ஒரு கலர்ஃபுல்லான பாடலாக இது அமைந்துள்ளது.
It is fun seeing @thisisysr and @anirudhofficial together! Happy to launch #Adiyaathi promo video☺️🎉https://t.co/mQpgVx4g4l
— A.R.Rahman (@arrahman) August 8, 2023
congrats and best wishes to @realsarathkumar, @amitashpradhan and the whole #Paramporulmovie team❤✨@kashmira_9 @aravind275 @dop_harish…
பாடலாசிரியர் சினேகன் எழுதியுள்ள இந்த பாடல் பணம் வாழ்க்கைக்கு முக்கியமில்லை மன அமைதி தான் முக்கியம் என்பதை உணர்த்தும் பாடலாக அமைந்துள்ளது. குறிப்பாக “ மூனு வேலை பசி எடுத்தால் நோயில்லாத தேகம்.. படுத்ததும் உறக்கம் வந்தால் வாழ்க்கை உனக்கு யோகம்.. ஆடும் வரையில் இந்த மேடை உனக்குடா.. அம்மனமான வாழ்வில் வேடம் எதுக்குடா” என்ற வரிகள் கவனம் பெறுகின்றன.
அனிருத் யுவன் கூட்டணி
ஏற்கனவே அனிருத் இசையில் யுவன் சங்கர் ராஜா பாடி மாஸ்டர் படத்தில் ஒரு பாடல் இடம் பெற்று அனைவரது மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. ”அந்த கண்ண பாத்தாக்கா லவ்வு தானா வாராதா” என்ற பாடல் இன்று வரை யுவன் சங்கர் ராஜா குரலுக்காகவே பாடல் கேட்கும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் பரம்பொருள் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் அனிருத் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பாடியுள்ளார்.